இந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற மண்டே நைட் ரா நிகழ்ச்சியில் ரோமன் ரெய்ங்ஸ் WWE அரங்கத்திற்கு திரும்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டு சிறிது காலம் WWE-விலிருந்து ஒதுங்கியிருந்த ரோமன், நோயை எதிர்கொண்டு WWE-க்கு திரும்ப உள்ளார். கடந்த நான்கு மாத காலமாக ஓய்வில் இருந்த ரோமன் தற்போது திரும்பியிருப்பது சரிவில் இருந்த WWE நிகழ்ச்சிகள் மீண்டெழும் எனக் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடந்த ரா நிகழ்ச்சியில் தனது யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை துறந்தார் ரோமன் ரெய்ங்ஸ்.
எனவே திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நோயிலிருந்து மீண்டு பூரண குணம் பெறுவதற்காக போராடி வருவதாக ரோமன் தெரிவித்திருந்தார். மேலும் தனது சிக்னேச்சர் பினிஷர்களை பாபி லாஷ்லி மற்றும் ட்ரிவ் மக்என்டயர்-க்கு எதிராக பயன்படுத்தி தனது உடல்நிலை குறித்து எழுந்த சந்தேகங்களை தீர்த்துள்ளார் ரோமன்.
கடந்த வாரம் வரையிலும் ரோமன் ரஸில்மேனியாவில் பங்கேற்க மாட்டார் என்று பலர் எண்ணினர், ஆனால் ரா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதன் மூலம் முழு உடற்தகுதியுடன் ரஸில்மேனியா போட்டிகளில் பங்கேற்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
WWE-இன் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரோமன் ரெய்ங்ஸை ஒரு முன்னணி வீரருடன் களம் காண வைக்க முனைப்புடன் இருக்கிறது WWE நிர்வாகம்.
எனவே கீழ்வரும் தொகுப்பில், ரோமனுக்கு அமைக்கப்படும் மூன்று சாத்தியமான போட்டிகளை பற்றி இங்கு காண்போம்.
#3. ப்ராக் லெஸ்னர் VS செக் ரால்லின்ஸ் VS ரோமன் ரெய்ஙஸ் (யுனிவர்சல் சாம்பியன்ஷிப் போட்டி)

ரோமன் ரெய்ஙஸின் திரும்புதலுக்கு ஏற்ற போட்டியாக இப்போட்டி அமையும். இதுவரை ரோமன் யுனிவர்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தோற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யுனிவர்சல் சாம்பியன்ஷிப் டைட்டிலுக்கான போட்டியை WWE ஏற்கனவே அறிவித்துவிட்டது. இவ்வருடம் நடைபெற்ற ராயல் ரம்பிள் போட்டியில் வெற்றி பெற்ற செத் ரால்லின்ஸ் ப்ராக் லெஸ்னருக்கு எதிராக மோத உள்ளார். ஆனால் போட்டி இன்னும் நடக்காத பட்சத்தில் இறுதியில் கதைகளத்தை WWE மாற்றி அமைத்தாலும் அமைக்கக்கூடும்.
அவ்வாறு ரோமன் ரெய்ங்ஸை யுனிவர்சல் டைட்டில்லுக்கான ரஸில்மேனியா போட்டியில் களம் காண வைத்தால் ரஸில்மேனியா 31ல் நடந்தது போலவே நடக்க வாய்ப்புள்ளது.
ரஸில்மேனியா - 31ல் ப்ராக் லெஸ்னருக்கு எதிராக களம் கண்டிருந்தார் ரோமன். ஆனால் இப்போட்டி முடியும் தருவாயில், செத் ரால்லின்ஸ் எதிர்மாறாக அரங்கத்திற்குள் நுழைந்து தாக்க முற்பட்டதால் ட்ரிபிள் திரேட் போட்டியாக இப்போட்டி மாற்றப்பட்டது.
எனவே, மூன்று சூப்பர் ஸ்டார்களை கொண்டு போட்டி அமைக்கப்பட்டால் அரங்கத்தில் அனல் பறக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
#2. ரோமன் ரெய்ங்ஸ் vs டீன் அம்புரோஸ்

இந்த வாரம் நடைபெற்ற ரா நிகழ்ச்சியின் மூலம் ஷிய்ல்டு அணி ஒன்றிணைவார்கள் என்று தெரிகிறது. கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொண்டிருந்த டீன் ஆம்புரோஸை செத் ரால்லின்ஸ் மற்றும் ரோமன் காப்பாற்றினர். எனவே இந்நிகழ்வின் மூலம் ஷிய்ல்டு அணி ஒன்றிணைய கூடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
மேலும் எதிர்வரும் பாஸ்ட்லெனில் ஷியில்டு மும்மூர்த்திகள், லாஷ்லி, மக்என்டயர் மற்றும் பாரேன் கார்பினுக்கு எதிராக களம் காணுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாஸ்ட்லென் முடிந்த பிறகு, ரோமனுடன் கைகலப்பு ஏற்பட்டு ரஸில்மேனியா 35ல் ஒருவருக்கொருவர் களம் காணும் வகையில் போட்டி அமைக்கப்படலாம். மேலும் கடந்த சில மாதங்களாகவே ஷியில்டு அணியை கொச்சைப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்தார் டீன் ஆம்புரோஸ். எனவே ஆம்புரோஸுக்கு பாடம் புகட்டும் நோக்கத்தில் ரோமன் ஆம்புரோஸுக்கு எதிராக செயல்படலாம்.
ரஸில்மேனியாவுக்கு பிறகு ஆம்புரோஸ் WWE-யை விட்டு விலகுவதால், இப்படிப்பட்ட போட்டியில் ஆம்புரோஸ் வெற்றி பெற்றால் சிறப்பான பிரியாவிடையாக இஃது அமையும்.
#1. ரோமன் ரெய்ங்ஸ் VS ஜான் ஸினா

WWE- வின் அடையாளமாக விளங்குபவர்கள் ரோமன் ரெய்ங்ஸ் மற்றும் ஜான் ஸினா. இவ்விருவரும் ஒருவருக்கொருவர் எதிராக ஒரே ஒரு பே பர் வியூ போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற "நோ மேர்சி" போட்டியில் ஜான் ஸினாவை வீழ்த்தியிருந்தார் ரோமன்.
ரசிகர்களின் ஆரவாரத்துடன் WWE-க்கு திரும்பிய ரோமன் ரெய்ங்ஸ் இதுவரை இல்லாத ரசிகர்களின் அரவணைப்பில் நனைந்து வருகிறார். கடந்த நான்கு வருடங்களாக ரஸில்மேனியா போட்டிகளில் ரோமன் பங்கேற்றுள்ளதால் ரோமனை ரசிகர்கள் இவ்வருட ரஸில்மேனியாவிலும் களம் காண விரும்புவர்.
ஜான் ஸினா தற்பொழுது ஹாலிவுட்டில் பிஸியாக வலம் வருகிறார், எனவே WWE-விற்கு ஸினா திரும்பும் பட்சத்தில் அவர் விட்டுச் சென்ற அணுகுமுறையே பெரிய களமான ரஸில்மேனியாவில் வெளிக்கொணரும் வகையில் போட்டி அமைக்கப்படலாம்.
ஜான் ஸினாவின் ரசிகர்கள் ஸினாவை பழைய ஸினாவாக பார்க்க விரும்புகின்றனர், எனவே இப்போட்டியானது சிறந்த கம்பேக்காக ஸினாவிற்கு அமையப்பெறலாம்.