வழக்கத்திற்கு மாறாக, WWE நிர்வாகம் ரஸில்மேனியாவின் முக்கிய போட்டியாக WWE ரா உமன்ஸ் டைட்டில் ட்ரிபிள் திரேட் போட்டியை விளம்பரப்படுத்திவருகிறது. பெண்களுக்கான போட்டியை, ஆண்களின் போட்டியை விட WWE முன்னிலைப்படுத்துவது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்வரும் ரஸில்மேனியா-35ல் "தி ஆர்கிடேக்ட்" எனப்படும் செத் ரால்லின்ஸை "தி பீஸ்ட்" ப்ராக் லெஸ்னர் எதிர்கொள்ள உள்ளார்.
கடந்த காலங்களில் ப்ராக் லெஸ்னர், ரால்லின்ஸின் நண்பர்களான டீன் ஆம்புரோஸ் மற்றும் ரோமன் ரெய்ங்ஸை ரஸில்மேனியாவில் எளிதாக வீழ்த்தி வெற்றியை சுவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே ரஸில்மேனியாவில், ஷியில்டு அணியை சேர்ந்த ரால்லின்ஸ் ப்ராக் லெஸ்னரின் இன்னொரு ஷியில்டை சேர்ந்த இரையாக மாறுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எனவே இப்போட்டியின் மூன்று சாத்தியமான முடிவுகளைப் பற்றி இத்தொகுப்பு ஆராய்கிறது !
#3. பவுல் ஹிமேன் ப்ராக் லெஸ்னருக்கு எதிராக மாறுதல்
பவுல் ஹிமேன் மற்றும் ப்ராக் லெஸ்னருக்கிடையே மனக்கசப்பு நிலவுவது நாம் அனைவரும் அறிந்ததே, இதற்கு ஆதாரமாக பல நிகழ்வுகள் அமைந்துள்ளன. ஆனால் மனக்கசப்பு இருந்து வந்தாலும் ப்ராக் லெஸ்னரின் ஆலோசகராக நீடித்து வருகிறார் பவுல் ஹிமேன்.
எனவே எதிர்வரும் ரஸில்மேனியா போட்டியில் தனது மனக் கசப்பை பவுல் ஹிமேன் முழுவதுமாக வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. ப்ராக் லெஸ்னருக்கு அடுத்தபடியாக செத் ரால்லின்ஸ் தான் என்று பவுல் ஹிமேன் நினைத்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்ற வல்லவர் பவுல்.
முடிவு
போட்டியின் இறுதியில், ப்ராக் லெஸ்னர் தனது தனித்துவமான பினிஷரை (F5) பயன்படுத்தவே, செத் ரால்லின்ஸை பின் செய்ய முயல்வார் ப்ராக். அதிர்ச்சியூட்டும் வகையில் பவுல் ஹிமேன் ரெஃப்ரியின் கவனத்தை சிதைக்கும் வகையில் பல யுக்திகளை கையாளவே, எதுவும் புரியாமல் ப்ராக் லெஸ்னர் முழித்துக் கொண்டிருக்கும் வேளையில் ரால்லின்ஸ் தனது பினிஷரான “தி கர்ப் ஸ்டோம்ப்”-பை பயன்படுத்தி யுனிவர்சல் டைட்டிலை கைப்பற்றும் வகையில் போட்டி அமைக்கப்படலாம்.
#2. கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு எதிர்பாராத வகையில் வெற்றியை சுவைப்பார் ரால்லின்ஸ்.
பெரும்பாலும் ரால்லின்ஸ் “தி அலிடிமேட் ஆப்பர்டுனிஸ்ட்” எனப்படும் எட்ஜுடன் ஒப்பிடப்படுவது தற்பொழுது வாடிக்கையாகிவிட்டது. ஏனெனில் ஒரு காலகட்டத்தில் ரஸில்மேனியா போட்டியில் எட்ஜை மரணப் படுக்கைக்கு கொண்டு சென்றார் ப்ராக் லெஸ்னர். எனவே எட்ஜின் நிலைமை தான் ரால்லின்ஸுக்கும் அமையுமென பலர் கணித்து வருகின்றனர்.
முடிவு
இப்போட்டியில், ரால்லின்ஸின் சாற்றை முழுவதுமாக உறிஞ்சும் வகையில் லெஸ்னர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபடுவார், ரால்லின்ஸ் முழுவதுமாக தனது சுயநினைவை இழக்கும் நேரத்தில், F5-யை கொண்டு ரால்லின்ஸை முடித்துவிடலாம் என்று லெஸ்னர் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், எதிர்பாராதவிதமாக ப்ராக்கின் தோடையை இருக்கமாக பிடித்துக் கொண்டு ரால்லின்ஸ் பின்ஃபாலை செய்து வெற்றியை காணும் வகையில் இப்போட்டி அமைக்கப்படலாம்.
#1. ஷியில்டு அணி ஒன்றிணைதல்
கடந்த திங்கட்கிழமை நடந்த WWE ரா நிகழ்ச்சியில், ரோமன் ரெய்ங்ஸ் திரும்பியது WWE நிர்வாகத்துக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதலை அளித்துள்ளது.
ரஸில்மேனியாவுக்கு பின்பு WWE-யை விட்டு டீன் ஆம்புரோஸ் விலகுவார் என கூறப்பட்டு வருகிறது. எனவே அவர் போவதற்கு முன்பாகவே அணியை ஒன்றிணைத்து ரஸில்மேனியாவில் களம் காண வைத்து WWE அழகு பார்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
முடிவு
20 நிமிட நேர்த்தியான ஆட்டத்தின் ஆட்டத்திற்கு பிறகு காலை வைத்து கழுத்தில் தாக்கும் அசைவை மேற்கொள்ள முயற்சிப்பார் ரால்லின்ஸ் , அம்முயற்சி தோல்வி பெறவே ப்ராக் லெஸ்னர் கடுமையான தாக்குதலில் ஈடுபடுவார்.
சுயநினைவை இழக்கும் ரால்லின்ஸ், வெற்றியை ப்ராக் லெஸ்னரிடம் இழக்கம் இறுதி தருவாயில், அரங்கம் அதிரும் வகையில் ஷியில்டு அணியின் பின்னிசை ஒலிக்கிறது. ஷியில்டு அணியின் வாடிக்கையான “ட்ரிபிள் பவர் பாம்”-க் கொண்டு மும்முனைத் தாக்குதலில் ஈடுபடுவே, தோல்வியின் விளிம்பில் செல்லும் ப்ராக் லெஸ்னரை தனது நண்பர்களின் உதவியோடு ரால்லின்ஸ் வெற்றியை காணும் வகையில் போட்டி அமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.