அடுத்த மாதம் 7-ஆம் தேதி நடக்கவிருக்கும் ரஸ்ஸில்மேனியா போட்டியில், செத் ரோல்லின்ஸ் “தி யூனிவேர்சல் சாம்பியன்” என்று அழைக்கப்படும் ப்ராக் லெஸ்னருக்கு எதிராக களம் காண உள்ளார். இந்த போட்டி எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவின் முக்கிய போட்டியாக இருக்குமா என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் WWE-வின் கிரியேட்டிவ் அமைப்பு அமைத்துள்ள கதைகளத்தின் படி இந்த ஆண்டு பெண்களுக்கான போட்டிகளை முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரஸ்ஸில்மேனியா நிகழ்ச்சி அமைக்கப்படும் என்று தெரிகிறது. நிறைவு போட்டியாக பெண்களுக்கான WWE சாம்பியன்ஷிப் டைட்டிலை கைப்பற்றும் வகையில் பெக்கி லிஞ்ச், ரோண்டா ரௌசி மற்றும் சார்லோட்டே பிளேர் ஆகியோர்கிடையேயான போட்டியை கொண்டு ரஸ்ஸில்மேனியா நிறைவுபெறும் என்று தெரிகிறது.
ப்ராக் லெஸ்னர் போட்டியிட்டு பல மாதங்களான நிலையில் அடுத்த திங்கட்கிழமை நடக்கவிருக்கும் ரா நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ப்ராக் வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. தனது போட்டியாளரான செத் ரோல்லின்ஸை கடுமையாக விமர்சிப்பார் எனவும் கூறப்படுகிறது.
செத் ரோல்லின்ஸின் பாதையை வழி மறுக்கும் வகையில் பல சூப்பர் ஸ்டார்கள் முன் வருவர் என்று நான் எண்ணுகிறேன். அவ்வாறு ரோல்லின்ஸ்க்கு இடையூறாக இருக்க போகும் மூன்று சூப்பர் ஸ்டார்களை பற்றி இங்கு காண்போம்.
#1. ரேசர்
ராயல் ரம்பிள் நிகழ்ச்சிக்குப் பிறகு ரேசர் பெரிதாக WWE நிகழ்ச்சிகளில் தென்படவில்லை. "ராயல் ரம்பிள் கிக் ஆப்" நிகழ்ச்சியில் வினோதமான டேக் போட்டியில் இவர் பங்கேற்றார்.
"பட்ஜியன் பிரதர்ஸ்" அணியும் நீண்டகாலமாக WWE போட்டிகளில் பங்கேற்றது இல்லை, காரணம் ரொவனின் காயம். எனவே டேக் அணியில் காயம் இல்லாமல் இருக்கும் சூப்பர் ஸ்டார்களை கொண்டு போட்டிகளை நடத்துவது கடினம். அவ்வாறு போட்டிகள் நடத்தி ஒற்றையர் பிரிவில் அவர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றால் மீண்டும் அவர்களை டேக் அணியில் அமர்த்துவது முடியாத காரியம்.
எனவே ரேசரை WWE டிவியில் கொண்டு வரும் பொருட்டு, செத் ரோல்லின்ஸ்க்கு எதிராக போட்டி அமைக்கப்படலாம். இப்போட்டி நேரத்தை கடத்தவே அமைக்கப்படலாம் என்று தெரிகிறது. அவ்வாறு அமைக்கப்பெற்றால், நிச்சயமாக இப்போட்டியானது ரஸ்ஸில்மேனியாவுக்கு முன்பாக ரோல்லின்ஸ்க்கு இடையூறாக அமையும்.
#2. பிரே வ்யட்
மற்றவர்களைப் போலவே இவரும் WWE-யை விட்டு விலகியே இருக்கிறார். தற்போது நல்ல உடல் தகுதியுடன் WWE போட்டிகளில் பங்குபெற ஆயத்தமாகி வருகிறார். ஆனால் இவருக்கான கதைகளத்தை WWE இன்னும் முடிவு செய்யவில்லை. ரசிகர்கள் பெரும்பாலும் வ்யட் ரஸ்ஸில்மேனியாவுக்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் என்னை பொருத்தவரை ரஸ்ஸில்மேனியாவுக்கு முன்பாக நடைபெறவிருக்கும் ரா நிகழ்ச்சியில் செத் ரோல்லின்ஸ்க்கு எதிராக இவர் களம் காண வேண்டும்.
அவ்வாறு இப்போட்டி சாத்தியமானால், ப்ராக் லெஸ்னருக்கு இந்த கதைகளத்தில் ஒரு முக்கிய பங்கினை கொடுக்கலாம். அதாவது இப் போட்டியின் இறுதியில் ப்ராக் லெஸ்னர் குறுக்கிட்டு செத் ரோல்லின்ஸை தாக்குவது போன்று கதைக்களம் அமைக்கப்படலாம். ப்ராக் லெஸ்னர் தலையிட்டதால் போட்டி டிஸ்-குவாலிபிகேஷன் ஆகலாம்.
இந்த கதை களத்தை சற்றே நீட்டித்தால், ரஸ்ஸில்மேனியாவில் செத் ரோல்லின்ஸ் வெற்றி பெறவே, திடீரென அரங்கத்திற்கு நுழையும் வ்ய்ட் கடந்த போட்டியில் நீ என்னிடம் வெற்றி பெறவில்லை ஆதலால் வென்றிருக்கும் டைட்டிலை வைத்து மறு போட்டிக்கு சண்டையிட வ்யட் அழைப்பு விடுக்கும் வகையில் கதைக்களம் அமைத்தால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
#3. ஜிந்தர் மஹால்
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சர்வைவர் சீரிஸில் தவிர்க்க முடியாத சூப்பர்ஸ்டாராக விளங்கியவர் ஜிந்தர் மஹால். “தி மாடர்ன் டே மஹாராஜா” என அழைக்கப்படும் ஜிந்தர் மஹால் சிறிது காலம் WWE சாம்பியனாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜிந்தர் மஹால் WWE-வில் எந்த பாதையில் பயணிக்கிறார் என்பது கேள்விக்குறியான விஷயமே. கடைசியாக ஜிந்தர் மஹால், ரோமன் ரெய்ங்சுடன் பகை வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.
WWE-க்கு தற்போதைய சூழலில் படி, வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு ஒரு வீரர் தேவை. WWE கிரியேட்டிவ் குழு, ஜிந்தரை இச்சமயத்தில் செத் ரோல்லின்சுடன் களம் காண வைக்கலாம். அப்படி நடந்தால் ரஸ்ஸில்மேனியாவுக்கு முன்பாக இப்போட்டியானது ரோல்லின்சுக்கு பெரிய தடங்களாக இருக்கும்.
செய்தி : வினய் சபாரியா
மொழியாக்கம் : பாஹாமித் அஹமது