“தி லுனாடிக் பிரிஞ்சு” எனப்படும் டீன் ஆம்ப்ரோஸ் WWE மெயின் ரோஸ்டரில் ஷியில்டு அணியில் ஒருவராக கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகமானார். டீன் ஆம்ப்ரோஸ், செத் ரோல்லின்ஸ், ரோமன் ரெய்ங்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய ஷியில்டு அணி அக்காலகட்டத்தில் அபாயகரமாக இருந்தது. திடீரென பார்வையாளர்களின் பகுதியில் தோன்றும் இவர்கள் வளையத்திற்குள் வந்து தாக்கி விட்டு சென்று விடுவார்கள். 2014ஆம் ஆண்டு வரை ஒன்றாக இருந்த ஷியில்டு அணி, செத் ரோல்லின்ஸ் திடீரென வில்லனாக மாறியதால் ஷியில்டு அணி பிளவுபட்டது.
கடந்த வருடம் ஷியில்டு அணி ஒன்று சேர்ந்து ரா டேக் டீம் சாம்பியன்ஷிப் வென்றது. வென்ற பிறகு வளையத்திற்குள் இருந்த ரோல்லின்ஸை தாக்க முற்பட்டார் ஆம்ப்ரோஸ். ஹீல் எனப்படும் தீயவர் கதாபாத்திரத்திற்குள் சென்ற ஆம்ப்ரோஸ் இன்டெர்காண்டினெண்டல் சாம்பியன்ஷிப்பில், ரோல்லின்ஸை எதிர்கொண்டு அவரை வீழ்த்தியும் இருந்தார். கடைசியாக பாஸ்ட்லெனில் ஒன்று சேர்ந்த ஷியில்டு அணி, பரோன் கார்பின், பாபி லாஷ்லி மற்றும் ட்ரயூ மக்என்டயருக்கு எதிராக களம் கண்டு வெற்றியை சுவைத்தது.
WWE-வின் அசைக்க முடியாத டேக் அணியாக ஷியில்டு அணி இருந்து வந்துள்ளது. டீன் ஆம்ப்ரோஸ் WWE-வின் ஒப்பந்தத்தில் திருப்தி அடையாததால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது. ஆதலால் கூடிய சீக்கிரம் WWE-யை விட்டு விலகுவார் எனவும் கூறப்படுகிறது.
WWE, டீன் ஆம்ப்ரோஸை தக்க வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றி தொகுப்பில் காணலாம்.
#3. நல்ல போட்டிகளை அமைத்திட வேண்டும்
டீன் ஆம்ப்ரோஸ் WWE கம்பெனியின் முதன்மையான சூப்பர் ஸ்டார். காயம் காரணமாக WWE போட்டிகளில் இருந்து விலகியிருந்த டீன் ஆம்ப்ரோஸ் கடந்த வருடம் WWE அரங்கத்திற்குள் திரும்பியிருந்தார். முன்பு கிடைக்கப்பெற்ற மரியாதை, திரும்பி வந்த பிறகு கிடைக்கப் பெறவில்லை என்பது அம்ப்ரோஸின் ஆதங்கம். மேலும் WWE, டீன் ஆம்ப்ரோஸுக்கு தனக்கு ஏற்றார்போல் இருக்கும் சூப்பர் ஸ்டார்களுடன் போட்டிகள் அமைத்து விடவில்லை, நடுநிலையில் இருக்கும் சூப்பர் ஸ்டார்களுடனே இவரை புக் செய்திருந்தது.
சமீபகாலகட்டத்தில் ஆம்ப்ரோஸ் தனக்கான பாணியில் சண்டையிட்டாலும், வெற்றிகளை எளிதாகக் பெற முடிவதில்லை. ஆம்ப்ரோஸ் WWE-வில் நல்ல எழுச்சி பெற வாய்ப்புள்ள போதிலும் அதை WWE செய்ய மறுக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
WWE நிர்வாகம் ஆம்ப்ரோஸை மதித்து நல்ல போட்டிகளை அமைத்துக் கொடுத்து, அவர் விரும்பிய கதாபாத்திரத்தை அவருக்கு தந்து ஒப்பந்தத்தை புதுப்பித்தால் ஆம்ப்ரோஸ் WWE-விலிருந்து விலக நேரிடாது.
#2. சம்பளத்தை அதிகப்படுத்துதல்
WWE-வில் என்ன நடந்தாலும் அதற்கு பின்னால் பணம் இருப்பது அனைவரும் அறிந்ததே, ப்ராக் லெஸ்னர் UFC போட்டிகளில் கம்பேக் தேதியை மாற்றிக்கொண்டே இருப்பார், காரணம் WWE-வில் அதிக பணம் கிடைக்கப் பெறுவதால் இந்த வாய்ப்பை அவர் தவற விடுவதில்லை.
WWE-வின் கிறிஸ் ஜெரிக்கோ சமீபத்தில் AEW போட்டிகளுக்கு மாற்றம் கண்டார். AEW-வில் அதிக பணம் கொடுப்பதாக அழைப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார் ஜெரிக்கோ.
ஆம்ப்ரோஸ் கடைசியாக 2016 ஆம் ஆண்டு WWE ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். WWE-வில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் 10 வீரர்களில் இவரும் ஒருவர். அவர் தற்போது விலக நினைப்பதும் சம்பளம் காரணமாகவே என கூறப்படுகிறது. அவரின் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அவருக்கு மதிப்பளித்து சம்பள உயர்வை மேற்கொண்டால் ஆம்ப்ரோஸ் WWE-வில் தொடர்வது உறுதி.
#1. ரஸ்ஸில்மேனியா மெயின் ஈவென்ட்
ரஸ்ஸில்மேனியா என்பது WWE நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய பெ பர் வியூ போட்டிகள். இவ்வகையிலான பிரமாண்ட அரங்கில் களம் காணுவது என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். சொல்லப்போனால் தங்களுது கேரியரில் ஒரு முறையாவது ரஸ்ஸில்மேனியா போட்டியில் களம் காண வேண்டும் என்று இன்றளவும் நிறைய சூப்பர் ஸ்டார்கள் தங்களுக்கான வாய்ப்பைத் தேடி வருகின்றனர்.
ஆனால் ஆம்ப்ரோஸுக்கு போட்டிகள் நிறைவு பெற்று நடக்கும் நிகழ்ச்சிகளில் வாய்ப்பளித்தும், பெரிய போட்டிகளுக்கு நடுவில் நடக்கும் போட்டிகளில் வாய்ப்பளித்தும், WWE அவரை ஏளனம் படுத்துகிறது. ஆம்ப்ரோஸின் ஷியில்டு சகோதரரான ரோமன் ரெய்ங்ஸ் இதுவரை நான்கு முறை ரஸ்ஸில்மேனியாவில் பங்கு பெற்றுள்ளார். அதே போலவே செத் ரோல்லின்ஸும் ரஸ்ஸில்மேனியா 31-ல் களம் கண்டிருந்தார். WWE ஆம்ப்ரோஸை தக்க வைத்துக் கொள்ள நினைத்தால், நடக்கவிருக்கும் ரஸ்ஸில்மேனியா போட்டிகளின் மெயின் ஈவெண்ட்டில் இவரை பங்கு பெறச் செய்தால் அம்ப்ரோஸின் மனசு மாறினாலும் மாறும் !