அனைத்து வகையிலான பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளிலும் நகைச்சுவை உணர்வு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது தொடர்களில் ஷுட்டிங்கின் பொழுது நடந்த காமெடியான தருணங்களை அத்தொடர் முடியும் முன்னர் ஒளிபரப்புகின்றனர். பரோ ரெஸ்லிங்கிலும் தெரிந்தோ தெரியாமலோ அரங்கேறிய பல நகைச்சுவை தருணங்கள் உண்டு.
ஸ்டீவ் ஆஸ்டின் மெக்மேஹன் குடும்பம் மீது பீரை ஊற்றியது, சான்டீனோ மரெல்லா மற்றும் ஷீமசுடைய டீ பார்ட்டி போன்ற தருணங்கள் இன்று நினைத்தாலும் புரோ ரெஸ்லிங் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அவ்வாறு புரோ ரெஸ்லிங் வரலாற்றில் நடந்த மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வுகள் இதோ,
#5 கர்ட் ஆங்கிள் அண்ட் தி மில்க் ட்ரக் ( Kurt Angle and the milk truck )
கர்ட் ஆங்கிளின் புரோ ரெஸ்லிங் வாழ்க்கை சாதனைகள் நிறைந்த ஒன்று. இன்றும் அவர் ரா ஜெனரல் மானேஜர் ஆக ஒரு முக்கிய பதவி வகிக்கிறார்.
"மில்க் - ஓ - மேனியா" என்று அழைக்கப்படும் இந்த சம்பவம் 2001இல் ஆங்கிள் " தி அலையன்ஸை" எதிர்த்து சண்டை போட்டுக் கொண்டிருந்த காலத்தில் நடந்தது.
ரிங்கிற்குள் ஸ்டெபனி மெக்மேஹன் ( Stephanie Mcmahon) ஸ்டோன் கோல்டை புகழ்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென மில்க் ட்ரக்கை ஓட்டிக் கொண்டு ஸ்டேடியத்திற்குள் நுழைந்தார் ஆங்கிள். பின், உள்ளே இருந்த அனைவர் மீதும் பாலைப் பீச்சி அடித்தார். இதைக் கண்டவுடன் ஸ்டேடியத்தில் சிரிப்பலை எழுந்தது. ஆங்கிள் ட்ரக்கின் மீது ஏறி ஆஸ்டினின் பீர் சல்யூட்டை கலாய்த்ததை யாராலும் மறக்க முடியாது.
#4 சைக்கோ சிட் இன்டர்வுயூவில் உளறியது ( Psycho Sid messes up his interview )
ரெஸ்லிங்கில் ஒரு நல்ல ப்ரமோ தர நிறைய பயிற்சித் தேவை. பயிற்சி இருந்தும் கேமரா முன் பேசுவது கடினம். சில சமயங்களில் ரெஸ்லர்கள் ஸ்க்ரிப்டில் இல்லாத விஷயங்களை ப்ரமோ நேரங்களில் உளறி விடுவர். இந்த மாதிரி தன் வாழ்க்கையில் பல முறை உளறி இருக்கிறார் சைக்கோ சிட்.
சைக்கோ சிட்டின் இன் ரிங் திறமை மிகவும் போற்றுதலுக்குரியது. ஆனால், ப்ரமோக்களில் சொதப்புவது அவரின் வழக்கம். அவ்வாறு ஒரு மிகவும் நகைச்சுவையான நிகழ்வு " இன் யுர் ஹவுஸ்" நிகழ்ச்சியின் பொழுது நடந்தது. இன்டர்வியூ லைவ் என்பதை உணராத சைக்கோ சிட் ஜிம் ராஸிடம் "மீண்டும் முதலில் இருந்து இன்டர்வியூ கொடுக்கவா" என்று கேட்டார். ஜிம் ராஸ் புண்ணகையோடு " வீ ஆர் லைவ் " என்று பதிலளித்தார்.
#3 ஐ ஜஸ்ட் கிக்டு ஸ்டான் - ஷான் மைக்கல்ஸ் ( “I just kicked Stan” – Shawn Michaels)
புரோ ரெஸ்லிங் வரலாற்றின் நகைச்சுவையான அணிகளில் டீ ஜெனரேசன் எக்சும் ஒன்று. அதில் குறிப்பாக ஷான் மைக்கல்ஸ் செய்யும் ரகளைகளுக்கு அளவே இல்லை.
2006-இல் சைபர் சண்டே நிகழ்ச்சியில், எரிக் பிஸ்காப் டி எக்ஸ் அணியினரைப் பார்த்து " நீங்கள் ஒன்றும் சர்ச்சைக்குரிய அணியெல்லாம் கிடையாது" என்றார். இதைக் கேட்டு கோபம் அடைந்த மைக்கல்ஸ் அருகில் நின்று கொண்டிருந்த ஸ்டான் எனும் சாதாரணமான வொர்க்கரை சூப்பர் கிக் செய்தார்.
பின், அங்கிருந்த அனைத்து வொர்க்கர்களையும் மைக்கல்ஸ் அடித்து நொறுக்கினார். இதைக் கண்ட ட்ரிபிள் ஹெச் மைக்கல்ஸைப் பார்த்து " இப்பொழுது நீ செய்த காரியம் சர்ச்சைக்குரியதா என்று எனக்கு தெரியாது. ஆனால், மிகவும் சிரிப்பாக இருந்தது" என்று கூறினார்.
#2 மீன் ஜீன் ஓகர்லண்ட் சம்மர் ஸ்லாமில் செய்த காரியம் ( Mean Gene Okerlund’s Summerslam incident )
சம்மர் ஸ்லாம் 1989 முழுவதும் நிறைய நல்ல மேட்ச்களும் , மறக்க முடியாத நிகழ்வுகளும் நடந்தது. அதில் யாராலும் மறக்க முடியாத ஒரு சம்பவம் மீன் ஜீன் ஓகர்லான்டின் இன்டர்வியூ.
ஓகர்லான்ட் ரிக் ரூடை அவரது மேட்சிற்கு முன்னர் இன்டர்வியூ எடுப்பதற்காக தயாராகி கொண்டிருந்தார். அவர் தன் இன்டர்வியூவை தொடங்குவதற்கு முன் அங்கிருந்த சுவரில் இருந்த சம்மர் ஸ்லாம் போர்ட் கீழே விழுந்தது. இதைக் கண்ட ஓகர்லாண்ட் மைக்கில் " f***" என்று கூறினார். உடனே கேமரா பின்னே நின்று கொண்டிருந்த ஜெசி வென்சராவை ஃபோகஸ் செய்தது. ஆக மொத்தம் , இன்டர்வியூவின் இப்பகுதி மிகவும் சிரிப்பாக இருந்தது.
#1 தி ஷாக்மாஸ்டர் ( The Shockmaster )
ஃப்ரெட் ஆட்மன் ( Fred Ottman ) WWE-யில் , நாசுரல் டிஸ்ஆஸ்டர்ஸ் ( Natural disasters)எனும் அணியில் ஒருவராக பல போட்டிகளில் பங்கேற்றவர். பின் அவரை டபுள்யூ சி டபுள்யூ சைன் செய்தது. அவரது டபுள்யூ சி டபுள்யூ அறிமுகம் மிகவும் நகைச்சுவையான ஒன்று.
ஸ்டிங் மற்றும் டேவி பாய் ஸ்மித் , ரிக் ப்லாருடன் ( Ric Flair ) தங்களது சீக்ரெட் பாட்னரைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். ஸ்டிங் திடீரென எழுந்து " எங்கள் பாட்னர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளிப்பார் , ஏனென்றால் அவர் தான் ஷாக் மாஸ்டர்!" என்று கூறினார்.
பின், கேமரா ஷாக் மாஸ்டரை நோக்கி நகர்ந்தது. ஷாக் மாஸ்டரின் உடை மிகவும் சிரிப்பாக இருந்தது. ஸ்க்ரிப்டின் படி அவர் மாஸாக சுவரை உடைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவரோ அந்த இடத்திலேயே வழுக்கி விழுந்து காமெடி பீசாக மாறிவிட்டார். இன்று பார்த்தாலும் இந்த நிகழ்வு மிகவும் காமெடியாக இருக்கும்.