#3 2004 ஆம் ஆண்டு நோ வே அவுட் இல் எடி கர்ரெரோ
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த வீரர்களுள் ஒருவர் எடி கர்ரெரோ. பல வருடங்களுக்கு மேலாக WWE-இல் சண்டையிட்டு வரும் இவர், 20 வருடத்தை கடக்கும் போது தான் உச்சம் அடைந்தார். பிராக் லெஸ்னரை எதிர்த்து இவர் போட்டியிட்ட 30 நிமிடங்களை எந்த ரசிகராலும் மறக்க முடியாது. இறுதியில் இவரின் வெற்றியை இவரின் நீண்ட நாள் நண்பரான கிறிஸ் பெனாய்ட் மற்றும் மனைவி குழந்தையுடன் மேடையிலேயே கண்ணீருடன் கொண்டாடினர். எவ்வளவு உறுதியான மனவலிமை உள்ள ரசிகராக இருந்தாலும் இக்காட்சியை காணும் போது கண்கலங்கும்.
#2 அர்மகெதோனில் ஜெஃப் ஹார்டி 2008
அதிகமாக ரிஸ்க் எடுத்து சண்டையிட கூடிய வீரர்களுள் ஒருவர் ஜெஃப் ஹார்டி. இவரை WWE நிர்வாகம் ஒரு பெரிய நட்சத்திரமாக வளர்த்துவிடவில்லை. 90'களில் WWE பார்த்தவர்களுக்கு தெரியும் இவரின் அருமை. பெரும்பாலும் இரண்டாம் தர வீரர்களுடனே சண்டையிட்டு வந்த ஜெஃப் ஹார்டிக்கு ஸ்மாக்டௌன் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அங்கே இவருக்கும் ட்ரிபிள் ஹச்சுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இவரின் முதல் பெரும் வெற்றி. அர்மகெதோனில் ஜெஃப் ஹார்டி, ட்ரிபிள் ஹச் மற்றும் எட்ஜ் இடையே முத்தரப்பு போட்டி நடைபெற்றது. 15 வருட கடின உழைப்பிற்கு பிறகு எட்ஜை பின் செய்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். ஆனால் இவரின் சந்தோசம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. அடுத்து நடைபெற்ற ராயல் ரம்பில் போட்டியில் சாம்பியன்ஷிப்பை இழந்தார்.
#1 ரெஸ்ஸில்மேனியா 30-ல் டேனியல் பிரையன்
டேனியல் பிரையன், கூட்டத்தில் ஒருவராய் இருந்து பின்பு படிப்படியாக முன்னனி ரஸ்ட்லெர் என்ற அந்தஸ்தை பெற்றவர். தற்போதைய WWE சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு சொந்தக்காரர். ஆனால் நாம் முன்னரே படித்த மாதிரி, இவரிடம் இருந்து பட்டத்தை தட்டிச்செல்ல பின்தொடர்ந்து வருகிறார் கோஃபி கிங்ஸ்டன். போட்டியாளராக இருந்துவிட்டு சில காலங்கள் தி ஆதாரிட்டி (மேனேஜர்) என்ற WWE இன் முக்கிய பொறுப்பில் இருந்தார். ஒரே நாளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் என்ற பெருமை பெற்றவர். ரெஸ்டில்மேனியா 30- இல் ட்ரிபிள் ஹெச்சை வீழ்த்தி சாம்பியன்ஷிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்ற பிரையன், ராண்டி ஆர்ட்டன் மற்றும் படிஸ்டாவை எதிர்கொண்டார்.
70,000 ஆயிரம் ரசிகர்கள் கூடி இருந்த அந்த அரங்கில் அவரின் வெற்றியை தொடர்ந்து அந்த அரங்கமே ஒரு பெரும் விழா போன்று ஜொலித்தது. வர்ணனையாளர் மைக்கல் கோல் இதை பற்றி கூறிய போது "பார்போன் நகரில் ஒரு சரித்திரம் "என்று குறிப்பிட்டார்.