மீண்டும் Smackdown ன் போக்கை ட்ரிபிள் எச் தலைகீழாக மாற்றியதற்கான ஐந்து காரணங்கள்.

Triple H
Triple H

தங்களுடைய லாபத்திற்காகவும், ரசிகர்களின் விருப்பத்திற்காகவும் மீண்டும் ஒருமுறை Smackdown ன் போக்கை ட்ரிபிள் எச் மாற்றியிருக்கிறார். இதோடு மட்டுமல்லாமல் சார்லட் பிளேயரும் தனது நடைமுறையை மாற்றியுள்ளார் என்பது அவர் நடந்து கொள்ளும் விதத்திலும் மற்றவர்களுக்கு கைகொடுக்க மறுப்பதிலுமிருந்து தெரியவருகிறது.

இந்த வாரம் Smackdown ல், பெக்கி லின்ட்ச் மற்றும் சார்லட் ப்ளேயர் இடையேயான வாக்குவாதத்தில் இடையே நுழைந்த ட்ரிபிள் எச் தி குயின்-யை ரிங்கிலிருந்து எதுவும் பேசாமல் வெளியேறச் சொன்னார். மேலும் அவரது பார்வை முழுமையாக பெக்கி லின்ட்ச் பக்கம் சென்றது. இதற்கு முன் பெக்கி லின்ட்ச் ரசிகர்களின் மத்தியில் இருந்து ரிங்கிற்குள் நுழைந்தார். பெக்கி லின்ட்ச் இந்த விவாதம் முழுவதும் தன்னிடம் எந்த ஒரு நடுவரையும் நெருங்க விடவில்லை, இதை கவனித்த ட்ரிபிள் எச் தனது அதிகாரத்தை முழுவதும் பயன்படுத்தி பெக்கி லின்ட்ச் ஐ திட்டி அவருடைய கோபத்தை அதிகரித்துக் கொண்டே சென்றார். தனது மனைவியை பற்றி விசாரித்த பெக்கி லின்ட்சை, அவரது காயம் பொய்யானது என்றும், அவர் ரான்டா ரூஸிக்கு பயப்படுவதாகவும் குறை கூறினார்.

ட்ரிபிள் எச் ஏன் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார், இதற்கான 5 காரணங்களை பார்க்கலாம்.

#5. பெக்கி லின்ட்ச் சின் தரத்தை மேலும் உயரத்திற்கு அல்லது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல.

WWE
WWE

WWE பெக்கி லின்ட்ச் மற்றும் அவர் சார்ந்த நிகழ்ச்சிகளின் மீது சமீபகாலமாக அதிகமாக முதலீடு செய்து வருகிறது. காரணம் கடந்த வருடம் நடைபெற்ற சம்மர் ஸ்லாமிற்குப் பிறகு பெக்கி லின்ட்ச் ராக்கெட் வேகத்தில் முன்னுக்கு வந்து விட்டார். இதனால் அவரை இன்னும் அடிமட்ட ஸ்டாராக வைத்திருப்பது அவர்களுக்கு நஷ்டமே. ஆனால் அவரைவிட பெரிய நட்சத்திரங்கள் பலர் அவருக்கு பின்னால் இருந்ததால் பெக்கி லின்ட்ச் சை ஒரு அடிமட்ட ஸ்டாராகவே சில காலம் வைத்திருக்கலாம் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் பெக்கியின் முன்னேற்றம் அவர்கள் நினைத்து இருந்ததைவிட பல மடங்கு வேகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக, ஜான் ஸீனாவிடம் நேருக்கு நேர் நின்றது மற்றும் ரான்டா ரூஸி, ஸ்டபேனி மக்மஹோன், தற்போது ட்ரிபிள் எச் ஆகியோரை தொடர்ச்சியாக ஒரே மாதத்தில் எதிர்த்திருக்கிறார். இதன்மூலமே அவரது தரத்தை உயர்த்த ட்ரிபிள் எச் திட்டமிட்டிருக்கிறார்.

#4. ரசிகர்களுக்கு எதிராக அல்லது அவர்களுக்கு தங்களது அதிகாரத்தை நிரூபிக்க.

WWE
WWE

இந்த தலைப்பு படிப்பவர்கள் புரிந்து கொள்ளும் விதத்திலேயே அமையும். காரணம், WWE ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு ஸ்டாரை கொண்டாடும்போது அவர்கள் பக்கமே ரசிகர்கள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக தங்களது அதிகாரத்தை ட்ரிபிள் எச் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்துவர். தற்போது ரசிகர்கள் பெக்கி லின்ட்ச் பக்கம் இருப்பதை உணர்ந்துள்ள ட்ரிபிள் எச், லின்ட்சின் அடுத்த கட்ட திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கலாம். மற்றொரு பக்கம் நாம் காலம் காலமாக பார்ப்பதுதான். வருடத்திற்கு ஒருமுறை தங்களது அதிகாரத்தின் பலத்தை ட்ரிபிள் எச் மற்றும் அவரது குடும்பத்தினர் ரசிகர்களுக்கு உணர்த்துவர் எப்படி என்றால் தற்போது பெக்கி லின்ட்ச் ற்கு நடப்பதை கூறலாம் எது எப்படியிருந்தாலும் இந்த வருடத்திற்கான Wrestlemania பெக்கி லின்ட்ச் உடையது என்பது சந்தேகமில்லை.

#3. டீன் ஆம்ரோஸ் ஐ மீண்டும் நல்லவராக மாற்ற.

TRIPLE H AND AMBROSE
TRIPLE H AND AMBROSE

இந்த வாரம் நடைபெற்ற ராவில் அலெக்ஸா பிலிஸின் நிகழ்ச்சியின் இடையே புகுந்த டீன் ஆம்ரோஸ் சற்று நாள் மாறி இருந்த தனது கேரக்டரில் இருந்து மாறாக நடந்து கொண்டார். மேலும் பேசிய ஆம்ரோஸ் பழையபடி நகைச்சுவையாக பேசினார். இந்த பேச்சின் நடுவே ட்ரிபிள் எச் ஐயும் சற்று கிண்டல் செய்தார். இந்த நிகழ்வில் இருந்து மீண்டும் டீன் ஆம்ரோஸ் ஐ பழையபடி மாற்ற தி கேம் எண்ணியிருக்கலாம் அவருடைய காண்ட்ராக்ட்டை பொருத்து இந்த மாற்றம் தொடரலாம் அல்லது தற்போது இருப்பதுபோல் வில்லனாகவே இருக்கலாம்.

#2. தனது மனைவிக்கு அங்கீகாரம் அளிக்க.

TRIPLE H
TRIPLE H

ஸ்டெபெனி மக்மஹோன் இல்லையென்றால் ட்ரிபிள் எச் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போயிருப்பார் என்பதை மறுக்க முடியாது. அவருக்கான மரியாதையை அல்லது இடத்தை அவ்வப்போது ட்ரிபிள் எச் நிலைநிறுத்துவார். அது போலவே தான் இதுவும். இருந்தாலும் இந்த வார ராவில் ஸ்டபேனி மக்மஹோன் சற்று நல்லவராகவே நடந்துகொண்டார். காரணம் அவர் பெக்கி லின்ட்சை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு சண்டைக்கு அனுமதிப்பதாக கூறினார். இதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் பெக்கி தன்னை தாக்குகையில் தற்காத்துக் கொள்வதற்காகவே அவரை எட்டி உதைத்தார் என்பது நாம் அறிந்ததே. இருந்தாலும் அவர் செய்தது லின்ட்ச் ரசிகர்களுக்கு கோபத்தையும் வெறுப்பையும் உண்டாகியிருக்கும். இதனை சரிசெய்யவதற்காகவும் இந்த மாற்றம் இருக்கலாம்.

#1. ரான்டா ரூஸி அல்லது சார்லட் ப்ளேயரை சீரமைக்க.

TRIPLE H
TRIPLE H

இந்த வார ராவில், ட்ரிபிள் எச், சார்லட் ப்ளேயரை ரிங்கிற்குள் இருந்து வெளியேறச் சொன்னார். அப்போது இதற்கும் உனக்கும் சம்பந்தமில்லை. மேலும் உன்னுடைய வழியைப் பார்த்து போ என்று கூறினார் ட்ரிபிள் எச். இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது என்னவென்றால், சார்லட் ப்ளேயர் ராவிற்கு சென்று ரான்டா ரூஸியுடன் சண்டையிட தயாராவதற்கான அறிவுரையாக இருக்கலாம் அல்லது சார்லட் ப்ளேயர், ட்ரிபிள் எச் மற்றும் அவரது மனைவியின் உதவியுடன் நேரடியாக Wrestlemania மெயின் ஈவன்டில் கலந்து கொள்ளலாம். காரணம் சார்லட் ப்ளேயர் wwe ன் கோல்டன் கேர்ள் ஆவார். ரான்டா ரூஸி வந்து ஒரு வருடம் தான் ஆனாலும் அவர் வந்த பிறகு WWE-ன் தரம் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது என்பதை யாராலும் முடியாது. இந்த இரண்டு பெரிய பெண் வீராங்கனைகளில் யாரேனும் ஒருவரை WWE-ன் முன்னனி முகமாக சீரமைக்க வேண்டும். ஆனால் அது யாரென்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.