#3. டீன் ஆம்ரோஸ் ஐ மீண்டும் நல்லவராக மாற்ற.
இந்த வாரம் நடைபெற்ற ராவில் அலெக்ஸா பிலிஸின் நிகழ்ச்சியின் இடையே புகுந்த டீன் ஆம்ரோஸ் சற்று நாள் மாறி இருந்த தனது கேரக்டரில் இருந்து மாறாக நடந்து கொண்டார். மேலும் பேசிய ஆம்ரோஸ் பழையபடி நகைச்சுவையாக பேசினார். இந்த பேச்சின் நடுவே ட்ரிபிள் எச் ஐயும் சற்று கிண்டல் செய்தார். இந்த நிகழ்வில் இருந்து மீண்டும் டீன் ஆம்ரோஸ் ஐ பழையபடி மாற்ற தி கேம் எண்ணியிருக்கலாம் அவருடைய காண்ட்ராக்ட்டை பொருத்து இந்த மாற்றம் தொடரலாம் அல்லது தற்போது இருப்பதுபோல் வில்லனாகவே இருக்கலாம்.
#2. தனது மனைவிக்கு அங்கீகாரம் அளிக்க.
ஸ்டெபெனி மக்மஹோன் இல்லையென்றால் ட்ரிபிள் எச் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போயிருப்பார் என்பதை மறுக்க முடியாது. அவருக்கான மரியாதையை அல்லது இடத்தை அவ்வப்போது ட்ரிபிள் எச் நிலைநிறுத்துவார். அது போலவே தான் இதுவும். இருந்தாலும் இந்த வார ராவில் ஸ்டபேனி மக்மஹோன் சற்று நல்லவராகவே நடந்துகொண்டார். காரணம் அவர் பெக்கி லின்ட்சை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு சண்டைக்கு அனுமதிப்பதாக கூறினார். இதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் பெக்கி தன்னை தாக்குகையில் தற்காத்துக் கொள்வதற்காகவே அவரை எட்டி உதைத்தார் என்பது நாம் அறிந்ததே. இருந்தாலும் அவர் செய்தது லின்ட்ச் ரசிகர்களுக்கு கோபத்தையும் வெறுப்பையும் உண்டாகியிருக்கும். இதனை சரிசெய்யவதற்காகவும் இந்த மாற்றம் இருக்கலாம்.
#1. ரான்டா ரூஸி அல்லது சார்லட் ப்ளேயரை சீரமைக்க.
இந்த வார ராவில், ட்ரிபிள் எச், சார்லட் ப்ளேயரை ரிங்கிற்குள் இருந்து வெளியேறச் சொன்னார். அப்போது இதற்கும் உனக்கும் சம்பந்தமில்லை. மேலும் உன்னுடைய வழியைப் பார்த்து போ என்று கூறினார் ட்ரிபிள் எச். இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது என்னவென்றால், சார்லட் ப்ளேயர் ராவிற்கு சென்று ரான்டா ரூஸியுடன் சண்டையிட தயாராவதற்கான அறிவுரையாக இருக்கலாம் அல்லது சார்லட் ப்ளேயர், ட்ரிபிள் எச் மற்றும் அவரது மனைவியின் உதவியுடன் நேரடியாக Wrestlemania மெயின் ஈவன்டில் கலந்து கொள்ளலாம். காரணம் சார்லட் ப்ளேயர் wwe ன் கோல்டன் கேர்ள் ஆவார். ரான்டா ரூஸி வந்து ஒரு வருடம் தான் ஆனாலும் அவர் வந்த பிறகு WWE-ன் தரம் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது என்பதை யாராலும் முடியாது. இந்த இரண்டு பெரிய பெண் வீராங்கனைகளில் யாரேனும் ஒருவரை WWE-ன் முன்னனி முகமாக சீரமைக்க வேண்டும். ஆனால் அது யாரென்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.