WWE நியூஸ்: ஜானி கார்கேனோவை ஆபத்தான விஷயங்களை NXT யில் செய்யக் கட்டளையிட்ட ட்ரிபிள் எச்.

Johnny Gargano

இது எதைப் பற்றிய கட்டுரை:

'தி கேம்' என்றழைக்கப்படும் ட்ரிபிள் எச் NXT சூப்பர் ஸ்டாரான ஜானி கார்கேனோவிற்கு ஒரு புதிய கதாபாத்திர தன்மையைக் கண்டறிந்து அதன் மூலம் மற்ற NXT சூப்பர் ஸ்டார்களுக்கு எந்த வகையில் ஆபத்தான போட்டியைக் கொடுக்கலாம் என்ற விஷயத்தைக் காலம் தாழ்த்தாமல் செய்துள்ளார். இந்த முயற்சி NXT ன் பார்வையாளர்களை மேலும் சுவாரசியப்படுத்தும் நோக்கில் இருக்கும் எனக் கருதப்படுகிறது .

இதைப் பற்றி உங்களுக்கு ஒருவேளை தெரியாமல் இருந்திருந்தால், தெரிந்துகொள்ளுங்கள் !

Triple H

சில நாட்களுக்கு முன்பு அலைஸ்டர் ப்ளாக்(NXT சூப்பர் ஸ்டார்) WWE க்கு வெளியே அடையாளம் தெரியாத நபரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கிட்டத்தட்ட பாதி மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை யார் தாக்கினார் என்பது சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற CCTV காட்சியிலும் தெளிவாகத் தெரியவில்லை. அனைவரும் இதைச் செய்தது ஜானி தான் என்று உறுதியாகக் கூற, ஜானி மட்டும் இதற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறிவந்தார்.

அதன் பிறகு அலைஸ்டர் ப்ளாக் கிடமும், வில்லியம் ரீகலிடமும்(NXT ன் தற்போதைய ஜெனரல் மேனேஜர்) மற்றும் WWE ரசிகர்கள் அனைவரிடமும் தான்தான் தாக்கியதாகத் தைரியத்துடன் ஒப்புக்கொண்டார் ஜானி கார்கேனோ. இது எதற்காக என்றால், அலைஸ்டர் ப்ளாக்கை NXT சாம்பியன்ஷிப் க்கான போட்டியிலிருந்து நீக்கிவிட்டு தான் மீண்டும் ஒருமுறை அந்தப் போட்டியில் டொமாஷோ கியாம்ப்பாவுடன்(மற்றுமொரு NXT வீரர்) மோதுவதற்காகத்தான். இவர் தன்னுடைய கேரக்டரை மொத்தமாக ரிங்கிற்குள்ளும் சரி வெளியேவும் சரி மிகவும் ஆபத்தானவராக மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஜானி கார்கேனோவின் ஆசை நிறைவேறவில்லை, உடல்நிலை சரியாகி மீண்டும் NXT க்குள் வந்த ப்ளாக் ஜானியின் சாம்பியன்ஷிப் போட்டியைக் கபளீகரம் செய்தார். இந்தச் சம்பவத்திற்கு பிறகு இருவரும் WWE க்குள் எங்குப் பார்த்துக்கொண்டாலும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொள்கின்றனர் .

இதனை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஜானி கார்கேனோ அடுத்து நடைபெற உள்ள NXT டேக்ஓவர்: வார் கேம்ஸ் II ல் அலைஸ்டர் ப்ளாக்கை எதிர்கொள்கிறார். இந்தச் சண்டையில் ஜானி வெற்றி பெறாமல் போனால் ஒருவரால் அல்ல இரண்டு பேரால் பாதிப்புக்குள்ளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதையின் மையக் கரு!

இதைப் பற்றி, WWE ன் போஸ்ட் ஷோ இன்டர்வியூவின் இடையே கேட்கப்பட்டபோது, WWE-ன் சிஓஓ வான, 'தி கேம்' என்றழைக்கப்படும் ட்ரிபிள் எச் (கிங் ஆப் தி ரிங்ஸ்) மிகவும் தெளிவாகக் கூறியதாவது, "இனிவரும் காலங்களில் ஜானி கார்கேனோ மற்ற NXT வீரர்களுக்கு மிகவும் ஆபத்தானவராக இருப்பார், பல்வேறு நிகழ்வுகளுக்குப் பிறகு தன்னை மிகவும் ஆபத்தானவராகவும், கணிக்கமுடியாத மனிதராகவும் முழுமையாக மாற்றியிருக்கிறார் ஜானி கார்கேனோ" என்றார். அவர் மேலும் கூறுகையில், "ஜானி கார்கேனோ உருவத்தில் சிறியவராக இருந்தாலும் அவருக்குள் ஒரு இருண்ட பக்கம் உள்ளது, அது முழுமையாக வெளிவரும் பட்சத்தில் நாம் அவரின் உண்மையான முகத்தை வேறொரு பரிணாமத்தில் கண்டிப்பாகப் பார்க்கவிருக்கிறோம்", என்றார்.

அடுத்தது என்ன?

எது எப்படியிருந்தாலும், அடுத்து நடக்கவிருக்கும் சண்டையின் முடிவில், ஜானி மற்றும் ப்ளாக் இருவருக்கும் இடையேயான பல நாள் பகை ஒரு வழியாக முடிவுக்கு வரலாம்