கடந்த வாரம் WWE ரா நிகழ்ச்சியில் பல வியக்கத்தக்க சம்பவங்கள் அரங்கேறின. ரஸ்ஸில்மேனியாக்கான முதல் பாதை கடந்த வார நிகழ்ச்சியில் தெளிவாகியது.
“தி பிக் டாக்” ரோமன் திடீரென்று WWE அரங்கத்தைச் திரும்பி, நோயிலிருந்து மீண்டு வருவதாக நம்பிக்கை அளித்தது மற்றும் ரா ஊமென்ஸ் சாம்பியனாக இருந்த ரோண்டா ரௌசி தனது சாம்பியன்ஷிப் டைட்டிலை துறந்தது என பல சம்பவங்களை ரசிகர்கள் காண நேரிட்டது.
இவை அனைத்திலும் ஆச்சரியமாக விளங்கியது, பாடிஸ்டாவின் திரும்புதல் தான். ஆம் முன்னாள் WWE ஜாம்பவானான ரிக் பிளேரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்த WWE நிர்வாகிகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது திடீரென்று தோன்றிய பாடிஸ்டா பிளேரை தாக்க முற்பட்டார். இந்நிகழ்வானது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியே உண்டாக்கியது.
எனவே சுவாரசியமான நிகழ்வுகளை கடந்த வாரம் WWE படைத்திருந்த நிலையில், வர வாரத்திலும் பல ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளை WWE நிர்வாகம் அடுக்கி ரஸ்ஸில்மேனியாவுக்கான பாதையை உறுதி செய்யும்.
எனவே நாளை நடக்கவுள்ள மண்டே நைட் ராவில், WWE செய்ய வல்ல 2 விஷயங்களைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்
#2. ரிக் பிளேரை தாக்கியதற்கான காரணங்களை பாடிஸ்டா விளக்க வேண்டும்
கடந்த நான்கு வருடங்களில் இரண்டாவது முறையாக கடந்த வாரம் நடைபெற்ற WWE நிகழ்ச்சியில் தென்பட்டார் பாடிஸ்டா. ரிக் பிளேரின் 70 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றிருந்த போது திடீரென பிளேயரை தாக்க முற்பட்டார் பாடிஸ்டா. பாடிஸ்டாவின் இச்செயலானது ட்ரிபிள் ஹெச்சின் கவனத்தை ஈர்க்கவே செய்யப்பட்டுள்ளது என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ட்ரிபிள் ஹெச்சின் கவனத்தை ஈர்த்து ரஸ்ஸில்மேனியாவில் அவருக்கு எதிராக பாடிஸ்டா களம் காண நினைக்கிறார் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இவ்விரு வீரர்களும் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியின் ஆயிரமாவது தொகுப்பில் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டது அனைவரும் அறிந்ததே. என்னுடன் சந்தித்த ஒரு போட்டியிலும் ட்ரிபிள் ஹெச் வெற்றி பெறவில்லை என பாடிஸ்டா டிரிபிள் ஹெச்சை அவமானபடுத்தவே அந்நிகழ்ச்சியானது சூடுபிடித்தது.
எனவே நாளை நடைபெறும் ரா நிகழ்ச்சியில், ரிக் பிளேயரை தாக்கியதற்கான காரணங்களை பாடிஸ்டா தெளிவுபடுத்தி ட்ரிபிள் ஹெச்சை தனது வார்த்தைகளின் மூலம் வம்புக்கு இழுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1. டீன் ஆம்ப்ரோஸ் ஷியில்டுடன் இணைதல்
கடந்த வாரம் முன்னாள் யுனிவர்சல் சாம்பியனும், ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்படும் வீரருமான ரோமன் ரெய்ங்ஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு WWE அரங்கிற்குள் திரும்பி ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.
ஆம்ப்ரோஸின் ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என்றும் அதையொட்டி அவர் WWE போட்டிகளில் இருந்து விலகுவார் என்று பலதரப்பட்ட வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ரோமன் நோயால் பாதிக்கப்பட்டு விடை பெறுகிறேன் என்று அறிவித்து அந்த நாளே ஷியில்டு சகோதரரான செத் ரால்லின்ஸ்-க்கு எதிராக செயல்பட்டார் டீன் ஆம்ப்ரோஸ்.
கடந்த வாரம் ட்ரீவ் மக்என்டயர்-க்கு எதிராக நோ குவாலிபிகேஷன் போட்டியில் பங்கேற்றார் ஆம்ப்ரோஸ். ஆனால் போட்டியில் லாஷ்லி, எலியாஸ் மற்றும் கார்பின் மக்என்டயர்-க்கு உதவவே கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார் ஆம்ப்ரோஸ். இச்சம்பவம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஷியில்டு அணியின் பின்னிசை கேட்கவே அரங்கம் அதிரும் கரகோஷத்துடன் அரங்கத்திற்குள் நுழைந்தார் ரோமன். ரோமனுடன் சேத் ரால்லின்ஸ் இணைந்து வந்து ஆம்ப்ரோஸை காப்பாற்றினர்.
இச்சம்பவமானது ஷியில்டு அணி மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதாக காட்டுகிறது. இச்சம்பவமானது ஆம்பரோஸை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கும், எனவே அவர் ஷியில்டு அணியுடன் ஒன்றிணைந்து எதிர்வரும் போட்டிகளில் களமிறங்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.