கடந்த வாரம் நடைபெற்ற மண்டே நைட் ரா நிகழ்ச்சி பாஸ்ட்லென் போட்டிகளுக்கு அடுத்தபடியாக அரங்கேறியது. இந்நிகழ்ச்சியில் ரஸ்ஸில்மேனியாவை எதிர்நோக்கும் வகையில் பல நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றை சுருக்கமாக கீழே காணலாம்.
நிகழ்வுகள்
பின் பெலோர், பாபி லாஷ்லிக்கு எதிராக களம் கண்டு தோல்வியைத் தழுவியிருந்தார். மேலும் WWE ஜாம்பவானான குர்ட் ஆங்கிள் எதிர்வரும் ரஸ்ஸில்மேனியா-35 உடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பும் பாடிஸ்டாவின் கோரிக்கையை ஏற்ற டிரிபிள் ஹெச் எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் “No holds barred” போட்டியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தார். அதே இரவில் ட்ரயூ மக் என்டயர், ரோமன் ரெய்ங்க்ஸை கடுமையாக தாக்க முற்பட்டார். டீன் ஆம்புரோஸு ம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த வாரம் ப்ராக் லெஸ்னர் திரும்ப உள்ளதாகவும், செத் ரோல்லின்ஸ் மற்றும் மக் ஏன்டயர் இடையேயான போட்டியையும் WWE விளம்பரப்படுத்தியுள்ளது. எனவே நாளை நடைபெறவிருக்கும் மண்டே நைட் ராவில் WWE செய்ய வாய்ப்பு உள்ள இரண்டு விஷயங்களைப் பற்றி இத்தொகுப்பின் காணலாம்.
#2. மீண்டும் செத் ரோல்லின்ஸை, ப்ராக் தாக்குதல்
செத் ரோல்லின்ஸ் 2019 ஆம் ஆண்டுக்கான ராயல் ரம்பிள் டைட்டிலின் சொந்தக்காரர். எனவே ரஸ்ஸில்மேனியாவின் 35ஆவது ஆண்டுவிழாவில் தன்னுடன் நடனமாட செத் ரோல்லின்ஸ் ப்ராக் லெஸ்னரை தேர்வு செய்துள்ளார். அவரை இழிவு படுத்தவே இவ்வாறு அவர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைக்கண்டு விரக்தி அடைந்த ப்ராக் லெஸ்னர், சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற மண்டே நைட் ராவில் தனது பினிஷரான F5-யை சுமார் 6 முறை செத் ரோல்லின்ஸுக்கு எதிராக பயன்படுத்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
சில வாரங்களுக்கு முன்பு ரோமன் லுகேமியா நோயிலிருந்து தேறி வருவதாகவும், போட்டிகளில் பங்கேற்க தயார் என்று கூறவே அவருக்கு அடுத்தடுத்த போட்டிகள் அமைந்தன. “தி ஷியில்டு” அணியும் திரும்ப அமைக்கப்பட்டது.
நடந்து முடிந்த பாஸ்ட்லென் போட்டியில் ட்ரயூ மக்என்டயரால் கடும் தாக்குதலுக்கு ரோமன் மற்றும் ஆம்ப்ரோஸ் உள்ளாக்கப்பட்டனர். இதன் விளைவாகவே நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் மக் என்டயர் செத் ரோல்லின்ஸுக்கு எதிராக களம் காண உள்ளார். இதே நிகழ்ச்சியில் ப்ராக் லெஸ்னரூம் பங்கேற்க உள்ளதால் நிச்சயமாக அவர் செத் ரோல்லின்ஸை தாக்க முயல்வார். இவ்வாறு கதை களம் அமையப் பெற்றால் ரஸ்ஸில்மேனியாவுக்கு சிறந்த முன்னோட்டமாக அமையும்.
#1. குர்ட் ஆங்கிள் ஜான் ஸினாவை எதிராளியாக தேர்ந்தெடுத்தல்.
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற குர்ட் ஆங்கிள், ரஸ்ஸில்மேனியா-35ல் தனது மல்யுத்த வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார். இந்த அறிவிப்பினை கடந்த வாரம் நடைபெற்ற மண்டே நைட் ராவில் குர்ட் ஆங்கிள் தெரியப்படுத்தினார்.
இரண்டு தசாப்தங்களாக சண்டையிட்டு வரும் குர்ட் ஆங்கிள், WWEவின் ஜாம்பவான்களில் ஒருவர். ஆனால் வயது ஆக ஆக முழங்காலில் ஏற்படும் காயத்தினால் அவதிப்படும் குர்ட் ஆங்கிள், போட்டிகளில் நிலை தன்மையோடு பங்கேற்க முடியவில்லை, ஆதலால் ஓய்வை நாடி இருக்கிறார்.
ஓய்வு பெறப்போகும் போட்டியில் சிறந்த எதிராளியை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குர்ட் ஆங்கிள். சமி சாயேன் முதல் டீன் ஆம்ப்ரோஸ் வரை இன்னும் போட்டிகள் முடிவு செய்யாத பட்சத்தில், இவர்களில் யாரையேனும் ஒருவரை குர்ட் ஆங்கிளுக்கு எதிராக களம் WWE காண வைக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரை ஜான் ஸினாவே சிறந்த தேர்வாக இருப்பார்.
தற்போதைய சூப்பர் ஸ்டார்களில் ஜான் ஸினா மூத்தவர், மேலும் ஜான் சீனா WWE-வில் அறிமுக போட்டியில் களம் கண்டது குர்ட் ஆங்கிளுக்கு எதிராக தான். எனவே ஜான் ஸினாவுக்கு எதிராக களம் காணுவது தான் குர்ட் ஆங்கிளுக்கு சிறந்ததாக இருக்கும்.