WWE-ல் (Hell in a Cell) என்னும் ஒரு வருடாந்திர போட்டியானது WWE குழுமம் மற்றும் பே பெர் வீவ்(pay per view) மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டன.ஆரம்பகால அக்டோபர் மாதத்தின் பேஸபெர் வீவ் அடிப்படையில் நடைபெற்ற WWE -இன் நோ மெர்சி தொடருக்கு மாற்றாக இப்போட்டிகள் 2009-இல் ஆரம்பிக்கப்பட்டன.இந்தாண்டு செப்டம்பர் 16 ஞாயிறன்று AT &T மையத்தில் சான் ஆண்டோனியா, டெக்ஸாசில் தொடங்கப்படுவதாக அறிவித்தனர்.WWE இந்தத் தொடரை நடத்துவது இது பத்தாவது முறையாகும்.ஸ்மேக்டவுன் மற்றும் ரா போன்ற இருதரப்பு ஆட்டங்களை ஒரே ஆட்டமாக 2016 மற்றும் 2017ஆண்டுகளில் மாற்றியபின்னர் இந்தாண்டு நடத்தப்படுகிறது.
3.பிராக் லெஸ்னர் Vs தி அண்டர் டேக்கர்(Hell in a cell,2015):
அண்டர் டேக்கரை தோற்கடித்து, 30-வது ரெஸ்டில் மேனியாவின் ஆகச்சிறந்த போட்டியாளராக தன் திறமையை நிரூபித்த ப்ராக் லெஸ்னர்,மீண்டும் ஒருமுறை அண்டர் டேக்கருக்கு எதிராக ஹெல் இன் செல்லில் தன் யுத்தத்தை ஆட நேர்ந்தது.இந்த காவியகால ஆட்டத்தில்,பலரும் கடந்து கொண்டிருந்த வேளையில், ஒரு புதிய மன்னர் சிம்மாசனத்தில் அமர்வது போன்றே பார்க்கப்பட்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் போட்டியிடும் இருவரில் யார் வெல்வார் என்ற சந்தேகம் அனைவரிடமும் சிறிது நேரம் நிலவியது.பிராக் லெஸ்னர் வயதான அண்டர் டேக்கரை ஒரு சிறு அடியில் வீழ்த்திய பின்னர் பினிஷர் F5 என்னும் ஆயுதத்தால் தாக்கி வெற்றியை தனதாக்கினார்.இறுதியில் இந்த இணையின் வெற்றி யாருக்கு என்ற சந்தேகம் தீர்ந்தது.
2.தி அண்டர் டேக்கர் Vs டிரிபிள் ஹெச்(Wrestle Mania 28):

ஒரு சகாப்தத்தின் முடிவு என்றே கருதியபோதும்,இந்த ஆட்டமானது இரு துருவங்களின் உச்சக்கட்ட போட்டியாக திகழ்ந்தது.அண்டர் டேக்கரின் ஸ்டிரீக்கை ஒரு உதையால் டிரிபிள் ஹெச் வெல்ல நினைத்தார், இப்போட்டியில் அவரது நண்பரான ஷான் மைக்கல்ஸ் ஒரு சிறப்பு விருந்தினர் நடுவராக பணியாற்றினார்
அண்டர் டேக்கர் அந்த உதையையும் பொறுத்துக்கொண்டு ஒரே நேரத்தில் டிரிபிள் ஹெச்சை அடித்து போட்டியினை வென்றார்.இது WWE உலகின் மறக்கமுடியாத ஆட்டமாக இன்றளவும் இருக்கிறது.
1.தி அண்டர் டேக்கர் Vs ஷான் மைக்கல்ஸ் (பேட் பிளட்,இன் யுவர் ஹவுஸ்):

இது தான் முதல் ஹெல் இன் செல் போட்டியாகும்.மேலும் ஒரு புதுவகையான ஆணித்தர சண்டைகளின் அடுத்து வரும் ஆண்டுகளிலும் அமைய காரணமும் இவ்வகையான போட்டியே ஆகும்.ஆட்டத்தின் பெரும்பான்மையில் அண்டர் டேக்கரே குற்றஞ்சாட்டினார்.இருவரும் செல்லை நோக்கி ஏறி சண்டையிடும்போது தான் ஆட்டத்தின் மறக்கமுடியாத தருணம் வந்தது.இறுதியில் அண்டர் டேக்கர் தன் கையில் ஸ்டாம்பிடும்போது ஷான் மைக்கல்ஸ் செல்லின் பக்கவாட்டிலிருந்து தொங்கினார்.இதுவே மைக்கல்ஸ் அந்த ஒளிபரப்பிலிருந்து விலக நேரிட்டது.
அந்நாளில் அண்டர் டேக்கரின் அரைச்சகோதரனாக அறிமுகப்படுத்தப்பட்ட கேன்,தன் இளமைப்பருவத்தில் தன்னை எரிக்கப்பட்டதை காரணம் கருதி ஆட்ட இறுதி நேரத்தில் அண்டர் டேக்கரை வெல்ல ஷான் மைக்கல்ஸின் உதவியை ஆதாயப்படுத்தினார்.பின்னர் அண்டர் டேக்கரையும் வென்றார்.இந்த ஆட்டமானது ஹெல் இன் செல்லில் என்றுமே மறக்கமுடியாத ஆட்டமாகவும் மாறியது.
எழுத்து:
ஃபானிமாஹ்
மொழியாக்கம்:
சே.கலைவாணன்
