இந்த வாரத்தின் WWE ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியானது, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட்டது. இந்த ஒளிபரப்பானது கடந்த வார நிகழ்ச்சிக்குப்பின் படமாக்கப்பட்டது. பண்டிகையையொட்டி WWE வீரர்களுக்கு இந்த வாரம் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வார நிகழ்ச்சியின் பல நிகழ்வுகள் முன்கூட்டியே இணையதளங்களில் கசிந்து வந்தன. ஆனால் WWE நிர்வாக அதிகாரி தாக்கப்பட்டது பெரும்பாலும் அறியப்படாமலேயே இருந்தது.
இந்த வார ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியின் இறுதியில், WWE நிர்வாக அதிகாரி வின்ஸ் மக்மஹோன் முன்னால் WWE சாம்பியனால் மேடைக்கு பின்பு நடந்த கைகலப்பில் தாக்கப்பட்டார்.
பின்னணி...
இந்த வார RAW நிகழ்ச்சியில் மீண்டும் ஒருமுறை தொலைகாட்சியில் தோன்றிய WWE நிர்வாக அதிகாரி வின்ஸ் மக்மஹோன், பல முக்கிய அறிவிப்புகளை கை வசம் வைத்திருந்தார். இந்த வார நிகழ்ச்சியில் அவரின் தோற்றமானது தொடர்ந்து இரு வாரங்களில் இரண்டாவது முறையாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பொதுவாக இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பங்கேற்க மாட்டார். மக்மஹோன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மற்றும் மூன்று முக்கிய அறிவிப்புகளை கைவசம் வைத்திருந்தது என்று இந்த வார நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளானது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த வின்ஸ் மக்மஹோன், WWE வரலாற்றில் முதல்முறையாக பெண்களுக்கான WWE டேக் டீம் டைட்டில்க்கான போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.
இரண்டாவது மிக முக்கிய அறிவிப்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜான் சீனா WWE டெலிவிஷன் நிகழ்ச்சிகளான RAW மற்றும் SMACKDOWN-இல் பங்கேற்பார் என்று அறிவிப்பு.
மூன்றாவது அறிவிப்பாக, இந்த மாத இறுதியில் நடைப்பெறும் RAW நிகழ்ச்சியில் டோல்ப் ஜிக்லர் மற்றும் ட்ரீவ் மேக்இன்டயர் இரும்புக் கூண்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பர் என்று அறிவித்திருந்தார்.
மையக்கரு!
இந்த வார ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில், மக்மஹோன் குடும்பத்தின் சார்பாக ஷேன் மக்மஹோன் பங்கேற்றார். ஷேன், மிஸ் நடத்தும் நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக இருப்பதால், மிஸ் அமைக்கும் டேக் அணியில், இணையாக ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அக்கோரிக்கையை ஒப்புக்கொண்டார் ஷேன் மக்மஹோன்.
இந்த வார நிகழ்ச்சியானது, வின்ஸ் மக்மஹோன் மற்றும் ஏஜே ஸ்டைல்ஸ் ஆகியோரின் கசப்பான உரையாடல் கொண்டு முடிந்தது. மக்மஹோன், ஸ்டைல்ஸை கொச்சைப்படுத்தும் விதமாக, உனது பெயர் என்ன? யார் நீ? ஸ்டைல்ஸ் என்பது யார்? என்று நக்கலாக தெரிவித்திருந்தார். அதற்கு பதிலாக தனது சாதனைகளை பட்டியலிட்ட ஸ்டைல்ஸ், WWE-வின் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியானது நான்(ஸ்டைல்ஸ்) கட்டிய வீடு என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலாக மக்மஹோன், கடந்த போட்டியில் ஏன் பங்கேற்கவில்லை... உன்னுடைய வீட்டில், உனக்கு பதில் டேனியல் பிரையன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். எஜே ஸ்டைல்ஸ் எங்கே ஒளிந்து கொண்டார் என்ற விதத்தில் மக்மஹோன் கூறவே பெரும் கோபத்துக்கு உள்ளானார் ஸ்டைல்ஸ்.
இதனிடையே உண்மையான எஜே ஸ்டைல்ஸ் யார் என்ற கேள்வி எழுப்பிய WWE நிர்வாக அதிகாரி மக்மஹோன், மேலும் கூறியதாவது “கருப்பு இதயம் கொண்டு நீ, உனக்குள் ஒரு மிருகம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அது வெளியே வர தள்ளாடிக்கொண்டு இருக்கின்றது. அந்த மிருகத்தை வெளியே கொண்டு வா, நான் அதை பார்க்க வேண்டும்” என்று கூறி கோபமாக ஒரு அறை விட்டார் மக்மஹோன்.
கோபத்தின் உச்சிக்கு சென்ற ஸ்டைல்ஸ், பொறுத்துக்கொள்ள முடியாமல் பதில் தாக்குதலில் ஈடுபட்டார். பின்பு அதிகாரிகள் அவரை வந்து தடுக்கவே பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அடுத்தது என்ன ?
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் WWE-வின் 2019 ஆண்டிற்கான முதலாவது நிகழ்ச்சி பதிப்பில், எஜே ஸ்டைல்ஸ் மக்மஹோனை தாக்கியதற்காக, எதிர்கொள்ளவிருக்கும் விளைவுகளை பற்றி தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.