இது எதைப் பற்றிய தொகுப்பு?
WWE-இன் தலைவரான வின்ஸ் மக்மஹோன் பரம்பரை பரம்பரையாக மல்யுத்த போட்டிகளை ஏற்று நடத்தும் குடும்பத்தை சார்ந்தவர். மேலும் உலக அளவில் பரம்பரை பணக்காரர்களில் இவரும் ஒருவர். WWE-யை அடித்தளத்திலிருந்து கட்டமைத்து தற்போது அதிக லாபம் ஈட்டும் ஒரு கம்பெனியாக மாற்றியுள்ளார் மக்மஹோன். பொழுதுபோக்குக்கான விளையாட்டில் மிகவும் அறியப்பட்ட பெயராக வின்ஸ் மக்மஹோன் திகழ்கிறார்.
பிரபல பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் உலக அளவில் பணக்கார பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம். எனவே 2019-ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ். மக்மஹோனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது என அப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்…
முன்பு கூறியதை போலவே பரம்பரை பரம்பரையாக மல்யுத்த போட்டிகளை நடத்தும் குடும்பத்தின் வாரிசாக இருந்த வின்ஸ், தனது தந்தையிடமிருந்து மல்யுத்த போட்டிகளுக்கான உரிமையை பெற்று 80-களின் பிற்பகுதியில் கடுமையாக உழைத்தார். 80-களில் WWE, WWF என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதைய காலத்தில் அமெரிக்காவில் மட்டும் பிரபலமாகியிருந்த WWE நிகழ்ச்சியை மற்ற நாட்டினுடைய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று பல யுக்திகளை கையாண்டார் வின்ஸ் மக்மஹோன்.
மேலும் போட்டியின் தரத்தை அதிகரிக்க பல திறமையான சூப்பர் ஸ்டார்களை உருவாக்கினார் வின்ஸ். மேலும் மல்யுத்த போட்டிகளில் முக்கியமான பகுதியாக இருந்த “தி ஆட்டிடூயட் எறா” -வை கொண்டு வந்து அதிகப்படியான ரசிகர்களை போட்டிகள் சென்றடையும்படி நேர்த்தியான நிர்வாகத் திறனை வெளிப்படுத்தினார் வின்ஸ் மக்மஹோன்.
தற்போதைய நிலையில் WWE-யானது உலகமெங்கும் மிகவும் ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்திருக்கின்றது. சமீபத்தில் சவுதி அரேபியாவில் WWE, போட்டிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவில் போட்டிகளை நடத்த சுமார் 350 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது WWE. மேலும் உலக தொலைக்காட்சி நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கும் பாக்ஸ் நிறுவனத்துடன் WWE போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பல கோடிகளுக்கு விற்றது WWE.
மையக்கருத்து
வருடாந்திர பணக்காரர்களின் பட்டியலை சமீபத்தில் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அப்பட்டியலில் உலக அளவில் 691-ஆவது இடத்தில் உள்ளார் வின்ஸ் மக்மஹோன். அவரின் சொத்து மதிப்பு சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது.
இவரின் சொத்து மதிப்பின் ஏற்றமானது சவுதி அரேபியாவில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாகவும், பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் கிடைத்த ஒப்பந்தத்தின் விளைவாகவும் ஏற்றம் கண்டுள்ளதாக பலர் கூறி வருகின்றனர். இந்த வருடத்தின் இறுதியில் WWE-யின் ஸ்மாக்டௌன் போட்டிகளானது பாக்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சிகளில் வெள்ளிக்கிழமை தோறும் இரவில் ஒளிபரப்பப்படும்.
மேலும் மக்மஹோன் XFL எனப்படும் அமெரிக்கா கால்பந்து தொடரை 2020ஆம் ஆண்டு தொடங்க உள்ளார். இதற்கான செலவுகளை ஈடுகட்டவே WWE-வின் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை 2017 ஆம் ஆண்டு விற்றார் அதேபோலவே கடந்த ஆண்டும் சுமார் 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள WWE-இன் பங்குகளை விற்றார் வின்ஸ் மக்மஹோன்.
அடுத்தது என்ன?
WWE மேலும் பிரபலமடையும் நிலையில், மக்மஹோனின் சொத்து மதிப்புகள் ஏறிக்கொண்டு தான் இருக்கும்.