போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதன்பிறகு இந்த வாரம் நடைபெற்ற ராவ் நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த ராவ் நிகழ்ச்சியில் தோன்றிய டபுள்யூ டபுள்யூ ஈ ஹால்ப் ஆஃப் பேமர் Mick Foley’s 24/7 hard core சாம்பியன்ஷிப்-யை அறிமுகப்படுத்தினார். 24/7 hard core சாம்பியன்ஷிப்-யை யார் யார் வென்றுள்ளார்கள் மற்றும் 24/7 hard core சாம்பியன்ஷிப்-யை எதற்காக உருவாக்கினார்கள் என்பதையும் பற்றி இங்கு காண்போம்.
டபுள்யூ டபுள்யூ ஈ ஹால்ப் ஆஃப் பேமர் Mick Foley’s 24/7 hard core சாம்பியன்ஷிப்-யை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும் இந்த சாம்பியன்ஷிப்பிற்காக சண்டையிடலாம் (அதாவது மணி இன் தி கேஷ் போட்டி போல) என்று கூறி 24/7 hard core சாம்பியன்ஷிப்-யை மேடையில் வைத்து விட்டு சென்றுவிட்டார். Mick Foley’s சாம்பியன்ஷிப்-யை மேடையில் வைத்து விட்டு சென்றவுடனே டபுள்யூ டபுள்யூ ஈ-ல் உள்ள அனைத்து மல்யுத்த வீரர்களும் மேடையின் முன் வந்து 24/7 hard core சாம்பியன்ஷிப்பிற்காக சண்டையிட்டனர். 24/7 hard core சாம்பியன்ஷிப்பை டைட்டன்ஸ் ஓ நெய்ல் என்ற மல்யுத்த வீரர் வென்றார்.
டபுள்யூ டபுள்யூ ஈ-ல் டைட்டன்ஸ் ஓ நெய்ல் 24/7 hard core சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் வீரர் ஆவார். டைட்டன்ஸ் ஓ நெய்ல் தனது மல்யுத்த வாழ்க்கையில் 24/7 hard core சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இரண்டாவதாக 24/7 hard core சாம்பியன்ஷிப்பை ராபர்ட் என்ற மல்யுத்த வீரர் டைட்டன்ஸ் ஓ நெய்ல்-யை தாக்கி வென்றார். ராபர்ட் சில நிமிடங்களிலேயே 24/7 hard core சாம்பியன்ஷிப்பை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ராபர்ட் 24/7 hard core சாம்பியன்ஷிப்பை வென்று மேடையை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும் போது ராபர்ட்-யை R.Truth தாக்கி 24/7 hard core சாம்பியன்ஷிப்பை வென்றார். R.Truth 24/7 hard core சாம்பியன்ஷிப்பை வென்ற மூன்றாவது வீரர் ஆவார். இவர் தற்போது வரை இந்த 24/7 hard core சாம்பியன்ஷிப்பை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரம் நடக்கும் ராவ் மற்றும் ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் யார் இந்த சாம்பியன்ஷிப்-யை வெல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். டபுள்யூ டபுள்யூ ஈ-ல் 24/7 என்பது விதி முறைகளில் ஒன்றாகும். இந்த hard core சாம்பியன்ஷிப்பை இதன் அடிப் படையாகக் கொண்டு உருவாக்கினார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது டபுள்யூ டபுள்யூ ஈ-ல் நிறைய மல்யுத்த வீரர்கள் உள்ளதால் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதற்காகவும், டபுள்யூ டபுள்யூ ஈ-ல் உள்ள அனைத்து மல்யுத்த வீரர்களையும் பயன்படுத்துவதற்கும் இந்த 24/7 hard core சாம்பியன்ஷிப்பை உருவாக்கினார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சாம்பியன்ஷிப் ஆனது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.