WWE செய்தி: மீண்டும் வருகிறார் அண்டர்டேக்கர்

தி அண்டர்டேக்கர்
தி அண்டர்டேக்கர்

இது எதைப் பற்றிய தொகுப்பு?

WWE-இன் ஜாம்பவானான தி அண்டர்டேக்கர் WWE-லிருந்து ஓய்வு பெற்றதை நாம் அறிவோம். "டெட்மேன்" என அழைக்கப்படும் அண்டர்டேக்கர் ஓய்வுக்கு பிறகு ட்விட்டரில் தனக்கென ஓர் கணக்கை துவங்கியிருக்கிறார். மற்றும் வெளியுலகில் தனது ரசிகர்களுக்கு பல முறை காட்சி அளித்து வருகின்றார். தற்போது இவர் மீண்டும் WWE அரங்கில் தனது ரசிகர்களுக்கு காட்சி அளிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்...

தி அண்டர்டேக்கர் கடைசியாக சவுதி அரேபியாவில் நடைபெற்ற WWE நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் அவரது சகோதரர் என அழைக்கப்படும் தி கேன் உடன் இணைந்து ஷான் மைக்கேல்ஸ், ட்ரிபிள் ஹெச் ஜோடிக்கு எதிராக போட்டியிட்டனர். அதோடு ஓய்வு பெற்று விடுவார் என்று நினைத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் காட்சி அளிக்க போவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி அண்டர்டேக்கர் பற்றி நாம் அறியவேண்டியது

இவரது இயற்பெயர் மார்க் வில்லியம் கால்வே. இவர் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார். இவர் WWF/E-இல் அதிகப்படியான போட்டிகளில் சண்டையிட்டு 17 முறை பலவகையான பட்டங்கள் வென்றிருக்கிறார். இதுவரை நான்கு முறை WWF/E சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார், ஆறு முறை ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார்.

Wrestle mania Streak
Wrestle mania Streak

இவர் ரஸ்ஸில்மேனியா போட்டிகளில் தொடர்ந்து 21 போட்டிகளாக தோல்வியை சந்திக்காமல் வெற்றியை பெற்று வந்தது இவரது பெயரில் இருக்கும் ஓர் பெரிய மைல்க்கல். ரஸ்ஸில்மேனியா நிகழ்ச்சி வருடத்திற்கு ஓர் முறைமட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவர் 21 வருடங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார் என்பது நமக்கு புரிகிறது. கடைசியில் இவர் ப்ராக்லெஸ்னரிடம் ரஸ்ஸில்மேனியாவில் தோல்வியை சந்தித்தார்.

மையக்கருத்து

தி அண்டர்டேக்கர் WWE-யை விட்டு வெளியிடத்தில் தனது ரசிகர்களை சந்திக்க போவதாக செய்திகள் உலா வருகின்றன. இவர் டெக்சாஸ் மாகாணம் பிரின்ட்ஸவூடில் இருக்கும் பேப்ரூக் ஹாலில் தனது ரசிகர்களுக்கு காட்சி அளிக்க வருகிறார். அதற்கு நுழைவு சீட்டு 50 முதல் 150 டாலர்கள் வரையில் ரசிகர்களிடையே வசூலிக்கப்படும் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

தி அண்டர்டேக்கரை சமீபத்தில் பாஸ்டர் எட் ஜோன்ஸ் பேட்டி எடுத்தார். அதில் அவரது உண்மையான குணத்தில் பதில் அளித்து கொண்டிருந்தார் அண்டர்டேக்கர். அதில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அவரது இமாலய வளர்ச்சிக்கு அவரது துணைவியார் மிச்சேல் மிக்கூல் மிக பெரிய அளவில் உறுதுணையாக இருந்ததாகவும் தமக்கு அனைத்து விதத்திலும் உதவிகள் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தது என்ன?

தி அண்டர்டேக்கர் WWE-இன் அடுத்த சவுதி அரேபியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்குபெறுவார் என்ற வதந்திகள் ஒருபுறம் பரவி வந்தாலும், நிஜத்தில் அவர் WWE-விலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது தான் உண்மை. WWE-வை பொறுத்தவரையில் தங்களது ரசிகர்களின் சந்தோசத்திற்காக அதிகப்படியான ஆச்சரியங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை தயாரிப்பார்கள். அதில் ரசிகர்களை உற்சாகப்படுத்த தி அண்டர்டேக்கர் மீண்டும் WWE அரங்கில் இறங்குவாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.