WWE நெட் வொர்க் சார்பில் வருடாவருடம் நடக்கும் மெயின் ஈவன்ட்களில் ஒன்று தான் ரஸ்ஸில்மேனியா. இந்த 35 வது ரஸ்ஸில்மேனியா, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்திலுள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில், சுமார் 82,000 பார்வையாளர்களுடன் விமானங்களின் அணிவகுப்போடு, வண்ண வான வேடிக்கைகளோடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக துவங்கியது.
அலெக்ஸா பிலிஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவழங்க ஹல்க் ஹோகனுடன் ரஸ்ஸில்மேனியா துவங்கியது. இதில் மொத்தம் 16 போட்டிகள் இடம்பெற்றன. அவற்றின் முடிவுகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
#1. க்ரூசியர்வெயிட் சாம்பியன்ஷிப்:
டோனி நீஸ் மற்றும் பட்டி மர்பி ஆகியோருக்கிடையேயான க்ரூசியர்வெயிட் சாம்பியன்ஷிப் மேட்ச்சில் டோனி நீஸ் 10:40 நிமிட போராட்டத்திற்கு பிறகு வென்றார்.
#2. ரஸ்ஸில்மேனியா வுமன்ஸ் பேட்டல் ராயல்.
10:30 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சார லோகனை இறுதியில் வெளியேற்றி கார்மேலா வெற்றி பெற்றார்.
#3. குர்ட் ஆங்கிளின் கடைசி போட்டி
குர்ட் ஆங்கிள் மற்றும் பேரோன் கார்பின் உடன் மோதினார். இதில் கார்பின் குர்ட் ஆங்கிளை வீழ்த்தினார். இது ரசிகர்கள் பலருக்கு அதிிர்ச்சியளித்தது.
இப்போட்டியானது குர்ட்ஆங்கிளின் கடைசி போட்டியாகும்.
#4. ஆன்ட்ரூ தி ஜெயன்ட் மெமரியல் பேட்டல் ராயல்.
10:20 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் ப்ரௌன் ஸ்ட்ரோமன் அனைவரையும் வெளியேற்றி ஆன்ட்ரூ தி ஜெயன்ட் கோப்பையை வென்றார்.
#5. WWE யூனிவர்சல் சாம்பியன்ஷிப்.
ஷெத் ரால்லின்ஸ் மற்றும் ப்ராக் லெஸ்னர் ஆகியோருக்கிடையேயான இப்போட்டியில், போட்டி ஆரம்பம் ஆவதற்கு முன்பே ப்ராக் லெஸ்னர், ரால்லின்ஸை கடுமையாக தாக்கினார். பின்னர் போட்டி ஆரம்பித்தவுடன் குறுக்கு வழியில் நடுவரை ஏமாற்றி 2:30 நிமிடத்தில் ஷெத் ரால்லின்ஸ் யூனிவர்சல் சாம்பியன்ஷிப் பெல்ட்டை தன்வசப்படுத்தினார்.
#6. சிங்கிள்ஸ் மேட்ச் 1:
ரான்டி ஆர்டன் மற்றும் ஏஜே ஸ்டைல்ஸ் க்கு இடையேயான இப் போட்டி சுமார் 16:20 நிமிடங்கள் நீடித்தது. இதில் சிறப்பாக சண்டையிட்ட ஏஜே ஸ்டைல்ஸ் ரான்டி ஆர்டனை வீழ்த்தினார்.
#7. WWE ஸ்மாக்டவுன் டேக் டீம் சாம்பியன்ஷிப்(Fatal four way)
சுமார் 10:10 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் மற்ற மூன்று டேக் டீம்களான அலைஸ்டர் ப்ளாக், ரிக்கோசெட் மற்றும் ரூஸவ், ஷின்சுகே நாக்கமோரா மற்றும் ஸிசாரோ, ஷேமிஸ் ஆகியோரை வீழ்த்தி தி ஊஸோஸ் சாம்பியன்ஷிப் பெல்ட்டை வென்றனர்.
#8. சிங்கிள்ஸ் மேட்ச் 2.
ஷேன் மக்மஹோன் மற்றும் தி மிஸ் ஆகியோருக்கிடையேயான இந்த மேட்ச் பால்ஸ் கவுன்ட் எனிவேர் மேட்ச் ஆகும். 15:30 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் ஷேன் மக்மஹோன் வெற்றி பெற்றார்.
#9. WWE வுமன்ஸ் டேக் டீம் சாம்பியன்ஷிப்
Fatal four way முறையில் நடைபெற்ற இப்போட்டி 10:45 நிமிடங்கள் நீடித்தது. இதில் மற்ற மூன்று டேக் டீம்களான பெய்லி, ஷாஷா பேங்க்ஸ் மற்றும் நியா ஜாக்ஸ், டமீனா மற்றும் பெத் பீனிக்ஸ், நட்டால்யா ஆகியோரை வீழ்த்தி பில்லி கே, பேய்டோன் ரோய்ஸ் டேக் டீம் சாம்பியன்ஷிப் பெல்ட்டை வென்றனர்.
#10: WWE சாம்பியன்ஷிப்
அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்த, கோஃபி கிங்ஸ்டன் மற்றும் டேனியல் பிரையன் இடையேயான இப்போட்டி 23:45 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் கடுமையாக போராடிய கோஃபி கிங்ஸ்டன் டேனியல் பிரையனை வீழ்த்தி தனது பதினோரு வருட கனவை நனவாக்கினார்.
#11. WWE யுனைடெட் ஸ்டெட்ஸ் சாம்பியன்ஷிப்
ரெய் மஸ்டீரியோ மற்றும் சாமோயா ஜோ இடையேயான இப்போட்டி ஒரு நிமிடம் மட்டுமே நடந்தது. இதில் சாமோயா ஜோ வெற்றி பெற்றார்.
#12. சிங்கிள்ஸ் மேட்ச் 3.
ரோமன் ரெயின்ஸ் மற்றும் ட்ரு மேக்கன்டைர் ஆகியோருக்கிடையேயான இந்த மேட்ச் 10:10 நிமிடங்கள் நீடித்தது. இதில் அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் ரோமன் ரெயின்ஸ் வெற்றி பெற்றார்.
#13. சிங்கிள்ஸ் மேட்ச் 4.
ட்ரிபிள் எச் மற்றும் பட்டிஸ்டா ஆகியோருக்கிடையேயான இந்த மேட்ச் கரியர் என்டிங் முறையில் நடைபெற்றது. இதில் ட்ரிபிள் எச் 24 நிமிட போராட்டத்திற்கு பிறகு பட்டிஸ்டாவை வீழ்த்தினார்.
#14. WWE ராவ் டேக் டீம் சாம்பியன்ஷிப்
குர்ட் ஹாக்கின்ஸ், ஜாக் ரைடர் மற்றும் டாஷ் வைல்டர், ஸ்காட் டாவ்சன் ஆகியோருக்கிடையேயான இந்த மேட்ச் 13:20 நிமிடங்கள் நீடித்தது. இதில் குர்ட் ஹாக்கின்ஸ் மற்றும் ஜாக் ரைடர் வெற்றி பெற்றனர்.
#15. WWE இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப்.
பாபி லாஸ்லி மற்றும் பின் பேலர் ஆகியோருக்கிடையேயான இந்த மேட்ச் 04:05 நிமிடங்கள் நீடித்தது. இதில் பின் பேலர் வெற்றி பெற்றார்.
#16. WWE ராவ் வுமன்ஸ் சாம்பியன்ஷிப் மற்றும் ஸ்மாக்டவுன் வுமன்ஸ் சாம்பியன்ஷிப்.
இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு இரண்டு பெல்ட்டுகளும் சொந்தம். இதில் ரான்டா ரூஸி மற்றும் சார்லட் ப்ளேயர் ஆகிய இருவரையும் வீழ்த்தி பெக்கி லின்ட்ச் வெற்றி பெற்றார்.