WWE என்பது ஏற்கனவே சொல்லிவைத்துவிட்டு அதன்படி நடைபெறும் ஒரு தொழில்முறை மல்யுத்தம் ஆகுமென்பது நாம் அறிந்ததே, ஆனால் அதை மறக்கடிக்கும் வண்ணம் அவர்கள் நம்பகத்தன்மையுடன், நிஜமான சண்டை போல நடத்துவதுதான் இன்றுவரை ரசிகர்களை இந்நிகழ்ச்சியை வாரவாரம் காணவைக்கிறது. இவர்கள் இந்நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாகவும், சுவாரஸ்யம் குறையாமல் நடத்துவதும், அதற்காக அவர்கள் எடுக்கும் ஆபத்தான முயற்சிகளும்தான் இவர்களை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்கிறது. இருப்பினும் இந்த போலியான நம்பகத்தன்மை விதியின் வசம் பல நேரங்களில் கையும் களவுமாக சிக்கியிருக்கிறது என்பதே நிதர்சனம்.
தவறான நேரத்தில் காமிராவில் சரியாக பதிவாகிய WWE-ன் ஐந்து ரகசியங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
#5. ஸ்டிங்கிடம் மன்னிப்புக் கேட்ட ஷெத் ரோலின்ஸ்.
WWE-ன் மெயின் ஈவன்ட்களில் ஒன்றான நைட் ஆஃப் சாம்பியன்ஸில் ஸ்டிங் மற்றும் ஷெத் ரோலின்ஸூக்கு இடையே நடந்த போட்டி அது ,ஸ்டிங்கிற்கு அதுதான் WWE ல் இரண்டாவது போட்டியாகும், அவரும் தனது பங்கிற்கு நன்றாகத்தான் சண்டையிட்டு வந்தார். ஆனால் ஒருகட்டத்தில் முன்னெழுதப்படாத மூவ் ஒன்றை ரோலின்ஸ் ஸ்டிங்கிற்கு செய்தார். இதில் நிலைதடுமாறிய ஸ்டிங் மீண்டும் போட்டிக்கு மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின்புதான் திரும்பினார். உடனே தன்னிலை அறியாமல் அவரிடம் மன்னிப்பு கேட்டார் ரோலின்ஸ். இது துரதிர்ஷ்டவசமாக காமிராவில் பதிவாகி வைரல் ஆனது.
#4. ஸீனா அடுத்த நகர்வை உரக்கச் சொன்னது.
WWE-ன் பெரும்பாலான போட்டிகள் எவ்விதம் செல்ல வேண்டுமென ரிங்கில்தான் மல்யுத்த வீரர்கள் தங்களது நடவடிக்கைகள் மூலம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். அதில் சிலர் சைகையினாலும், சிலர் ரகசிய பேச்சுக்கள் மூலமும் எதிராளிக்கு கூறுவது வழக்கம். ஆனால் சில வீரர்கள் இதைத் தெரிவிக்கும் போது பார்வையாளர்களிடமோ, காமிராவிடமோ சிக்கிக்கொள்வார்கள்.
அந்த வகையில் சிறந்த வீரரான ஜான் ஸீனா நேரலை நிகழ்ச்சிகளில் எதிராளியின் அடுத்த நகர்வு எதுவென உரக்கச் சொல்லி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். ஒருமுறை சிஎம் பன்ங்கிற்கு எதிரான சண்டையில் ஜான் ஸீனா பன்ங்கிடம், அடுத்து என்னை உதை என்று சற்று சத்தமாக சொல்லி காமிராவிலும் அங்கு முன்னாள் கூடியிருந்த ரசிகர்களிடமும் மாட்டிக்கொண்டார். இந்த வீடியோ வெளியாகி ஸீனாவை நெட்டிசன்கள் வசைபாடினர். அவர் ஆரம்ப காலத்தில் கவனித்து செயலாற்றியிருக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
#3. உடைபட்ட சின்காராவின் ரகசியம்
சின் காராவின் கதாபாத்திரத்தின் தன்மை அவ்வப்போது மாறிக்கொண்டே வரும். அதிலும் அவர் ரிங்கிற்குள் நுழையும் விதம் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அவர் ஓடி வந்த வேகத்தில் அப்படியே தரையிலிருந்து குதித்து ரிங்கிற்குள் நுழைவார். ஆனால் இவ்வாறு குதிப்பது சராசரி மனிதனால் சாத்தியமில்லை. இதன் ரகசியங்கள் அனைத்தும் பார்வையாளர் வெளியிட்ட வீடியோவால் வெளிப்பட்டது. அதில் அவர் ரிங்கிற்குள் தரையிலிருந்து நேரடியாக தாவுவதில்லை என்பதும் இருந்தது. அதைப் பார்த்த பிறகு ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் அவரின்பால் அதிருப்தி ஏற்பட்டது. அதன் பிறகு அவர் சண்டையிடும் சில யுக்திகளிலும் சர்ச்சையில் சிக்கி ரசிகர்களின் வெறுப்புகளுக்கு ஆளானார்.