#2. பிளேடிங்
பிளேடிங் செயல் எப்போதும் பாதுகாக்கப்படும் ரகசியங்களில் ஒன்று. WWE ல் ரத்தம் என்பது அந்த சண்டைக்கு மேலும் நம்பகத்தன்மை ஏற்படுத்தும் கூறுகளில் ஒன்று. இந்த பிளேடிங் மூலம் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு தங்களின் மூலமே காயம் ஏற்படுத்திக்கொண்டு ரத்தத்தை வரவைப்பர். இந்த பிளேடுகளை இவர்கள் ரசிகர்களின் கண்களில் படாமல் மிகவும் ரகசியமாகவும் அதேசமயம் மிகவும் கவனத்துடனும் கையாள்வார்கள். ஆனால் மற்ற சம்பவங்களை போலவே இதுவும் காமிராவில் சிக்கியிருக்கிறது.
ஜான் ஸீனாவிற்கும் ரேண்டி ஆர்டினிற்கும் இடையேயான சண்டையில் தீடீரென ஸீனாவிடமிருந்து பிளேடு தவறுதலாக கீழே விழுந்துவிடும், பிறகு அதை நடுவர் சட்டென்று எடுத்து மறைத்து விடுவார்.
இது நிச்சயமாக வீடியோவில் காணும் அளவிற்கு அவ்வளவு அழகான பதிவு அல்ல. ஆனால் மறுபடியும் மல்யுத்த வீரர்கள் தங்களின் பெரும்பான்மையை நிலைநாட்ட எவ்வளவு ஆபத்தான செயல்களிலும் இறங்க தயாராக உள்ளனர் என்பதை பிளேடிங் உணர்த்துகிறது
#1. தி எம்எஸ்ஜி-ல் ஏற்பட்ட கர்டெயின் கால் நிகழ்வு.
இந்த நிகழ்வுதான் தொழில்முறை மல்யுத்தத்தின் போக்கையே மாற்றியது எனலாம். WWE அப்போது தங்களை முன்னணி பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நிலைநிறுத்திக் கொள்ளவும் அதே சமயத்தில் அவர்களின் நம்பகத்தன்மையையும் சேர்த்து தக்கவைத்துக் கொள்ளவும் முயற்சித்து வந்தது. ஆனால் க்ளிகு(kliq) என்னும் அணியிடம் வேறொரு திட்டம் இருந்தது. நிஜ வாழ்க்கையில் நெருக்கமான நண்பர்களாக இருப்பவர்களுக்கிடையே சண்டை வைக்கும் திட்டம்தான் அது.இதனை மெக்மான் என்பவர் தனது அணியான க்ளிகுவில் அறிமுகப்படுத்தினார். இந்த சண்டை பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. வெறும் செய்யும் தொழிலுக்காக சண்டையிட்டனர். சண்டை முடிந்த அடுத்த நிமிடமே ட்ரிபிள் எச், ஷான் மைக்கேல்ஸ், கெவின் நாஷ் மற்றும் ஸ்காட் ஹால் ஆகியோர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மீண்டும் ஒன்று சேர்ந்துகொள்வார்கள்.
இந்த நிகழ்வு அங்கு கூடியிருந்த பார்வையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளிவந்து காட்டுத்தீ போல பரவியது. இதனால் கடும் கோபமடைந்த மெக்மான் அந்த அணியிலிருந்த டிரிபிள் எச்-க்கு மட்டும் தண்டனை வழங்கினார். காரணம் அணியிலிருந்த மற்றவர்களில் இருவரான கெவின் நாஷ் மற்றும் ஹால் ஆகியோருக்கு அதுதான் WWE ல் கடைசி போட்டி அதன் பிறகு அவர்கள் இருவரும் WCW எனப்படும் மற்றொரு மல்யுத்த நிறுவனத்தில் ஒப்பந்தமாகியிருந்தனர், இதனால் அவர்களை தண்டிப்பதில் பயனில்லை. மேலும் ஷான் மைக்கேல்ஸ் அப்போது WWE-ன் சாம்பியனாக இருந்ததால் அவரை மெக்மானால் தண்டிக்க முடியாமல் போனது. மெக்மானின் தண்டனைக்கு ஆளான டிரிபிள் எச், கிங் ஆப் தி ரிங் போட்டியில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பை இழந்தார். இந்த வாய்ப்பு அப்போது அறிமுகமான ஸ்டான் கோல்ட்-க்கு கிடைத்து. அவர் கிங் ஆப் தி ரிங்-காக ஆனார். அதன் பிறகுதான் அவர் புகழின் உச்சிக்கே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த நிகழ்வு நடைபெறாமல் போயிருந்தால் ஸ்டான் கோல்ட் என்பவர் இந்த உலகின் பார்வையில் படாமலே இருந்திருக்கக்கூடும்.
இந்த ஐந்து நிகழ்வுகளும் இதுவரை கேமராவில் பதிவான WWE-ன் ரகசியங்களில் மிகவும் முக்கியமானவையாகும்.