WWE செய்தி : ரஸ்ஸில்மேனியா 35-க்கு பிறகு நடக்கும் பெரிய போட்டியில் ரோமனின் எதிராளிகள் யார் என்று இப்போதையே வெளியிட்ட WWE

The Hounds of justice are back together, again!
The Hounds of justice are back together, again!

இது எதைப்பற்றிய தொகுப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் ரஸ்ஸில்மேனியா 35 தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியில் நடைபெறும் போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. இந்த தேதியில் நடக்கும் என்று WWE பிரபலப்படுத்தினாலும் பெரும்பாலான போட்டிகள் இன்னும் முடிவு செய்யப்படாமலேயே இருக்கின்றன.

ரஸ்ஸில்மேனியா 35-க்கான ஏற்பாடுகளை இன்னும் WWE செய்யாத நிலையில், அதற்கு அடுத்து நடைபெறும் எக்ஸ்ட்ரீம் ரூல்ஸ் தொடரில் ரோமனுக்கான எதிராளிகள் யார் என்பதை அறிவித்துள்ளது WWE.

எக்ஸ்ட்ரீம் ரூல்ஸ் நிகழ்ச்சி எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்…

சமீபத்திய ரா நிகழ்ச்சியில் ரசிகர்களின் கரகோஷத்துடன் WWE அரங்கிற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பியிருந்தார் ரோமன் ரெய்ங்ஸ். மேலும் தான் கைவிட்ட யுனிவர்சல் சாம்பியன்ஷிப் டைட்டிலை மீண்டும் பெறவேண்டும் எனவும், தனது நண்பனான செத் ரால்லின்ஸ் தன் பக்கம் உள்ளதை பற்றியும் நெகிழ்ச்சியாக மேடையில் பல கருத்துக்களை கூறினார் ரோமன். இதே மேடையில் ஷியில்டு அணி மறுபடியும் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் ரோமன். வளையத்தில் ஒன்று சேர்ந்த ரோமன் மற்றும் ரால்லின்ஸ் ஷியில்டு அணியின் மற்றொரு வீரரான டீன் ஆம்ப்ரோஸை அரங்கத்திற்குள் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

எனவே அவர்களின் அழைப்பை ஏற்று அரங்கத்திற்குள் நுழைய ஆம்ப்ரோஸ் வந்து கொண்டிருந்த வேளையில் பதுங்கியிருந்த எலியாஸ் ஆம்ப்ரோஸை தாக்க முற்பட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரோமன் மற்றும் ரால்லின்ஸ் ஆம்ப்ரோஸை காப்பாற்ற அவரை நோக்கி விரைந்து சென்றனர். இவர்கள் அங்கு சென்று அடைவதற்கு முன்பாகவே கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார் ஆம்ப்ரோஸ்.

எனவே நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியில், தங்களுடன் வருமாறு ஆம்ப்ரோஸிடம் ரோமன் மற்றும் ரால்லின்ஸ் கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அரங்கத்திற்குள் நுழைந்த கார்பின் ஷியில்டு அணியைப் பற்றி தவறாக பேசவே வளையத்திற்கு வெளியே நின்றிருந்த ஆம்ப்ரோஸ் வளையத்திற்கு உள்ளே வந்து ரோமன் மற்றும் ரால்லின்ஸின் கோரிக்கையை ஏற்று அணியில் சேருவதாக கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார் ஆம்ப்ரோஸ்.

மையக்கருத்து

இந்த வார ரா நிகழ்ச்சியில், WWE எக்ஸ்ட்ரீம் ரூல்ஸ் போட்டிகளானது பிலடெல்பியாவுக்கு திரும்பவுள்ளதாக அரங்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளில் அறிவித்திருந்தது WWE.

அந்த விளம்பரப் பலகைகளில் எக்ஸ்ட்ரீம் ரூல்ஸில் நடைபெறவிருக்கும் போட்டிகளின் அட்டவணையும் இடம்பெற்றிருந்தது.

போட்டிகள் :

செத் ரால்லின்ஸ் VS ட்ரீவ் மக்என்டயர்

ரோமன் ரெய்ங்ஸ் VS பாரேன் கார்பின்

மேல் குறிப்பிட்ட போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெல்ஸ் பார்கோ சென்டரில் நடைபெற உள்ளதாக WWE விளம்பரப்படுத்தியுள்ளது.

இப்போட்டிகளானது ரஸ்ஸில்மேனியாவுக்கு பிறகு மாற்றம் காணப்படும் என்று பலர் கூறி வருகின்றனர். வீரர்களின் காயம், மற்றும் கதைக்களம் மாற்றம் என வேறுபாடுகள் இருந்தால் மேற்குறிப்பிட்ட போட்டிகளில் மாற்றம் ஏற்படலாம்.

அடுத்தது என்ன?

எதிர்வரும் ரஸ்ஸிலமேனியாவில் ப்ராக் லெஸ்னருக்கு எதிராக களம் காண உள்ளார் செத் ரால்லின்ஸ். அனேகமாக WWE யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை ரால்லின்ஸ் கைப்பற்றுவார் என தெரிகிறது. ரோமனின் எதிராளி யார் என்பது இன்னும் உறுதிப்பட செய்யவில்லை. எதிர்வரும் பாஸ்ட்லென் போட்டிகளில் இதற்கான பாதை அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.