ரஸ்ஸில்மேனியா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக நடைபெறும் பெ பர் வியூ நிகழ்ச்சியான பாஸ்ட்லெனை நடத்த ஆயத்தமாகி வருகிறது WWE. எனவே இத்தொடரில் எட்டு போட்டிகள் அரங்கேறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஸ்ஸில்மேனியாவுக்கு முன்பாக பெரிய மாற்றங்களை WWE பாஸ்ட்லெனில் கொண்டு வராது என்பதே நிதர்சனமான உண்மை. ரசிகர்கள் விரும்பக்கூடிய மாற்றங்களை பெரிய மேடையான ரஸ்ஸில்மேனியாவில் தான் WWE நிகழ்த்தும்.
ஆனாலும், போட்டிகளை சுவாரஸ்யப்படுத்த கதைகளத்தை எந்த நேரத்திலும் WWE மாற்றக்கூடும், அவ்வகையில் WWE பாஸ்ட்லெனில் செய்ய வாய்ப்பு உள்ள மூன்று விஷயங்களைப் பற்றி இங்கு காண்போம்
#3.லேசி எவன்ஸ், அசூகாவை தாக்குதல்
சமீபத்தில் NXT நிகழ்ச்சியின் மூலமாக வந்த லேசி எவன்ஸ், WWE-வில் தனது சீரிய ஆட்டத்தினால் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். அவ்வப்போது மற்ற போட்டிகளில் பெரும்பாலும் நுழைந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றம் காண வைக்கும் திறனை பெற்றவர் லேசி எவன்ஸ்.
எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில், “தி பிரின்சஸ் ஆப் டுமாரோவ்” என்று அழைக்கப்படும் அசூகாவுக்கு எதிராக லேசி எவன்ஸ் களம் காணுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக இத்தகவலை WWE உறுதிப்படுத்தவில்லை.
அசூகா மற்றும் மாண்டி ரோஸ் சண்டையிட்டுக் கொள்ளும்போது, கடும் தாக்குதலுக்கு அசூகா உள்ளாகிறார். கலக்கமடைந்த நிலையில் இருக்கும் அசூகாவை திடீரென அரங்கத்திற்கு நுழையும் லேசி எவன்ஸ் மறுமுனை தாக்குதலை அசூகாவிடம் முன்னெடுக்கிறார். இந்தக் கதைக்களத்தில் பாஸ்ட்லென் நிகழ்ச்சியில் போட்டி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அசூகாவின் முக்கிய எதிராளிகளின் பட்டியலில் லேசி எவன்ஸ் முக்கிய இடம் வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#2. ஷேன் மக்மஹோன் வில்லனாக உருவெடுத்தல்.
பாஸ்ட்லென் பெ பர் வியூ நிகழ்ச்சியானது "தி மீஸ்-இன்" சொந்த ஊரில் நடைபெற உள்ளது. எனவே பல மாதங்களுக்கு முன்பாக ஊஸோல் அணிக்கு எதிராக களம் கண்டிருந்தனர் தி மீஸ் மற்றும் ஷேன் மக்மஹோன் இணை. எனவே இப்போட்டியின் மறு போட்டியாக எதிர்வரும் பாஸ்ட்லெனில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் மீஸ் மற்றும் ஷேன் இணை தோல்வியை தழுவிய பிறகு, மீஸ் ஷேனுக்கு எதிராக செயல்பட்டு தாக்குதலை முன்னெடுப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் ஷேனை வில்லனாக மாற்றும் நோக்கத்தில் WWE கதைக்களம் அமைக்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஷேன் நல்லவர் என்ற கதாபாத்திரத்தில் மட்டுமே WWE-வில் தென்பட்டுள்ளார்.
பாஸ்ட்லெனில் மீஸ்ஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையான தாக்குதலை ஷேன் முன்னெடுத்து மிஸ்ஸை சுயநினைவு இழக்கும் வரையில் மரண தாக்குதலில் ஷேன் ஈடுபடுவார். எனவே ரஸ்ஸில்மேனியாவுக்கு முன்பாக பாஸ்ட்லெனில் இப்படிப்பட்ட கதைக்களம் அமைக்கப்பட்டால் ரசிகர்கள் ஆர்வத்தோடு ரஸ்ஸில்மேனியாவுக்கான எதிர்பார்ப்பில் இருப்பார்கள்.
#1. டீன் ஆம்ப்ரோஸ் மறுபடியும் துரோகத்தை விளைவித்தல்
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு WWE-வின் நட்சத்திர வீரரான ரோமன் ரெய்ங்ஸ் எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலையே இருந்தது. ஆனால் தற்போது அவர் மீண்டு வந்துள்ள நிலையில் அனைத்து நிகழ்ச்சியிலும் இவரது போட்டி அமைக்கப்படுகிறது.
எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் ரோமனுக்கான எதிராளி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், டீன் ஆம்பரோஸை WWE களமிறக்கக்கூடும் என கூறப்படுகிறது. ரோமனின் புகழுக்கு நிகரான போட்டியாளர்கள் யாரும் இல்லாததால் WWE இப்படிப்பட்ட கதைக்களத்தை அமைக்கக்கூடும்.
எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் ரோமன், கார்பினுக்கு எதிராக போட்டியிடுவார் என்ற தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இப்போட்டி ரஸ்ஸில்மேனியா போன்ற பெரும் நிகழ்ச்சியில் இடம்பெறுவது சரியாக இருக்காது என்பது ரசிகர்களின் கருத்து. எனவே ரசிகர்களின் கருத்துக்கிணங்க, தற்போது ஷியில்டு அணியில் ஒன்று சேர்ந்துள்ள டீன் ஆம்புறோஸை ரோமனுக்கு எதிராக களம் காணும் வகையில் கதைக்களம் WWE அமைத்தாலும் அமைக்கலாம்.