என்ன கதை?
கடந்த WWE ரா நிகழ்ச்சியில், அண்டர்டேக்கரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. WWE-வின் தயாரிப்பு வாகனத்தில் அண்டர்டேக்கரின் படம் இடம்பெற்றிருந்தது. WWE-வின் அதிகாரப்பூர்வ வாகனத்திலேயே அண்டர்டேக்கரின் படம் இருந்ததால் மீண்டும் எதாவது ஒப்பந்தத்தை WWE புதுப்பித்து உள்ளதா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை உங்களுக்கு இதைப் பற்றி தெரியவில்லை என்றால்…
கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக அண்டர்டேக்கர் WWE-விலிருந்து முழுவதுமாக ஒதுங்கியுள்ளார். வயது முதிர்ச்சி அடைந்ததன் காரணமாக அண்டர்டேக்கர் WWE போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அண்டர்டேக்கரின் மவுசு இன்னும் குறையவில்லை, இவருக்கு வெறிகொண்ட ரசிகர்கள் இன்றளவும் இருக்கின்றன. மறுபடியும் ஒரு போட்டியில் இவரை காண முடியாதா என்று ஏங்கி தவிக்கும் ரசிகர்களை சமூக வலை தளங்களில் நாம் காணலாம்.
WWE-வின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான ரஸ்ஸில்மேனியா தொடங்க இருப்பதால், ரஸ்ஸில்மேனியாவின் முடிசூடா மன்னனாக விளங்கும் அண்டர்டேக்கர் WWE போட்டிகளுக்கு திரும்புவாரா என்று பலர் வினவி வருகின்றனர்.
கடந்த வருட ரஸ்ஸில்மேனியா போட்டியில் அண்டர்டேக்கர் பங்கேற்க மாட்டார் என்ற நிலை இருந்த நிலையில், திடீரென அரங்கத்திற்கு வந்த அண்டர்டேக்கர் ஜான் ஸினாவுக்கு எதிராக சண்டையிட்டார்.
சமீப காலமாக அண்டர்டேக்கர் சிறப்பு தோற்றம் அளிக்கவே பல்வேறு WWE நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார், ஒரு நிகழ்ச்சிக்கு சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக பெறுகிறார் அண்டர்டேக்கர். மேலும் அண்டர்டேக்கர் சில நாட்களுக்கு முன்பாகவே ஓய்வினை அறிவித்து விட்டதாக பலர் கூறி வருகின்றனர். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
மையக் கருத்து
தற்போது ரஸ்ஸில்மேனியா 35-க்கான விளம்பரம் மற்றும் பிரமோஷன் வேலைகளில் ஆயுத்தமாகியுள்ளது WWE.
எனவே, WWE-வின் தயாரிப்பு வாகனத்தில் அண்டர்டேக்கரின் படம் இடம்பெற்றிருப்பது அண்டர்டேக்கர் எதிர்வரும் ரஸ்ஸில்மேனியா போட்டிகளில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. படம் இடம் பெற்றால் பங்கேற்பார் என அர்த்தமா? என்று நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால் அவ்வாறு நடப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. வழக்கமாக ஒரு வீரர் தன்னுடைய மதிப்பை இழந்தபின் அவரை எந்தவித விளம்பரங்களிலும் WWE பயன்படுத்தாது. ஆனால் அண்டர்டேக்கர் விளம்பரங்களில் உள்ளது, WWE அவரை கொண்டுவர முயற்சிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. போட்டிகளில் பங்கேற்காமல் ரசிகர்களிடம் உரையாடவாவது அண்டர்டேக்கர், WWE அரங்கிற்குள் இறுதி முறையாக வருவார் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், ரஸ்ஸில்மேனியாவின் முக்கிய போட்டியில் பங்குபெறும் ஃபின் பெலோர் எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் அண்டர்டேக்கரை எதிர் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார். இவரின் கருத்தின் அடிப்படையில் போட்டி அமைக்கப்படுமா என்பது சந்தேகமே.
அடுத்தது என்ன?
முதுமையின் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கும் அண்டர்டேக்கர், விரைவில் அதிகாரபூர்வமாக WWE அரங்கத்திற்குள் வந்து தனது ஓய்வினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வு தான் அண்டர்டேக்கருக்கு சரியான தீர்வாக இருக்கும். ரசிகர்களை மகிழ்ச்சி ஊட்டும் வகையில் WWE-வின் வேறு பணிகளில் அண்டர்டேக்கர் ஈடுபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எது என்னவாக இருந்தாலும் சரி அண்டர்டேக்கர் இன் புகழ் வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.