WWE சூப்பர் ஸ்டார்கள் நாம் நினைப்பதை விட கடினமாக உழைக்கிறார்கள். ஆம் அவர்கள் உலகம் அறியும் நட்சத்திரமாக வேண்டும் என்றால் அவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். அவர்கள் வருடத்தின் 300 நாட்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் வாரத்தில் ஐந்து நாட்கள் ரெஸ்ட்லிங்கில் கலந்து கொள்கிறார்கள். இதனால் இவர்கள் தங்கள் நண்பர்களையும் குடும்பத்தையும் விட்டு பெரும்பாலும் பிரிந்தே இருக்க நேரிடுகிறது.
குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு பிரிந்திருக்கும் காரணத்தால் வீரர்கள் WWE-க்கு பின்னால் தங்களுக்குள் நட்பையும் துணையையும் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற WWE நட்சத்திரங்களின் திருமணங்களைப் பற்றிக் காண்போம்.
#8. ரிக் ப்ளேயர் மற்றும் வென்டி பார்லோ
WWE ன் மூத்த வீரர்களில் ஒருவரான ரிக் ப்ளேயர் தன்னுடைய பலநாள் தோழியான வென்டி பார்லோவை இந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இது ரிக் ப்ளேயருக்கு நடைபெறும் ஐந்தாவது திருமணம் ஆகும். இந்த நிகழ்ச்சியில் அவரது மகள் சார்லட் ப்ளேயரோடு சேர்த்து அன்டர்டேக்கர் மற்றும் மைக்கல் மெக்கூல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ப்ளேயர் மற்றும் பார்லோ இருவரும் 2012 ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செல்ல தொடங்கினர். மேலும் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு நிச்சயமும் செய்து கொண்டனர்.
ரிக் ப்ளேயருக்கு முதல் முறையாக 1971 ஆம் ஆண்டு லெஸ்லி குட்மேன் உடன் திருமணம் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் 12 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின் லெஸ்லியிடமிருந்து விவாகரத்து பெற்றார். பிறகு 1983 ல் எலிசபத் ஹாரலை திருமணம் செய்து கொண்டார், இவர்களின் மகள்தான் சார்லட் ப்ளேயர். இவர்கள் இருவரும் 23 வருடங்கள் இணைந்து வாழ்ந்து பின் சட்டப்படி பிரிந்தனர். அதன் பிறகு ப்ளேயர் டிவ்வினி வேன்டிமார்க் மற்றும் ஜாக்லின் பீம்ஸ் ஆகியோரையும் அடுத்தடுத்து திருமணம் செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பரில் புளோரிடாவில் உள்ள ஒரு ரெஸார்ட்டில் ரிக் ப்ளேயர் மற்றும் வென்டி பார்லோவின் திருமணம் நடைபெற்றது.
#7. எம்பர் மூன் மற்றும் மேத்யூ பால்மர்.
WWE RAW – வைச் சேர்ந்த வீரரான எம்பர் மூனுக்கும் இந்தாண்டு திருமணம் நடந்தது. எம்பர் மூன், வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த WWE வீராங்கனையான மேத்யூ பால்மரை லாஸ் வேகாஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடி கடந்த 2015 ஆம் ஆண்டு நிச்சயம் செய்து கொண்டனர். மேத்யூ பால்மர், எம்பர் மூனிடம் ரெஸ்ட்லிங் ரிங்கிற்குள் தன்னுடைய காதலைச் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு எம்பர் மூன் WWE ல் ஒப்பந்தம் ஆனார். அவர் தற்போது வரை NXT வுமன்ஸ் சாம்பியன்ஷிப்க்காக போட்டியிட்டு வருகிறார். பால்மர் தற்போது இன்டிபென்டன்ட் சர்க்யூட்டில் சண்டையிட்டு வருகிறார்.