இந்த வாரம் நடைபெற்ற ராவ் நிகழ்ச்சியில் பெக்கி லிஞச்-க்கு என்ன நடந்தது…?

Nagaraj
ராவ்
ராவ்

டபுள்யூ டபுள்யூ ஈ-யில் வாரம் வாரம் நடைபெறும் ராவ் எபிசோட் நிகழ்ச்சியில் போன வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியை விட இந்த வாரம் சிறப்பாகவே நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ராவ் எபிசோட் நிகழ்ச்சியில் மக்மஹோன் ஃபேமிலிக்கும் ( வின்ஸ் மக்மஹோன், ஸ்டீபனி மக்மஹோன், ட்ரிப்பிள் ஹெச் ) மற்றும் பெக்கி லிஞ்ச்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பெக்கி லிஞ்ச், ரோண்டா ரவுசி, ரியோட் ஸ்குவாட்-க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உங்களுக்கு தெரியாவிட்டால்…

ட்ரிப்பிள் ஹெச், ஸ்டீபனி மக்மஹோன், பெக்கி லிஞ்ச்
ட்ரிப்பிள் ஹெச், ஸ்டீபனி மக்மஹோன், பெக்கி லிஞ்ச்

இந்த வாரம் நடைபெற்ற திங்கட் கிழமை இரவு ராவ் நிகழ்ச்சியில், ட்ரிப்பிள் ஹெச் மற்றும் ஸ்டீபனி மக்மஹோன் ஆகிய இருவரும் சேர்ந்து பெக்கி லிஞ்ச் அவர்களின் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மேடையில் தோன்றினார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால், ட்ரிப்பிள் ஹெச் மற்றும் ஸ்டீபனி மக்மஹோன் ஆகிய இருவரும் பெக்கி லிஞ்சை இடைநீக்கம் செய்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டனர். அதற்கு பிறகு, டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு சொந்தக்காரரான வின்ஸ் மக்மஹோன் மேடையில் தோன்றினார். ஆனால், வின்ஸ் மக்மஹோன் மருமகன் (ட்ரிப்பிள் ஹெச்) மற்றும் மகள் (ஸ்டீபனி மக்மஹோன்) அவர்களை போல் மன்னிப்பு கேட்காமல் பெக்கி லிஞ்ச்-யை நேரடியாகவே 60 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தார். அதன் பிறகு, வின்ஸ் மக்மஹோன் ரெஸ்டில் மேனியா 35-ல் பெக்கி லிஞ்ச் விளையாடவிருந்த மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியை ரத்து செய்தார். அதற்கு பதிலாக , இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிற எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் மகளிர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்பவர் ரெஸ்டில் மேனியா 35-ல் சார்லோட் ஃபிளேர்-யுடன் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெறும் என வின்ஸ் மக்மஹோன் அறிவித்தார்.

ரியோட் ஸ்குவாட், ரோண்டா ரவுசி, பெக்கி லிஞ்ச்
ரியோட் ஸ்குவாட், ரோண்டா ரவுசி, பெக்கி லிஞ்ச்

இந்த ராவ் எபிசோட் நிகழ்ச்சியில் மக்மஹோன் ஃபேமிலி மற்றும் பெக்கி லிஞ்ச் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முடிந்த பிறகு, ரியோட் ஸ்குவாட் , பெக்கி லிஞ்ச் , ரோண்டா ரவுசி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு, ரோண்டா ரவுசி மற்றும் பெக்கி லிஞ்ச் ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து ரியோட் ஸ்குவாட் உறுப்பினர்களுடன் சண்டை இட்டனர். ரோண்டா ரவுசி மற்றும் பெக்கி லிஞ்ச் ஆகிய இருவரையும் கேமராவில் கறுப்பு நிறத்தில் ஒளிபரப்பப்பட்டதால் ராவ்-ன் கடைசியில் மகளிர் சாம்பியன்ஷிப்பை முன்வைத்தனர்.

அடுத்தது என்ன....

ரோண்டா ரவுசி VS ரூபி ரியோட்
ரோண்டா ரவுசி VS ரூபி ரியோட்

ரோண்டா ரவுசி தனது ராவ் மகளிர் சாம்பியன்ஷிப்பை ரியோட் ஸ்குவாட் உறுப்பினரில் ஒருவரான ரூபி ரியோட்-க்கு எதிராக இந்த வாரம் ஞாயிறு இரவு நடைபெற இருக்கிற எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, எலிமினேஷன் சேம்பர் நிகழ்ச்சியில் மகளிர் சாம்பியன்ஷிப்பை வெல்பவர், டபுள்யூ டபுள்யூ ஈ மல்யுத்த போட்டியில் மிகவும் பிரபலமான போட்டியான ரெஸ்டில் மேனியா 35 நிகழ்ச்சியில் சார்லோட் பிளேர்-யை எதிர் கொள்ள நேரிடும். ரெஸ்டில் மேனியா 35 நிகழ்ச்சியானது ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now