முதல்முறையாக சாதித்த ‘செத் ராலின்ஸ்’ & ‘பெக்கி லின்ச்’

Seth rollins
Seth rollins

டபிள்யூ.டபிள்யூ.ஈ பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘ராயல் ரம்பிள்’ போட்டிகள் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கின. அதைப்பற்றிய தகவல்களை இங்கே காண்போம்.

‘ராயல் ரம்பிள்’ போட்டிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 30 பேர் பங்கேற்கும் எலிமிநேஷன் ராயல் ரம்பிள் போட்டியாகும். அதில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பது கனவாகும். ஏனெனில் இந்த போட்டியில் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகள் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மிகப்பெரிய மல்யுத்த திருவிழாவான ‘ரசல்மேனியா’ போட்டியில் சாம்பியன்ஷிப் வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

பெண்களுக்கான 30 பேர் ‘ராயல் ரம்பிள்’ போட்டிகள் முதலில் தொடங்கியது. இந்த போட்டியில் இரண்டாவதாக வந்த ‘நட்டாலியா’ சுமார் 55 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். பதிமூன்றாவது நபராக உள்ளே நுழைந்த முன்னாள் சாம்பியன் ‘சார்லட்’ ஆரம்பம் முதலே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இந்த போட்டியை வெல்வதற்கான அதிக வாய்ப்புடைய வீராங்கனையாக கருதப்பட்ட ‘நயா ஜாக்ஸ்’ 29-ஆவது நபராக உள்ளே நுழைந்தார்.

Becky lynch
Becky lynch

இந்நிலையில் எவரும் எதிர்பாராத விதமாக ‘லானா‘ காயமடைய அவருக்கு பதிலாக பலத்த கரகோஷத்துடன் ‘பெக்கி லின்ச்’ 28 வது நபராக உள்ளே நுழைந்தார். இறுதியாக ‘சார்லட்’ மற்றும் ‘பெக்கி லின்ச்’ களத்தில் இருக்க சார்லட்டை வெளியே தள்ளி ‘பெக்கி லின்ச்’ முதல்முறையாக ‘ராயல் ரம்பிள்’ போட்டியை வென்று சாதனை படைத்தார்.

பின்னர் ஆண்களுக்கான போட்டியில் சென்ற முறை வெற்றியாளரான ‘நாக்கமுரா’ மூன்றாவது வீரராக உள்ளே நுழைந்தார். இருப்பினும் அவர் இந்த முறை முஸ்தபா அலியினால் வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் ஆதரவுடன் பத்தாவது நபராக உள்ளே நுழைந்த ‘செத் ராலின்ஸ்’ சிறப்பான ஒரு ஆட்டத்தை இங்கு வெளிப்படுத்தினார்.

26 வது வீரராக உள்ளே நுழைந்த ‘பாபி லாஷ்லி’யை ராலின்ஸ் உடனடியாக வெளியேற்ற, கோபம் கொண்ட லாஷ்லி ராலின்சை வெளியே இழுத்து பலமாக தாக்கினார். போட்டியை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள வராக கருதப்பட்ட ‘பிரான் ஸ்ட்ரவுமன்’ 27 ஆம் நபராக உள்ளே நுழைந்தார்.

Randy orton
Randy orton

லாஷ்லி யால் கடுமையாகத் தாக்கப்பட்ட ‘செத் ராலின்ஸ்’ இறுதிக்கட்டத்தில் உள்ளே நுழைந்து இறுதியாக ‘பிரான் ஸ்ட்ரவுமன்’ஐ வெளியேற்றி போட்டியை வென்றார். முன்னதாக 30 ஆவது நபராக உள்ளே நுழைந்த ‘ஆர் டிருத்’ஐ அடித்து வீழ்த்தி ‘நயா ஜாக்ஸ்’ இந்தப் போட்டிக்குள் நுழைந்தார், பின்பு ‘ரே மெஸ்டரியோ’ வினால் வெளியேற்றப்பட்டார். இவர் பெண்கள் போட்டியில் சார்லட் மூலம் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் தரப்பில் போட்டியை வென்ற ‘செத் ராலின்ஸ்’ மற்றும் பெண்கள் தரப்பில் போட்டியை வென்ற ‘பெக்கி லின்ச்’ ஆகிய இருவருக்கும் இது முதல் ‘ராயல் ரம்பிள்’ வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

‘செத் ராலின்ஸ்’ தனது போட்டியாளராக ‘பிராக் லெஸ்னர்’ அல்லது ‘டேனியல் பிரயன்’ இருவரில் யாரேனும் ஒருவரை தேர்ந்தெடுப்பார். மேலும் ‘பெக்கி லின்ச்’ தனது போட்டியாளராக ‘ராண்டா ரவுசி’ அல்லது ‘அசுகா’ இவற்றில் ஒருவரை தேர்ந்தெடுப்பார். சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த போட்டியை நேரில் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.