WWE மற்றும் அதன் மூத்த நிர்வாகிகள் ஏதேனும் ஒரு கணத்தில் ரசிகர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தற்போது ஸ்டெப்பினி மெக்மான் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல. ஆனால் இந்த வகையான நடவடிக்கைகள் எப்போதும் இருக்கும் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. எப்படியிருந்தாலும் பல நேரங்களில் WWE ரசிகர்களுக்கு தேவையானவற்றை தங்களது நிகழ்ச்சிகளின் வாயிலாக கொடுத்திருக்கிறது. அது ரசிகர்களுக்கு விருப்பமான வீரர்களுக்கான வாய்ப்பளிப்பதிலும் சரி, சண்டைகளை புதிதாகவும், மிகவும் சுவாரசியமாகவும் மாற்றுவதிலும் சரி, நிறைவான பல கனவு போட்டிகளை நடத்துவது சிறப்பானதாகும்.
நாடகத்தன்மையுடன் கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தரக்கூடியதாக WWE எப்போதும் விளங்குகிறது. இதற்கு காரணம் அவர்கள் அதன் நாடகத்தன்மையையும், கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை சீரான இடைவெளியில் மாற்றிக் கொண்டுவருவதும், அதைவிட இவற்றையெல்லாம் எவ்வளவு தூரம் வரை புதிராகவும், நம்பக்கூடியதாகவும், அதேசமயம் பார்வையாளர்கள் விரும்பும் வகையில் கொண்டுசெல்வதுமாகும்.
WWE-ம் பலமுறை ஆபத்துக்குள்ளாக்கும் பல தவறுகளை செய்துள்ளது. உங்களுக்கு இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் ரோமன் ரெயின்ஸை அடுத்த WWE-ன் முகமாக கொண்டுவரும் கருத்தில் வின்ஸ் மெக்மான் அவ்வளவு பிடிவாதமாக இருந்தார். WWE-ன் சுவாரசியங்களை கூட்டும் கற்பனை அணியினரும் இந்த மாதிரியான பல தவறுகளை செய்துள்ளனர். இந்த கட்டுரையில் நாம் WWE செய்யத் தவறிய அற்புதமான யோசனைகள் மூன்றினை பார்ப்போம்.
#3. முற்றிலும் மாறுபட்டிருக்க வேண்டிய ஜான் ஸீனாவின் தன்மை
ஜான் ஸீனா இதுவரை தன்னுடைய பெரும்பாலான வாழ்க்கையை WWE-ல் தான் கழித்துள்ளார். அந்த வகையில் 'தி ஸீனேஸன் லீடர்' என்றழைக்கப்படும் இவர் தன்னுடைய குழந்தை முகத்தினாலும், WWE-ன் முகமாகவும் அனைவராலும் அறியப்படுபவர். ஜான் ஸீனா கிட்டத்தட்ட அங்குள்ள பெரிய வீரர்கள் அனைவருக்கும் எதிராக இருந்துள்ளார். ஆனால் தன்னுடைய நிலைமை எவ்வளவு ஆபத்தில் இருந்தாலும், இதுவரை அவர் 'இருண்ட பக்கம்' எனப்படும் ரசிகர்களுக்கு எதிரான கதாபாத்திரத்தின் பக்கம் சென்றதில்லை.
சந்தேகமில்லாமல் குழந்தை முகம்கொண்ட ஸீனாவால் WWE-க்கு பலகாலமாக பணம் வருவதாலும், நிச்சயமாக இன்றும் பல இளைய தலைமுறையினருக்கு சூப்பர் ஹீரோவாக இருப்பதாலும் தான் என்னவோ, WWE இவரின் கதாபாத்திரத்தன்மையை மாற்றவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு இவரை பலகாலமாக நல்லவராகவே பார்த்து சலித்துவிட்டது என்பதே உண்மை. மேலும் பலர் ஸீனா அவரது நல்லவன் கதாபாத்திரத்தில் இருக்க வேண்டும் என்று மூர்க்கமாக இருப்பதாக கருதுகிறார்கள். அவர்களின் எண்ணம் என்னவென்றால் ஸீனா அவரது தன்மையை முற்றிலும் மாற்றி, மீண்டும் புத்துணர்ச்சியுடன் தன் WWE வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதாகும். ஏனென்றால் இவர் சமீபமாக அந்த அளவிற்கு WWE-க்கு வருவதில்லை. ஆனால் WWE ஏன் இன்னும் ஸீனா பாத்திரத்தின் தன்மையை மாற்றவில்லை என்று ரசிகர்கள் கேள்வியெழுப்புகின்றனர். எது எப்படியிருந்தாலும் சரி ஜான் ஸீனாவை நல்லவராக வைத்திருக்கவே வின்ஸ் மெக்மான் விரும்புகிறார் போலும்.
#2. ப்ரௌன் ஸ்ட்ரோமனை முன்னனி வீரராக அனைத்து வகையிலும் மாற்றயிருக்கலாம்
வந்த இரண்டு வருட காலத்தில், 'மான்ஸ்டர் அமாங் மென்' என்றழைக்கப்பட்ட இவர் தன்னுடைய தனி முயற்சியினால் தன்னை ஒரு சிறந்த வீரராக ஆக்கியுள்ளார். ஆம் இவரிடம் WWE-ன் ஆகச்சிறந்த வீரருக்கு இருக்க வேண்டிய அனைத்து திறமைகளும் உள்ளது. இதனால் இவர் மன்டே நைட் ராவில் தொடர்ச்சியாக ஒரு முன்னணி வீரராக வலம்வருகிறார். மேலும் இவர் உருவத்தில் பெரிதாகவும், அளவுக்கு அதிகமான வலிமை வாய்ந்தவராகவும், தன்னுடைய உருவத்திற்கு சம்பந்தமில்லாத மிகவும் சுறுசுறுப்புடனும் அதேசமயம் பார்வையாளர்களை கவரக்கூடிய வகையில் அழகாகவும் உள்ளார். எனவே இவருடன் சேர்ந்து WWE பயணித்தால் அதன் அடுத்த பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் இந்த யோசனையை WWE-ன் உயர்மட்ட குழு கிடப்பிலே போட்டுள்ளது.
ப்ரௌன் ஸ்ட்ரோமனுக்கான சரியான வாய்ப்புகள் அமையாததற்கு காரணம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இரண்டு பெரிய நட்சத்திரங்களான ரோமன் ரெயின்ஸ் மற்றும் ப்ராக் லெஸ்னர் ஆகியோர் WWE-க்கான சாம்பியன்ஷிப் போட்டி பட்டியலில் இருந்ததால்தான். இன்னும் ஒருமுறை ஸ்ட்ரோமனுக்கான வாய்ப்பு கிடைக்குமானால் அவர் அந்த பட்டத்தை வெல்வார் என்பதில் சந்தேகமில்லை.
#1. ரோமன் ரெயின்ஸை தி ஆத்தர்ஸ் ஆஃப் பெயின் அணியுடன் இணைத்திருக்கலாம்
தற்போது ரோமன் ரெயின்ஸ் WWE-ல் இல்லையென்றாலும் அவர் இருந்த போது இந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம். ரசிகர்கள் பலருக்கு இவரைப் பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, எது எப்படியிருந்தாலும் இவர் WWE-ன் யூனிவர்சல் சாம்பியன் ஆவார். குழந்தைகளுக்கு விருப்பமான முகமாக இவர் இருந்தாலும், பார்ப்பதற்கும் சரி பேசும்போதும் சரி, ஏன் இவர் அணியும் உடையும், சண்டையிடுவதும் படு மாஸாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் வின்ஸ் மெக்மான் வலுக்கட்டாயமாக இவரை WWE-ன் முன்னனி முகமாக அமர்த்தினார் என்பதே உண்மை. ஆனால் அவர் உண்மையில் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவும் இருந்தது நாம் அறிந்ததே.
பல ரசிகர்கள் ரோமன் ரெயின்ஸ்க்கு எதிராக இருந்தாலும், WWE இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரை முன்னேற்றிக் கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால் ரோமன் ரெயின்ஸை அப்படியே மாற்றி அதாவது அவரை ஒரு மாறுதலுக்காக ஆத்தர்ஸ் ஆஃப் பெயின் அணியுடன் இணைக்க வேண்டுமென்பதாகும். ரோமன் WWE-ன் முன்னணி வீரராகவும், அதன் விளம்பர மாடலாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீண்டும் திரும்ப WWE க்குள் வந்தால் இந்த யோசனையை முன்னெடுத்தால் நன்றாயிருக்கும், இல்லையென்றால் அவர் முன்னணி வீரராக சிலகாலம் மட்டுமே வலம் வருவார்.