என்ன கதை...
டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது இந்த வாரம் ஸ்மேக் டவுன் எபிசோடில் இரண்டு பிரிவுகளை அறிவித்தது. அதேபோல் மணி இன் தி பேங்க் pay per view முடிந்த பிறகு இந்த வாரம் நடைபெற இருக்கிற ஸ்மேக் டவுன் எபிசோடில் ரோமன் ரெய்ங்ஸ் மற்றும் எலியாஸ் இவர்கள் இருவருக்கும் மறுபடியும் ஒரு போட்டி நடைபெற இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் காயமடைந்த மல்யுத்த வீரர் பிக் ஈ திரும்ப வருகிறார் மற்றும் பெண்கள் பிரிவில் ஸ்மேக் டவுன் சாம்பியனாக பேய்லே-ன் முதல் தோற்றம்.
உங்களுக்கு தெரியாவிட்டால்…
போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் ரோமன் ரெய்ங்ஸ் மற்றும் எலியாஸ் இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு எலியாஸ் நுழைவாயில் முன்பாக கித்தார் வாசித்து கொண்டிருந்தார். திடீரென வந்த ரோமன் ரெய்ங்ஸ் எலியாஸ்-ன் பின்னாடி இருந்து தாக்கினார். இந்த போட்டி ஆனது சிறிது நேரத்தில் முடிந்தது. இந்த போட்டியில் ரோமன் ரெய்ங்ஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது இந்த வாரம் ஸ்மேக் டவுன் எபிசோடில் ரோமன் ரெய்ங்ஸ் மற்றும் எலியாஸ் இவர்கள் இருவருக்கும் மறுபடியும் இன்னொரு போட்டியை அறிவித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள சூப்பர் டவுன் நிகழ்ச்சியில் ரோமன் ரெய்ங்ஸ் ஷேன் மக்மஹோன்-யை எதிர்கொள்ளவிருக்கிறார்.
பெய்லே போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் பெண்கள் பிரிவில் நடைபெற்ற லேடர் போட்டியில் வெற்றி பெற்றார், இந்த மணி இன் தி பேங்க்-யை வைத்து ஸ்மேக் டவுன் சாம்பியன்ஷிப்பை வென்றார். ஸ்மேக் டவுன் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியானது மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் பெக்கி லின்ச் மற்றும் சார்லட் ப்ளேயர் இவர்கள் இருவருக்கும் நடைபெற்றது.
இந்த போட்டியில் சார்லட் ப்ளேயர் வெற்றி பெற்றார், அப்போது திடீரென வந்த பெய்லே மணி இன் தி பேங்க்-யை வைத்து ஸ்மேக் டவுன் சாம்பியன்ஷிப்பை வென்றார். பெய்லே தனது மல்யுத்த வாழ்க்கையில் மணி இன் தி பேங்க்-யையும், ஸ்மேக்டவுன் சாம்பியன்ஷிப்-யையும் முதல் முறையாக வென்றுள்ளார்.
பிக் ஈ சில வாரங்களுக்கு முன்பு காயமடைந்தார். பிக் ஈ காயமடைந்த பிறகு அவருக்குப் பதிலாக தி நியூ டே டீம் கெவின் ஓவன்ஸ்-யை தங்களுடைய அணியில் சேர்த்தனர். கெவின் ஓவன்ஸ் அணியில் சேர்ந்த பிறகு திடீரென கோபி கிங்ஸ்டன்-யை தாக்கினார். அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் ஸ்மேக் டவுன் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கோபி கிங்ஸ்டன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிக் ஈ டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு மறுபடியும் வரவுள்ளதால், தி நியூ டே டீம் இந்த வாரம் நடைபெறவுள்ள ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் “Welcome Back Big E” என்று கொண்டாட காத்திருக்கின்றனர்.