WWE RAW-ல் கேமராமேனை தாக்கியதற்காக ப்ராக் லெஸ்னர் காலவரையின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டார், ஏனெனில் WWE போன்ற உலகளாவிய நிகழ்ச்சியில் இருக்கும் போது நிச்சயமாக மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் அதை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் வீரர்களை WWE பலமுறை வெவ்வேறு காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்துள்ளது. அந்த வகையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தற்போதுள்ள மிகப் பிரபலமான வீரர்கள் ஐந்து பேரைப்பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
#5. சின் காரா :
தி ஹை ப்ளையிங் மெக்சிகன் மற்றும் லூகா டிராகன்ஸின் ஒரு பகுதியான சின் காரா 2011 ஆம் ஆண்டு WWE ல் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
WWE ன் உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த கொள்கைகளை மீறியதன் காரணமாக அந்நிறுவனம் இவரை சஸ்பெண்ட் செய்தது, ஆனால் இது மற்ற இடைநீக்க வழக்குகளை போல் இல்லை. இவர் ரிங்கிற்குள் தன்னுடைய செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள போதை ஊசியை பயன்படுத்தியது தெரிய வந்ததன் காரணமாக WWE இந்த நடவடிக்கையை எடுத்தது.
சின் காராவின் இந்த செயல் தொழில்முறையின் நன்னடத்தை விதி மீறல்களின் கீழ் வருகிறது. மற்ற விளையாட்டுகளில் இதுபோன்ற வழக்குகளில் சிக்கிக்கொள்ளும் வீரர்கள் வாழ்நாள் தடையை அனுபவிப்பார்கள். அதனுடன் ஒப்பிடுகையில் சின் காரா மிகப்பெரிய தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டார் என்பதே உண்மை.
#4. டைடஸ் ஓநீல் :
டேனியல் பிரையனின் ஓய்வு பற்றிய அறிவிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த WWE லாக்கர் ரூமும், வின்ஸ் மக்மாஹன், ஸ்டபேனி மக்மாஹன் மற்றும் டிரிபிள் எச் ஆகியோருடன் இருந்தது. அவர்கள் அனைவரும் டேனியல் பிரையனுக்கு அவரது ஓய்வு உபசரிப்பு விழாவை மறக்க முடியாத ஒரு நினைவாக அமைப்பதற்கான கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது டைடஸ் ஓநீல் வின்ஸ் மக்மாஹனை வம்படியாக கையால் பிடித்து இழுத்து தனக்கு முன் நிறுத்தினார். இந்த செயல் வின்ஸ்க்கு எரிச்சல் உண்டாக்கியது. உடனடியாக நன்னடத்தை விதி மீறல்களின் கீழ் டைடஸை 90 நாட்கள் நீக்கினார். பின்னர் வின்ஸ் தனது முடிவை பலமுறை ஆராய்ந்ததன் மூலமும், ரசிகர்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை வின்ஸ்க்கு எதிராகவும் பதிவிட்டதால் டைடஸ்க்கு அளிக்கப்பட்ட சஸ்பெண்ட் தண்டனை 60 நாட்களாக குறைக்கப்பட்டது.
#3. க்ரிஸ் ஜெரிக்கோ:
WWE க்கு வந்துவிட்டு பின் ஏதாவது ஒரு காரணத்தால் வெளியேறுவது க்ரிஸ் ஜெரிக்கோவுக்கு பழக்கமாகிவிட்டது. இந்த சஸ்பெண்டானது 2012 ஆம் ஆண்டு 30 நாட்களுக்கு தரப்பட்டது. இந்த தண்டனைக்கான காரணம் மிகவும் தீவிரமானது. ஸா பௌலோவில் 2012 ஆம் ஆண்டு மே 24 அன்று நடைபெற்ற WWE லைவ் ஈவன்டில், பிரேசில் நாட்டு தேசியக் கொடியை அவமதித்தற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டது.
க்ரிஸ் ஜெரிக்கோ மற்றும் சிஎம் பன்ங்கிற்கு இடையேயான சண்டையில், ரிங்கிற்குள் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் பறந்து கொண்டிருந்த பிரேசிலின் கொடியை பிடுங்கி அதை உடைத்து, வெளியே தூக்கி எறிந்தார். நிலைமை கை மீறி போவதை அறிந்த காவலர்கள் உடனே அங்குவந்து மேலும் அந்த நிகழ்வு தீவிரமடையாமல் தடுத்தனர். இதற்காக அவர் 30 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் ஜூன் 24 ஆம் தேதி நடந்த ராவிற்கு திரும்பினார்.
க்ரிஸ் ஜெரிக்கோ ஒரு திறமையான வீரர், மேலும் பல ரசிகர்களால் விரும்பப்படும் பிரபலமும் கூட, ஆனால் யாராக இருந்தாலும் WWE-ன் மாண்பை கெடுக்கும் வகையில் நடந்துகொள்பவர்களுக்கு தண்டனை நிச்சயம்.
#2. டால்ப் ஜிக்லர் :
தி ஷோ ஆப் என்றழைக்கப்படும் டால்ப் ஜிக்லர் 2008 ஆம் ஆண்டு உடல்நலம் சார்ந்த விதி மீறலுக்காக 30 நாட்களுக்கு WWE ல் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுவும் போதை மருந்துகளை எடுத்துக் கொண்டதற்காக அளிக்கப்பட்ட சஸ்பெண்ட் தண்டனை ஆகும். இதில் சிக்கியது பற்றி டால்ப் ஜிக்லர் கூறியதாவது,"இது மிகவும் மோசமானதொரு தவறாகும். இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், மேலும் இந்த ஒருமாத காலம் எனக்கு, நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம், யாருடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும், இதிலிருந்து சுலபமாக எவ்வாறு வெளியேற வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. இதுபோன்றதொரு தவறை மீண்டும் நான் எப்போதும் செய்ய மாட்டேன் ".
#1. ரான்டி ஆர்டன் :
சஸ்பெண்சன் என்பது ஒன்றும் இவருக்கு புதிதல்ல. ஆம் இவர் ஒருமுறை அல்ல பலமுறை WWE ல் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முதல் முறையாக ரான்டி ஆர்டன் ஏப்ரல் 2006 ல் ஸ்மாக் டவுன் டாபிங்கின் பேக் ஸ்டேஜில், மாரீயுஜூனா ஜாயின்ட் என்ற ஒருவித புகையிலையை தனக்காக தயாரித்து கொண்டிருந்தாக புகார் எழவே, நன்னடத்தை விதி மீறல்களின் கீழ் 60 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் முடிந்து திரும்பிய குறுகிய காலத்திலேயே மீண்டும் ஆரோக்யம் சார்ந்த கொள்கைகளை மீறியதன் காரணமாக, ஆகஸ்ட் 2006 ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதன் பிறகு மீண்டும் 2012 ஆம் ஆண்டு மறுபடியும் போதை பொருட்களை பரிசோதித்ததன் காரணமாக 60 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.