குத்துச்சண்டை என்பது எவ்வகையில் பரவலாகக் காணப்படுவது என்றால் வெறும் ஒரு போட்டியென்று கூடக் கருதாது, வலியைத் தாங்காது துடிக்கும் போட்டியாளர்கள் என்றே கருதுகிறார்கள்.உண்மையில், களத்திற்கு வருமுன்னே தக்க முன்னேற்பாடான பாதுகாப்பு நலன்களை மேற்கொள்கின்றனர்.ஆனால், நாம் வெளியே இருந்து உற்றுநோக்கியேனும், அதன் பின்புலம் விளங்கும்.அது எவ்வாறெனில் இவை ஆர்வமூட்டக்கூடிய வகையில் இருந்தாலும், வெறும் திரை எனும் மாயையை பயன்படுத்திக் கொண்டு போட்டியாளர்கள் தமக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்குகின்றனர்.இவ்வகையான மிடுக்கான ஆடம்பர வாழ்க்கை நெறியை அவர்கள் கடைப்பிடித்தாலும் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது.
எனவே,நாம் அனைவரும் இவர்களது திரைமுகத்தையே உண்மையானதென்-று கருதிவிட முடியாது. ஒரு நன்கறிந்த போட்டியாளருக்கும் கூட இது போன்ற நெருக்கடிகள் வந்த வண்ணமே உள்ளன.அப்படிப்பட்ட ஐந்து நன்கறிந்த மரணத்தையே வென்ற போட்டியாளர்களைப் பற்றி இனி காண்போம்.
5.ஸ்காட் ஸ்டெய்னர்(SCOTT STEINER)
இவ்வகையான பொழுதுபோக்குத்தனமான குத்துச்சண்டை போட்டிகளில் ஒருகாலத்தில் மிகவும் பரிட்சயமானவரான ஸ்கார் ஸ்டெய்னர், கடும்சவாலளிக்கும் பொழுதுபோக்கு வீரராகத் திகழ்ந்தார்.இவரது பங்கேற்பான WCW மற்றும் WWE தொழிற்போட்டித் தொடர்களில் பெரும் வீரராகவும் திகழ்ந்தார்.தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் ஒரு போட்டியாளராகவும் தன் திறமைகளை வெளிக்கொணர்ந்தார்.
கடும் முன்கோபக்காரரான இவர் பலநேரங்களில் இவரது போக்கு கைகலப்புகளில் முடிவடைந்தன. ஒருமுறை TNA ஒளிபரப்பில், இவரின் எதிராளி ஒருவர் தொண்டையில் அடிக்க இவருக்கு இரத்தவாந்தியே எடுக்க நேரிட்டது.அவ்வேளையில் இவரைச் சோதித்த மருத்துவர்கள், இவர் இன்னும் ஐந்து மணிநேரம் மட்டுமே உயிரோடு இருப்பார் என்றனர்.இந்தப் பெரும் தடையையும் சில மாதங்களிலே உடைத்து, மீண்டும் உயிர்ப்புடன் எழுந்து வந்து குத்துச்சண்டை போட்டிகளில் தொய்வின்றி சாதித்தவர்களில் இவரும் ஒருவர்.
4.நியூ ஜேக் (NEW JACK):
மிகவும் பயப்படுத்தக்கூடிய போட்டியாளர்களில் ஒருவர் தான் இந்த நியூ ஜேக்.இவர் மிகவும் வெளிப்படை தன்மையுடன் எதிராளியை கலங்கடித்ததை பேசக்கூடியவர்.இவர் பலராலும் விரும்பி நேசிக்கப்பட்ட காரணம் என்னவென்றால் இவரது எதிராளியை கலங்க வைக்கும் ஆக்ரோச குணமே.
இவரின் பெயர் பிரபலமடையாத கட்டத்தில் நன்கறிய காரணம் ஒரு 17 வயது சிறுவனை அடிக்க நேரந்தது அதுவும் ECW-இல்.அதுவே இவரை ஒரு புதுவகையான போட்டிக்குக் கலந்துகொள்ள அடிகோலியது.அங்கு அவர் களத்தில் தனது முதல் காலடி எடுத்து வைத்தார், ஆனால் எதிராளி இவரைத் தலையில் அடித்துத் தரையில் வீழச்செய்து மூளை இரத்த கசிவினையே உண்டாக்கியது.மேலும் இதனால் தனது ஒரு கண் பார்வையையே இழந்தார்.இவர் சிகிச்சைகளை மேற்கொள்ளப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார் இன்றும் கூட அதனது தாக்கம் இவரது உடலில் உள்ளது.
இவர் பலவருட இடைவேளைக்குப் பின்னர், ஒரு XPW விளம்பரத்தில் கலந்துகொள்ள வலியைபொறுத்துக் கொள்ளும் தாங்கிகள் உதவியுடன் கலந்து கொண்டார்.ஒருமுறை இவர் கயிற்றைக் கொண்டு இறங்கும்போது தன் தொடையை கிழித்துக் கொண்டார். பலர் அறிந்த வகையில் இவர் கஷ்டமற்ற வாழக்கையை வாழவில்லை. அதுமட்டுமில்லாமல் இவர் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து தன்னை அதற்கு எதிராகப் போராடி தன் மரணத்தை வென்றார்.நரக வேதனையிலிருந்து தப்பி பிழைத்து உயிர்ப்புடன் இருந்ததனாலேயே இவர் ஒரு சகாப்தமாக இன்றளவும் போற்றப்படுகிறார்.
3.வேட் பேரட் (WADE BARRETT):
வலிமையுடைய ஆடவர்களின் போட்டியாக WWE திகழ்கிறது, அதிலும் சில போட்டியாளர்கள் கடும் கட்டுக்கோப்பான உடலமைப்பு உள்ளவர்களே.இன்றைய உலகில், இவர்கள் போட்டியின் இறுதியில் தங்களது உடலை வருத்தி எலும்புகள் உடைந்துள்ளபோதும் போட்டியிட்டதனாலே கடும் போட்டியாளர்களாகத் திகழ்ந்தனர்.அத்தகைய போட்டியாளர்களில் ஒருவரான வேட் பேரட், இன்றைய முட்டாள் தனமான குத்துச்சண்டை வியாபாரத்தில் கடும் போட்டியாளராகவே கருதப்படுகிறார்.இருப்பினும் ஒருசிலரே இவரது பின்னடைவு மற்றும் இவரை இறந்ததாகவே கருதப்பட்டதை அறிந்தவர்கள்.
இவர் ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்த நேரத்தில் ஒரு 'புடா போர்'என்ற ஒருவித போட்டியில் பங்கேற்றார், மேலும் தன் எதிராளிகளை தோற்கடித்து ரொக்கங்களை அள்ளினார்.இருந்த போதிலும், பேரட் போட்டிக்குப் பிறகு, அடையாளமற்ற ஒருவரால் 8 அங்குல கத்தியால் குத்தப்பட்டார்.பின்பு அவர் தன் உடலை ரத்தப்போக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள போட்டியில் வென்றபணத்தையும் விட்டு விலகனார்.
2.பெர்ரி சாட்டர்ன்(perry saturn):
பெர்ரி சாட்டர்ன் ஒரு பெண்ணை காப்பாற்றிய போது தனது வாழ்வை மாய்த்துக்கொணடார்.இவர் ரேடிக்கல்ஸ் (Radicalz)என்ற ஒரு குழுவில் கிறிஸ் பெனாய்ட் (Chris Benoit) மற்றும் எட்டி கெர்ரோ (Eddie Guerrero) மற்றும் டீன் மெலன்கோ (Dean Malenko) ஆகியோருடன் இணைந்து தன்னை குறுகியகாலம் ஈடுபடுத்திக்கொண்டதில் அறியப்படுகிறார்.இவர் ட்ரூ பொட்டன்ஷியல் (true potential)- என்பதில் தன்னை ஒருபோதும் நிரூபித்து காட்டியதில்லை.
அதிகப்படியான காயங்களால் இவருடைய குத்துச்சண்டை வாழ்க்கை குறைந்தது.WCW மற்றும் ECW போன்ற தொடர்களில் கலந்துகொண்ட பின்னரே WWE-க்கு வந்தடைந்தார்.இவர் ஒருமுறை WCW டெலிவிஷன் சாம்பியனாகவும் விளங்கினார்.
இவரது 2004 ஓய்வுக்கு பிறகு , பொதுப்பார்வையிலிருந்து சிறிது சிறிதாக விலகினார். அக்காலத்தில் இரு நபர்கள் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்டபோது இவர் அவர்கள் இருவரையும் சண்டையிட்டு அப்பெண்ணை காப்பாற்றியதில் நன்கு அறியப்பட்டார்.அங்கு சண்டையிட்டபோது இவர் இருமுறை துப்பாக்கியால் சுடப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.தன் கழுத்து மற்றும் வலது தோல்பட்டையில் சுடப்பட்டபோதும் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை கூட இவரால் உணர முடியவில்லை.இவர் methamphetamine என்னும் ஒருவகையான போதைக்கு அடிமையாகி ஈராண்டுகளுக்கு தன் சொந்த வீட்டையும் இழந்தார்.
1.ரிக் பிளேய்ர் (Ric flair)
இக்கட்டுரையில் முதல் இடத்தைப் பெற்றவர் பதினாறு முறை உலக சாம்பியனான ரிக் பிளேய்ர்.'ஜெட் பிளைன், லைமௌஸின் ரைடின், கிஸ் ஸ்டீலின், வீலின் என்றழைக்கப்பட்ட இவர் அனைத்து கால தொழில்முறை குத்துச்சண்டை வீரராவார்.WWE ஹால் ஆப் பேம் என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டவரும் 80,90களில் உலகின் பிரபலமான ஒரே வீரராகவும் திகழ்ந்தார்.இவரது ஆரம்பகால வாழ்க்கையில் மரணத்தை வெல்லாது இருந்தால் இத்தகைய சாதனைகள் நடந்திருக்காது.
1975 அக்டோபர் 4இல் விட் கிரோக்கெட் (David Crockett), ஜானி வேலன்டைன்(Johnny Valentine), மிஸ்டர்.ரெஸ்ட்லிங் (Mr Wrestling) மற்றும் பாப் ப்ரெக்கர்ஸ் ( Bob Bruggers ) ஆகியோருடன் இணைந்து இவர் வெலிங்க்டன்னிற்கு விமானத்தில் சென்றபோது விமானம் ஓடுபாதையில் நெருங்கும்போது எரிபொருள் தட்டுப்பாட்டினால் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது .இரண்டுநாள் கடும் போராட்டத்திற்கு பின்னர் விமானி தன் உயிரை இழந்தார் மற்றும் இதர பயணிகளுக்கும் கடும் காயங்கள் ஏற்பட்டது.இவரது முதுகு மூன்று இடங்களில் முறிவுற்றது.அதனால் அவர் நடக்கக்கூடாது என்றும் கூட அறிவுறுத்தப்பட்டது.24வயதே ஆன பிளேய்ர்,பிஸியோதெரபி சிகிச்சை மூலம் மூன்றே மாதங்களில் நடைமுறை வாழ்வுக்கு திரும்பினார்.
இது போன்ற வீரர்களே வீழ்ந்து படுக்கையில் கிடந்த பொழுதும் தனக்கு எதிரான மரணத்தையே வென்று மீண்டும் சண்டையிட வந்ததனால் குத்துச்சண்டை உலகில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பெற்றுள்ளனர்.வெறும் தொழிற்போட்டிகள் எனக் கூடக் கருதாது தன்னாலும் சாதிக்க முடியும் என நிரூபித்த இவர்களே உண்மையான சாதனையாளர்கள்.இவர்கள் நம்மைக் குத்துச்சண்டை உலகிற்கு மட்டும் அல்லாது நமது வாழ்விற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர்.இவர்களே நம் வாழ்க்கையில் சிறக்க உதவும் ஊன்றுகோலாக இருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன்.