ஒரே ஒரு நாள் மட்டும் WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை வைத்திருந்த ஐந்து வீரர்கள்

Rey mysterio
Rey mysterio

WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை ஒருவரிடமிருந்து பறிப்பது WWE போட்டியில் ஒரு பகுதியாகும். இவ்வாறு பறிப்பதினாலோ அல்லது பறிகொடுப்பதினாலோ அந்த வீரர்களின் பெயர் பல வருடங்கள் கழித்தும் WWE ன் வரலாற்றில் இடம்பெறும். அந்த வகையான மேட்ச்சுகளை ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை பற்றி, வீரர்கள் அனைவருக்கும் உள்ள ஒத்த கருத்து என்னவென்றால், அவர்கள் ஆணோ அல்லது பெண்ணோ WWE ல் உள்ள வீரர்களுக்கு, அந்த மேட்ச் கடினமானதோ சுலபமானதோ, அந்த மேட்ச் புதுமாதிரியானதோ இல்லையோ, அது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறதோ இல்லையோ சாம்பியனாக ஆகியே தீர வேண்டும் என்பதாகும்.

WWE ல் உள்ள ஒவ்வொரு சாம்பியன்ஷிப்பிற்கும் தன்னகத்தே ஒரு வரலாறு உண்டு. அதிலும் WWE சாம்பியன்ஷிப் பெல்ட் அறிமுகப்படுத்தப்பட்டு இந்த வருடத்துடன் 55 ஆண்டுகள் ஆகிறது.

சில சாம்பியன்ஷிப்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டதால் இன்னும் பிரபலமாகமலே இருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் NXT யுனைடெட் கிங்டம் சாம்பியன்ஷிப்.

ஒரு சில சூப்பர் ஸ்டார்களைப் பொருத்தவரை, அவர்கள் பல்வேறு கடினமான சண்டைகளுக்குப் பிறகு இறுதியாக சாம்பியன்ஷிப் பெல்ட்டை கைப்பற்றுவர், ஆனால் அது விரைவிலேயே அவர்களிடமிருந்து பல்வேறு காரணங்களுக்காக பறிக்கப்பட்டுவிடும்.

அப்படி விரைவிலேயே பறிக்கப்பட்ட சாம்பியன்ஷிப் பெல்ட்டை வைத்திருந்த ஐந்து வீரர்களின் பட்டியலை இந்தக் கட்டுரையின் மூலம் காணலாம்.

#5. WWE சாம்பியன் யோக்கோஜுனா(1993).

யோக்கோஜுனா
யோக்கோஜுனா

மலை போன்ற மனிதனான யோக்கோஜுனா விதியின் வசத்தால் 1993 ல் நடந்த ராயல் ரம்பள் வின்னராக ஆனார். அதன் மூலம் ப்ரட் ஹார்ட்டிற்கு எதிராக WWE சாம்பியன்ஷிப் மேட்ச்சுகான வாய்ப்பு அமைந்தது. இதன் காரணமாக சீஸர்ஸ் பேலஸ்-ல் நடைபெற்ற Wrestlemania 9 வில் Mr. வுஜியின் உதவியுடன் யோக்கோஜுனா ஹிட் மேனை வீழ்த்தி சாம்பியன் ஆனார். ஆனால் அதை கொண்டாடும் முன்பே வுஜி, யோக்கோஜுனாவை ஹல்க் ஹோகனுடன் மோத வைத்தார். ஹல்க் ஹோகனும் பல நாள் கழித்து WWE க்கு திரும்பிய உற்சாகத்தில் இருந்த காரணத்தால் எதிர்பார்த்தது போலவே ஏற்கனவே களைத்திருந்த யோக்கோஜுனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இப்படியொரு மேட்ச் அமைந்ததற்கான காரணம் ஹோகன், ப்ரட் ஹார்டிடம் சம்மர் ஸ்லாமில் தன்னுடைய சாம்பியன்ஷிப் பெல்ட்டை இழக்க வேண்டும் என்பதற்காக. இதற்கு ஹல்க் ஹோகன் சம்மதிக்க காரணம் மீண்டும் தனது பெல்ட்டை யோக்கோஜுனாவிடம் கிங் ஆப் தி ரிங்ஸில் இழக்கக்கூடாது என்பதற்காகவே.

#4. WWE சாம்பியன் ரே மிஸ்டீரியோ(2011).

ரே மிஸ்டீரியோ
ரே மிஸ்டீரியோ

சிஎம் பன்ங் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மனி இன் த பாங்க் ல் இருந்து வெளியேறினார். இதனால் அடுத்த வாரம் WWE RAW சாம்பியன் இல்லாமல் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மிக விரைவான விவாதங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட WWE சாம்பியனுக்கானப் போட்டியில் ரே மிஸ்டீரியோ வெற்றி பெற்றார். வேர்ல்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு WWE சாம்பியன் ஆனார் ரே மிஸ்டீரியோ. 619 மாஸ்டரான மிஸ்டீரியோ தி மிஸ் ஐ வீழ்த்தி இந்த வெற்றியை பெற்றார். ஆனால் இந்த வெற்றி நெடுநேரம் நீடிக்கவில்லை. அன்றிரவே நடைபெற்ற சாம்பியன்ஷிப் மேட்ச்சில் ஜான் ஸீனாவிடம் தனது பெல்ட்டை பறிகொடுத்தார் ரே மிஸ்டீரியோ .

இதில் நகைச்சுவை என்னவென்றால் அந்த வார RAW WWE சாம்பியன் இல்லாமல் ஆரம்பித்தது. அதன் பிறகு எட்டு நாட்கள் கழித்து மீண்டும் சிஎம் பன்ங் WWEக்கு திரும்பினார் இதனால் WWE இரண்டு WWE சாம்பியன்களோடு இருந்தது.

#3. WWE சாம்பியன் ரேண்டி ஆர்டன் (2007).

ரேண்டி ஆர்டன்
ரேண்டி ஆர்டன்

இது சற்று வித்தியாசமான மேட்ச் ஆகும். ஏனென்றால் ரேண்டி ஆர்டனுக்கு மிக விரைவில் சண்டையிடாமலேயே WWE சாம்பியன்ஷிப் பெல்ட் தரப்பட்டது.

2006 லிருந்து 2007 வரை வீழ்த்த முடியாத WWE சாம்பியனாக வலம் வந்து கொண்டிருந்தார் ஜான் ஸீனா. 2006 ஆம் ஆண்டு எட்ஜ் இடமிருந்து "UNFORGIVEN"-ல் வென்ற ஸீனா அதை பல்வேறு புதிய மற்றும் பழைய நட்சத்திர வீரர்களை(உமாகா, ஷான் மைக்கேல்ஸ், கிங் பூக்கர் டீ, மிக் போலி மற்றும் பாபி லாஸ்லி) வீழ்த்தி அதை கெட்டியாக பிடித்து வைத்திருந்தார். பின்னர் 2007 ல் நடந்த நோ மெர்ஸியில் அவருக்கு காயம் ஏற்பட்டது, அப்போது வந்த மிஸ்டர் மெக்மான் திடீரென ரேண்டி ஆர்டனை வரச் செய்து ஜான் ஸீனாவிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெல்ட்டை வாங்கி ரேண்டியிடம் அளித்தார். இது அங்கிருந்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரேண்டி ஆர்டன் RAW வின் டாப் ஸ்டாராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#2.WWE சாம்பியன் ட்ரிபிள் எச் (2007).

ட்ரிபிள் எச்
ட்ரிபிள் எச்

ரேண்டி ஆர்டன் சண்டையிடாமலேயே சாம்பியன்ஷிப் பெல்ட்டை பெற்றதால் அடுத்த மெயின் ஈவன்ட்டில் தனது பெல்ட்டுக்கான மேட்ச்சில் ட்ரிபிள் எச் ஐ எதிர்கொண்டார். ட்ரிபிள் எச் 19 மாதங்களாக WWE எந்தவித சாம்பியன்ஷிப்பையும் வெல்லாமல் இருந்தார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவில் ட்ரிபிள் எச் சாம்பியன்ஷிப் பெல்ட்டை வென்றார். ஆனால் மிஸ்டர் மக்மஹோன் கைப்பாவையாக ட்ரிபிள் எச் செயல்படமாட்டார் என்பதால், உமாகா வுடன் மற்றொரு மேட்ச்சை பிக்ஸ் செய்தார் மக்மஹோன். இதிலும் கடுமையாக போராடிய ட்ரிபிள் எச் இறுதியில் வெற்றி பெற்றார். அப்போதும் விடாத மக்மஹோன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ரேண்டி ஆர்டனுடன் லாஸ்ட் மேன் ஸ்டான்டிங் மேட்ச்சிற்கு உத்தரவிட்டார். இது ட்ரிபிள் எச்சிற்கு அன்றிரவினுடைய மூன்றாவது மேட்ச். இதானால் தொடர்ந்து போராட முடியாத ட்ரிபிள் எச் தன்னுடைய சாம்பியன்ஷிப் பெல்ட்டை இழக்க நேர்ந்தது

இதுவே ட்ரிபிள் எச் விரைவாக இழந்த சாம்பியன்ஷிப் ஆகும்.

#1. WWE வேர்ல்ட் சாம்பியன் ரோமன் ரெய்ங்ஸ் (2015).

ரோமன் ரெய்ங்ஸ்
ரோமன் ரெய்ங்ஸ்

அப்போது WWE சாம்பியனாக இருந்த ஷெத் ராலின்ஸ் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் மீண்டும் சாம்பியன் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டது WWE. 2011 ல் நடத்தப்பட்டது போலவே ஒரு WWE CHAMPIONSHIP TOURNAMENT இந்த முறையும் நடத்தப்பட்டது. இதில் இறுதியில் ஷீல்டின் பிரதர்ஸான டீன் ஆம்ரோஸ் மற்றும் ரோமன் ரெய்ங்ஸ் மோதினர். நினைத்தது போலவே இந்தப் போட்டியின் முடிவில் ரோமன் ரெய்ங்ஸ் WWE வேர்ல்ட் சாம்பியன் ஆனார். இதன் மூலம் WRESTLEMANIA வின் மெயின் ஈவன்ட்டில் சாம்பியனாக வலம் வர வேண்டும் என்ற கனவை நனவாக்கி விட்டதாக சந்தோஷத்தில் இருந்தார் ரோமன். ஆனால் இதை தவிடுபொடி ஆக்கும் விதமாக தன்னுடைய மனி இன் த பாங்க் டைட்டில் வைத்து ஒப்பந்தம் செய்து, ரோமனை சாம்பியன்ஷிப்பை வைத்து போட்டியிட செய்தார் ஷேமிஸ். இதில் ஷேமிஸ் வெற்றியும் பெற்றார். ரோமன் ரெயின்ஸ் வெறும் ஐந்து நிமிடங்கள் பதினைந்து நொடிகள் மட்டுமே சாம்பியனாக இருந்தார். அவர் அதன் பிறகு பலமுறை சாம்பியன்ஷிப் பெல்ட் வென்றிருந்தாலும் முதல் முறையாக வென்ற சாம்பியன்ஷிப் பெல்ட்டை பறிகொடுத்தது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கிறது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now