என்ன கதை…
போன வாரம் திங்கட்கிழமை அன்று நடைபெற்ற ராவ் நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு வரவேற்பையும் பெறவில்லை. ஆனால், இந்த வாரம் நடைபெற்ற ராவ் நிகழ்ச்சியானது ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த வாரம் ராவ் நிகழ்ச்சியில் ப்ராக் லெஸ்னர் தனது மணி இன் தி கேஷ்-யை வைத்து தற்போது ராவ் நிகழ்ச்சியில் யுனிவர்சல் சாம்பியனாக உள்ள செத் ரோலின்ஸ் உடன் "சூப்பர் சோ டவுன்" நிகழ்ச்சியில் போட்டியிடுவேன் என்று அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் "Fatal Four Way" போட்டியும், மேலும் ஒரு சில போட்டிகளும் நடைபெற்றது.
உங்களுக்கு தெரியாவிட்டால்…
இந்த வாரம் நடைபெற்ற ராவ் நிகழ்ச்சியானது நன்றாகவே இருந்தது. இருந்தபோதிலும், ஒரு சில குறைகள் இருந்தன. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் செத் ரோலின்ஸ் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்காக தன்னுடன் போட்டியிட்ட ஏ ஜே ஸ்டைல்-யை வென்று யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல், மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் நடைபெற்ற மற்றொரு போட்டியான லேடர் போட்டியில் ப்ராக் லெஸ்னர் திடீரென வந்து மணி இன் தி கேஷ்-யை வென்றார். இந்த வாரம் ராவ் நிகழ்ச்சியில் செத் ரோலின்ஸ் மற்றும் கோபி கிங்ஸ்டன் இவர்கள் இருவரும் மேடையில் இருந்த போது ப்ராக் லெஸ்னர் தான் வைத்திருந்த மணி இன் தி கேஷ்-யை தனது உதவியாளர் பாலு ஹெய்மன் உடன் வந்து செத் ரோலின்ஸ் உடன் உண்மைதான் உன்னிடம் போட்டியிடுவேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகு டபிள்யூ டபிள்யூ ஈ நிறுவனமானது இந்த வாரம் ராவ் நிகழ்ச்சியில் "Fatal Four Way" போட்டியை ( பிராவுன் ஸ்ட்ரோமன், பாபி லெஷ்லி, தி மிஸ், பரோன் கார்பின் ) ஆகியோருக்கு இடையே நடைபெறும் என அறிவித்த உடனே இந்தப் போட்டியானது நடைபெற்றது. அதுமட்டுமின்றி, இந்த "Fatal Four Way"-ல் வெற்றி பெற்றால் "சூப்பர் சோ டவுன்" நிகழ்ச்சியில் செத் ரோலின்ஸ் உடன் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிடலாம் என்று கூறியது. இந்த "Fatal Four Way" போட்டியில் பரோன் கார்பின் வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தபடியாக டபிள்யூ டபிள்யூ ஈ நிறுவனமானது இந்த ராவ் நிகழ்ச்சியில் கோபி கிங்ஸ்டன் மற்றும் டால்ப் ஷிக்லர் இவர்கள் இருவருக்கும் இடையே ஸ்மேக் டவுன் சாம்பியன்ஷிப்பிற்காக "சூப்பர் சோ டவுன்" நிகழ்ச்சியில் போட்டியிடுவார்கள் என அறிவித்தது. இந்த போட்டியானது கெவின் ஓவன்ஸ் மற்றும் கோபி கிங்ஸ்டன் இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்தப் போட்டியானது நடை பெறாமல் போனதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. இந்த ராவ் நிகழ்ச்சியில் கடைசி போட்டியாக செத் ரோலின்ஸ் மற்றும் சமி சையன் இவர்கள் இருவருக்கும் நடைபெற்றது. இந்த போட்டியில் செத் ரோலின்ஸ் வெற்றி பெற்றார். இரண்டு வாரம் கழித்து நடைபெறும் சூப்பர் சோ டவுன் நிகழ்ச்சியானது சவுதி அரேபியாவில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.