WWE TLC 2018 : ரேண்டி ஆர்டன் VS ரே மிஸ்டீரியோ போட்டியின் சிறப்பம்சம் மற்றும் விமர்சனம்  

ரேண்டி ஆர்டன்
ரேண்டி ஆர்டன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரேண்டி ஆர்டன் இன்று நடந்த TLC போட்டியில் பங்கேற்றார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “வைப்பர்” WWE வளையத்திற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாக WWE போட்டிகளில் மறுபடியும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை கையாண்டார் ரேண்டி ஆர்டன்.

WWE யூனிவெர்சின் ஹீரோக்களை ஒரு கை பார்க்கவேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் கோபத்தை வெளிப்படுத்தி வந்த ரேண்டி ஆர்டன், முதலில் ஜெப் ஹார்டியை களத்தில் சந்தித்தார்.

தற்போது ரே மிஸ்டீரியோவை குறிவைத்து WWE TLC போட்டியில் களமிறங்கினார் ஆர்டன். ஒரு காலகட்டத்தில் ரே மிஸ்டீரியோவின் முகமுடியே ஆர்டன் கழட்டி எறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரே மிஸ்டீரியோ பலம்வாய்ந்த ரேண்டி ஆர்டனை எதிர்கொள்ள அனைத்து யுக்திகளையும் கையாண்டு வெற்றி பெரும் முனைப்புடன் இருந்தார்.

இன்று நடந்த TLC போட்டியில், இரு வீரர்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஆயுதங்களை எடுக்கும் முனைப்பில் அடித்துக்கொண்டனர். முதன்முதலில் இரும்பு சேர் ரே மிஸ்டீரியோவின் கைகளுக்கு கிட்டியது .அதைவைத்து சரமாரியாக ரேண்டி ஆர்டனை தாக்கினார் ரே மிஸ்டீரியோ.

ரே மிஸ்டீரியோ, ரேண்டி ஆர்டனை சேர்களில் அடுக்கி பறந்து வந்து அடிக்க முற்பட்டார். அவ்வாறு செய்யும்போது காற்றில் இருந்த மிஸ்டீரியோவை ஆர்டன் புடிக்கவே, பதிலடி தாக்குதலில் ஈடுப்பட தொடங்கினர் ஆர்டன்.

ஆர்டன் ரிங் முனையில் ரே மிஸ்டீரியோவை வைத்து யுக்திகளை கையாள நினைத்தார். சுதாரித்துகொண்ட மிஸ்டீரியோ ஆர்ட்டனின் பிரசத்தி பெற்ற அசைவிலுருந்து தப்பினார்.

ரிங்கிற்கு வெளியை ஆர்ட்டனை தள்ளிய ரே மிஸ்டீரியோ, சேரை வைத்து பறந்து தாக்கும் முறையை கையாண்டார். வலியால் தவித்த ஆர்ட்டன், பறந்து வந்த ரே மிஸ்டீரியோவின் குறியில் இருந்து தப்பித்து, அவர்(மிஸ்டீரியோ) வைத்திருந்த சேரில் விழும்படி செய்தார்.

சுதாரித்துக்கொண்ட ரேண்டி ஆர்டன், வர்ணனையாளர்களின் மேசையில் சேரை வைத்து தாக்கும் முறையை கையாண்டார். “FACEBUSTER” எனப்படும் ரேண்டி ஆர்டனின் பிரசித்திப்பெற்ற தாக்குதலுக்கு உள்ளானார் ரே மிஸ்டீரியோ. அங்கிருந்து வளையத்தின் முனையில் சேர் வைத்து தாக்க முயன்றார் ஆர்டன், சற்று சுதாரித்துக்கொண்ட மிஸ்டீரியோ “HEAD SCISSORS” எனப்படும் காளை தலையில் வைத்து சுழற்றி விடும் முறையே கையாண்டு அதே சேரில் ரேண்டி ஆர்டனை விழச்செய்தார்.

இருவரும் சோர்வினால் ரிங்கில் சற்று நேரம் படுத்தபடியே இருந்தனர். பின்பு சுதாரித்துக்கொண்டு எழுந்த ஆர்டன் “POWERSLAM” அசைவை கையாண்டார்.

பின்பு அத்தாக்குதலிருந்து மீண்ட ரே மிஸ்டீரியோ, ஆர்டனை கால்களில் சிக்க வைத்து 619 எனப்படும் மிஸ்டீரியோவின் பிரசித்திபெற்ற அசைவுக்கு திட்டம் தீட்டப்பட்டது. 619 -க்கு உள்ளாக்கப்பட்டார் ரேண்டி ஆர்டன்.

வலியால் களத்தில் கீழே விழுந்த ஆர்டனை மேலும் காயப்படுத்த வளையத்தின் கயிர்களிலிருந்து பறந்துவந்து வீழும் அசைவை மேற்கொண்டார் ரே மிஸ்டீரியோ. சுதாரித்துக்கொண்ட ஆர்டன் அவர் பறந்து வரும் பொழுது அவரை நோக்கி சேரை தூக்கி வீசினார் ஆர்டன்.

பின்பு பின்ஃபால் செய்ய முயன்ற ஆர்டனின் செயல் தோல்விபெற்றது. ரே மிஸ்டீரியோ இரண்டே எண்ணிக்கைகளில் தனது நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார்.

பின்பு மாறி மாறி அடித்துக்கொண்ட இருவரும் போட்டியின் உச்சத்தை எட்டினர். ரேண்டி ஆர்டன் தனது புகழ்பெற்ற அசைவான “RKO” -க்கு வரிசையாக சேர்களை அடுக்கி ரே மிஸ்டீரியோவை வீழ்த்த நினைத்தார்.

சுதாரித்துக்கொண்ட ரே மிஸ்டீரியோ ஆர்டனின் தாக்குதலில் இருந்து தப்பி ஆர்டனை அச்சேர்களின் மீது விழச்செய்தார்.

பின்பு ரே மிஸ்டீரியோவின் பின்ஃபாளுக்கு தாக்குப்புடிக்க முடியாமல் ஆர்டன் அடிப்பணிந்தார்.

முடிவு - ரே மிஸ்டீரியோ வெற்றி

ரே மிஸ்டீரியோவின் வெற்றியின் மூலம் அதிருப்தியிலுள்ள ஆர்டன், ரே மிஸ்டீரியோவுடன் நீண்ட நாட்களுக்கு பகை வளர்த்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now