WWE: வரும் ரெஸ்டில்மேனியாவில் தி அண்டர்டேக்கரின் பங்கு என்னவாக இருக்கும்?

தி அண்டர்டேக்கர்
தி அண்டர்டேக்கர்

WWE-வில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் நடைபெறுவது வழக்கம். அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ரெஸ்டில்மேனியா. எல்லோருக்கும் ரெஸ்டில்மேனியா என்றால் ஞாபகம் வருவது ரெஸ்ட்லிங் ஜாம்பவான் தி அண்டர்டேக்கர். இவரது சாதனையை எந்த ரசிகர்களாலும் மறக்க முடியாது. விரைவில் ரெஸ்டில்மேனியாவின் 35-வது சீசன் நடைபெறவுள்லது. நாளுக்கு நாள் இதை பற்றிய தகவல் வந்துகொண்டே இருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள தகவல் தி அண்டர்டேக்கரின் பங்கு இந்த சீசனில் என்னவாக இருக்கும் என்பது தான். இதனை பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.

கடைசியாக தி அண்டர்டேக்கர் கேனுடன் ஜோடி சேர்ந்து DX அணிக்கு எதிராக சவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரௌன் ஜுவெலில் சண்டை இட்டார். இந்த சண்டையில் DX வென்றது. அதன் பிறகு எந்த ஒரு சண்டையிலும் தி அண்டர்டேக்கர் பங்கேற்கவில்லை. பொதுவாக ரெஸ்டில்மேனியா தொடங்குவதற்கு 3 அல்லது 4 மாதம் முன்னரே தி அண்டர்டேக்கர் யாரை எதிர்கொள்ளப் போகிறார் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்துவிடும். ஆனால் வரவிருக்கும் சீசனில் தி அண்டர்டேக்கர் யாரை எதிர்த்து சண்டையிட போகிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. சென்ற ஆண்டு ரெஸ்டில்மேனியாவில் கடைசி நேரத்தில் தான் ஜான் சீனாவை எதிர்கொள்ளப் போகிறார் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. கடந்த ஆண்டை போல் இவ்வருடமும் கடைசி நேரத்திலாவது தெரிய வருமா என்று ரசிகர்கள் காத்துள்ளனர்.

தி அண்டர்டேகர்
தி அண்டர்டேகர்

தி அண்டர்டேக்கருக்கென தனியாக ஒரு சாதனை உள்ளது. பலவருடமாக தொடர்ந்து ரெஸ்டில்மேனியாவில் வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளார். இந்த நீண்ட நாள் சாதனையை முறியடிக்க பல ஜாம்பவான்கள் போராடி தோல்வியை கண்டனர். இறுதியாக இதனை முறியடித்தது பிராக் லெஸ்னர் தான். இதனை தொடர்ந்து ரோமன் ரெய்ன்ஸும் ரெஸ்டில்மேனியாவில் தி அண்டர்டேக்கரை வீழ்த்தினார். இது பல ரசிகர்களை சோக நிலைக்கு கொண்டு சென்றது. இதன் பிறகு வாழ்நாளில் சண்டை இட மாட்டார் என ஒரு அறிவிப்பும் வெளியிட்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜான் சீனாவிடம் மோதி அதில் வெற்றியும் கண்டார்.

சமீபத்தில் அமெரிக்காவின் தனியார் பத்திரிகைக்கு WWE-இல் முக்கிய நிர்வாகத்தில் இருக்கும் திரு.மைக்கல் ஜான்சன் கூறுகையில் "தி அண்டர்டேக்கர் போட்டி பற்றி இப்போதும் எதுவும் கூறமுடியாது. அதை பற்றி பேச்சுகள் நடைபெற்று வருகிறது. 53 வயதான அவர் யாரையம் எதிர்கொள்வாரா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் சண்டைக்கு தயாராவதில் சிக்கல் இருக்கிறது" என்று கூறினார். இதை வைத்து பார்த்தால் தி அண்டர்டேக்கர் வரும் ரெஸ்டில்மேனியாவில் சண்டை இடுவது சந்தேகம் போல் தெரிகிறது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தமான செய்தியாக இருக்கும். மேலும் அவர் கூறியதாவது "ஒரு வேலை தி அண்டர்டேக்கர் சண்டையிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஒரு "விருந்தாளியாகவாது" வரும் ஏப்ரல் மாதம் நியூ ஜெர்சி மாகாணத்தில் நடைபெறவுள்ள ரெஸ்டில்மேனியாவில் அவரை கலந்துக்கொள்ள வைப்பதற்கு நாங்கள் முயற்சிப்போம் " என்று பேட்டி அளித்தார்.

வயதாகி வருவதால் இன்னும் எத்தனை காலம் அவரால் சண்டையிட முடியும் என தெரியாது. ஆதாலால் ரசிகர்களும் தி அண்டர்டேகர் இல்லாத ரெஸில்மேனியாவை பழகிக்கொள்ள வேண்டும்.