WWE நெட் வொர்க்கின் பிரமாண்டமான மற்றும் முக்கியமான நிகழ்வான ரஸ்ஸில்மேனியா இன்னும் சில மணி நேரங்களில் துவங்கவிருக்கிறது. ரஸ்ஸில்மேனியா 35 நியூ ஜெர்ஸி மாகாணத்திலுள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டிகள் அரங்கேற உள்ளன. இதனால் இந்நிகழ்வானது பல மணி நேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வின்ஸ் மக்மாஹனின் பில்லியன் டாலர் நிறுவனத்தின் உருவாக்கமான, WWE-ன் 10 டைட்டிலுக்கான போட்டிகளும் சாம்பியன்ஷிப் அல்லாத சில போட்டிகளும் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்றன.
WWE ன் வரலாற்றிலேயே முதல் முறையாகமுறையாக ரஸ்ஸில்மேனியாவின் மெயின் ஈவன்டாக பெண்களின் போட்டி நடைபெற இருக்கிறது. மேலும் டிரிபிள் எச் தனது WWE வாழ்க்கையையே பணையம் வைத்து பட்டிஸ்டா உடன் மோதவிருக்கிறார் மற்றும் குர்ட் ஆங்கிள் தனது கடைசி போட்டியிலும் பங்கேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருடா வருடம் ரஸ்ஸில்மேனியாவில் பல ஆச்சரியங்கள் மற்றும் அதிர்ச்சி தரும் போட்டிகளும் நடைபெறும் என்பதில் ஐயமில்லை. உதாரணமாக கடந்த வருடம் நடைபெற்ற ரஸ்ஸில்மேனியாவில் ஷின்சுகே நாக்கமோரா திடீரென்று வில்லன் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அதுபோலவே இந்த வருடமும் பல சூப்பர் ஸ்டார்கள் தங்களின் கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வில்லனாக மாறக்கூடிய 3 சூப்பர் ஸ்டார்களை பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
#3. செத் ரால்லின்ஸ்
இதில் செத் ரால்லின்ஸின் பெயர் இடம்பெறுவதில் ஆச்சரியமில்லை, காரணம் அவர் கடந்த வாரம் ப்ராக் லெஸ்னரை குறுக்கு வழியில் ஏமாற்றி சரமாரியாகத் தாக்கினார். இதற்கு காரணம் லெஸ்னர் அவரை ராயல் ரம்பளுக்கு அடுத்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கடுமையாக தாக்கினார். அதற்கு பழி வாங்குவதற்காகவும் ரஸ்ஸில்மேனியாவிற்கு முன்பாக லெஸ்னருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவும் குறுக்கு வழியில் அவரை தாக்கினார்.
இவர்கள் இருவருக்கும் இடையேயான பகையை WWE கடந்த சில மாதங்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து வந்தது. தற்போது ரசிகர்களின் ஆதரவு ரால்லின்ஸூக்கு அதிகம் உள்ளது. காரணம் வார வாரம் வந்து செல்லும் ஒரு சாம்பியனையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் ஒருவேளை ரால்லின்ஸ் ஏதேனும் ஒரு குறுக்கு வழியில் லெஸ்னரிடமிருந்து சாம்பியன் ஷிப் பெல்ட்டை வாங்குவாராயின் அதைவிட பெரிய சாதனை இருக்காது. காரணம் லெஸ்னர் தொடர்ந்து 221 நாட்களாக பெல்ட்டை தன்வசம் வைத்துள்ளார். இந்த சாதனையை ஏதேனும் ஒரு வகையில் முறியடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
#2. பின் பேலர்
கிட்டத்தட்ட ஐந்து வருடமாக WWE ல் இருக்கிறார் பேலர். ஆனால் ஒரு முறை கூட தனது கதாபாத்திரத்தை மாற்றிக் கொண்டதில்லை. உதாரணமாக மூன்று வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தனது அறிமுக போட்டியிலிருந்து இன்றுவரை நல்லவராகவே இருந்து வருகிறார். இதன்மூலமே இவரின் பக்கம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு திரும்பியுள்ளது. காரணம் இவரை வில்லன் கதாபாத்திரத்தில் காண பலரும் விரும்புகின்றனர். பேலரின் ரஸ்ஸில்மேனியா போட்டியாளரான பாபி லாஷ்லி ஏற்கனவே வில்லனாக உள்ளார். இவர் பின் பேலரிடமிருந்து குறுக்கு வழியில் இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பெல்ட்டை வென்றார். இதற்கு பழி தீர்க்க வேண்டும் என்பதற்காகவாவது பேலர் வில்லனாக மாறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இது ஒருவேளை நியூ ஜெர்ஸியில் நடைபெறும் ரஸ்ஸில்மேனியாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#1. தி நியூ டே (எக்ஸ்சேவியர் மற்றும் பிக் ஈ)
தி நியூ டே வைச் சார்ந்த மூன்று பேரும்தான் கடந்த சில வாரங்களாகவே ஸ்மாக்டவுனின் பேச்சு பொருளாக இருந்து வருகின்றனர். கோஃபி கிங்ஸ்டன் பல்வேறு வலிகளையும் தடைகளையும் தாண்டி பல போட்டிகளில் பங்கேற்று முன்னணி வீரர்கள் பலரையும் வென்று ரஸ்ஸில்மேனியாவின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார். இதற்காக அவர் பட்ட அவமானங்களையும் ஏமாற்றங்களையும் ரசிகர்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். இவற்றையெல்லாம் தாண்டியதாலேயே முக்கியமான போட்டியாக இவரது மேட்ச் கருதப்படுகிறது.
கோஃபி கிங்ஸ்டனின் இந்த கதையானது, 2014 ல் அரங்கேறிய டேனியல் பிரையனின் முன்னேற்றக் கதைப்போலவே உள்ளது. காரணம் அதிலும் வின்ஸ் மக்மாஹன் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்திற்கு மாறி டேனியல் பிரையனை முக்கிய வீரராக ஆக்கினார். ரசிகர்கள் அனைவரும் கோஃபி கிங்ஸ்டன் பக்கமே உள்ளனர் இவர் கடந்த சில வாரங்களாக அனுபவித்த கஷ்டங்களுக்கு பரிசாக இந்த மேட்சில் வெல்வது முக்கியம்.
எக்ஸ்சேவியர் மற்றும் பிக் ஈ கதாபாத்திரத்தை வில்லனாக மாற்ற வின்ஸ் மக்மஹோன் திட்டமிட்டிருக்கலாம். WWE ரசிகர்களின் மனதை நொறுக்கிய சம்பவமான ஷீல்டின் பிரிவினையை போலவே மற்றுமொரு துரோகப் பிரிவினையை நியூ டே வின் மூலம் அரங்கேற்ற வின்ஸ் மக்மஹோன் திட்டம் தீட்டி இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருவேளை இந்த நிகழ்வு நியூ ஜெர்ஸியில் நடைபெறும் ரஸ்ஸில்மேனியாவிலேயே கிங்ஸ்டனுக்கு எதிராக ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.