Create
Notifications
Favorites Edit
Advertisement

WWE ஜாம்பவான் கர்ட் ஆங்கிளின்  கடைசி ரெஸ்டில்மேனியா.

Maheshwaran
TOP CONTRIBUTOR
செய்தி
Published Feb 15, 2019
Feb 15, 2019 IST

நிலவரம்: 

WWE குத்து சண்டை வீரர் கர்ட் ஆங்கிள் தனது கடைசி மேட்சை ஆட இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குத்துசண்டை ஜாம்பவான் தனது கடைசி போட்டியை ஆட போகிறார் என தகவல்கள் வருகின்றன. இது WWE ரசிகர்களுக்கும், கர்ட் ஆங்கிள் ரசிகர்களுக்கும் சற்று வருத்தமான ஒன்றாகும்.


ட்ரிபிள் H மற்றும் மேக் மோகனுடன் கர்ட் ஆங்கிள்
ட்ரிபிள் H மற்றும் மேக் மோகனுடன் கர்ட் ஆங்கிள்

கர்ட் ஆங்கிள் 90/களின் ரசிகர்களுக்கு மற்றுமொரு மறக்கமுடியாத கதாநாயகன் எனலாம். அந்த கால கட்டத்தில் இருந்த பல முன்னணி WWE வீரர்களுடன் சண்டையிட்டிருக்கிறார். இவர் வெறும் குத்துசண்டை வீரர் மட்டுமல்ல, ஒலிம்பிக்கில் பங்கு பெற்று மல்யுத்தத்தில் தங்கம் வென்றவரும் கூட. 


 உங்களுக்கு தெரியாமலிருந்தால்:

கர்ட் ஆங்கிள் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த வால்ட் அரங்கத்தில் சேர்க்கப்பட்டார், அன்றிலிருந்து இன்று வரை அங்குதான் பணியாற்றி வருகிறார், போன வருடத்திற்கு முந்தைய வருடம் RAW என்று அழைக்கபடும் நிகழ்ச்சிக்கு ஜெனரல் மேனேஜராக இருந்தார், பின் ஸ்டெப்னி மெக்கனால் விடுமுறைக்கு அனுப்பபட்டார். அதன் பின் தற்போது ஜெனரல் மேனேஜராக பணியாற்றும் பாரோன் கார்பின் குர்ட் ஆங்கிள்க்கு பதிலாக நியமிக்கப்பட்டார். 

 

முன்னாள் WWE சாம்பியன் தன் விடுமுறையிலிருந்து EI வெற்றியாளராக திரும்பினார். அது மட்டுமில்லாமல் RAW நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெற்று கார்பினை வெளியேற்றினார். இதன் மூலம் அவருக்கு உலககோப்பை WWE சாம்பியன்சிப் போட்டியில் பங்கு கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் முதல் சுற்றில் டால்ப் ஸிக்லரால் வீழ்த்த பட்டார்.

இதனால் முன்னாள் ஜெனரல் மேனேஜர் மீண்டும் திரை மறைவானார். அதன் பின் ஆச்சரிய படும் விதமாக TLC என்று அழைக்கபடும் குத்துசண்டை மேட்சில் ப்ரான் ஸ்ட்ரோமேனுக்கு உதவி வெற்றி பெற செய்தார்.அதன் பின் ராயல் ரம்பிளில் கலந்து கொண்டார், அங்கேயும் பெரியதாக ஜொலிக்க வில்லை. வெறும் மூன்று நிமிடம் 15 நொடிகளில் வெளியேறினார்.

இதனால் பலதரப்பட்ட செய்திகள், அவர் விளையாட தகுதியான நிலையில் இல்லை ஓய்வு பெற வேண்டி வலியுறுத்தி வந்தன.

இது பற்றி ப்ராட் செப்பர்ட் கூறியதாவது "ரெஸ்டில் மேனியா 35 அவரது கடைசி மேட்சாக இருக்கும்" என குறிப்ப்டிருந்தார்.

அடுத்தது என்ன?  

கர்ட் ஆங்கிள் குத்துசண்டையில் பங்கேற்கும் கடைசி மேட்சை பார்க்க ரசிகர்கள் ஆர்வ மிகுதியாக உள்ளனர். அவருக்கு எதிராக களமிறங்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள வீரர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement

ஜெப் ஹார்டி:

இவரும் ஒரு சிறந்த WWE வீரர் என்பதில் எந்த மாற்று கருதும் இல்லை. மேலும் இவர் தற்போது TNA மற்றும் WWE-ல் மாறி மாறி சண்டையிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாது, இவர்கள் இருவரும் சமகாலத்து வீரர்களும் கூட.

ஜான் ஸினா:

இவரும் கர்ட் ஆங்கிள் போட்டியிட்ட அதே கட்டத்தில் இருந்துள்ளார். மேலும் இவர்களுக்கு இடையே பல மறக்கமுடியாத போட்டிகளும் அரங்கேறியுள்ளது. எனவே இவர்களுக்கு இடையே போட்டி வர அதிக வாய்ப்புள்ளது.

எ.ஜே.ஸ்டைல்ஸ்:

தற்போது WWE-ல் சிறந்த வீரராக வலம் வருபவர் எ.ஜே.ஸ்டைல்ஸ். கர்ட் ஆங்கிள்க்கு விடைகொடுக்கும் விதமாக சிறப்பான ஒரு போட்டியை அளிக்க விரும்பும் பட்சத்தில் இவருடன் மோத வைக்கலாம்.
 

Advertisement
Advertisement
Fetching more content...