மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற கிங்ஸ் XI பஞ்சாப் அடுத்தாக டெல்லி கேபிடல்ஸ் அணியை ஏப்ரல் 1 அன்று பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் சந்திக்க உள்ளது.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இதுவரை இரு அணிகளும் 22 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது. 2018 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இரு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: டெல்லி கேபிடல்ஸ் இதுவரை 6 போட்டிகளில் பஞ்சாப் அணியுடன் இந்த மைதானத்தில் மோதியுள்ளது. இதில் டெல்லி கேபிடல்ஸ் 1 முறை(2010) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கிங்ஸ் XI பஞ்சாப்
பஞ்சாப் அணி கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான வெற்றியைப் பெற்று 2019 ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. மொகாலி மைதானத்தில் பஞ்சாப் அணி, டெல்லி அணியுடன் மோதிய கடைசி 4 போட்டிகளிலும் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது. எனவே 5வது முறையாக மோதும் இந்த போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கில் பஞ்சாப் களமிறங்கும்.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், மயான்க் அகர்வால்
தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பொறுமையாக விளையாடி 71 ரன்களை விளாசி ஐபிஎல் தொடரில் தனது வருகையை அறிவித்துள்ளார். இந்த ஆட்டத்திறன் டெல்லி அணிக்கு எதிராகவும் தொடரும்.
மயான்க் அகர்வால் அதிவேக 43 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கை பஞ்சாப் அணிக்கு சாதகமாக மாற்றினார். அத்துடன் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் பஞ்சாப் அணிக்காக மிகப்பெரிய ஷாட்களை விளாசுவதில் கைதேர்ந்தவராக விளங்குகிறார்.
டேவிட் மில்லர், சஃப்ரஸ் கான், மந்தீப் சிங் பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டரில் சிறந்து விளங்குகின்றனர்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் டை, முகமது ஷமி, ஹர்துஸ் வில்ஜியோன்
முகமது ஷமி, முருகன் அஸ்வின், ஹர்துஸ் வில்ஜியோன் ஆகியோர் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முருகன் அஸ்வின் கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 25 ரன்களை பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆன்ரிவ் டை டெல்லி அணிக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச XI: கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், மந்தீப் சிங், டேவிட் மில்லர், ரவிச்சந்திரன் அஸ்வின்(கேப்டன்), முருகன் அஸ்வின், ஹர்துஸ் வில்ஜியோன், முகமது ஷமி, ஆன்ரிவ் டை.
டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியுடனான போட்டியில் டிரா ஆனது. சூப்பர் ஓவரில் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டம் ரஸல் விக்கெட்டிற்குப் பிறகு ரன்கள் ஏறாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குல்தீப் யாதவ் மற்றும் ப்யுஸ் சாவ்லா இணைந்து 20 ரன்களை சேர்த்ததால் டெல்லி அணி சற்று இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஷிகார் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட்
பிரித்வி ஷா கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார். எனவே இதே ஆட்டத்திறனை இனிவரும் போட்டிகளிலும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் பக்கபலமாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 32 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார். மூன்றாவதாக களமிறங்கி நிலைத்து விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார் ஸ்ரேயஸ் ஐயர்.
இவர்களுடன் ரிஷப் பண்ட் இவ்வருட சீசனின் முதல் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தம் பக்கம் திருப்பினார். ஆனால் அடுத்த இரு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டம் இவரிடமிருந்து வெளிப்படவில்லை. எனவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இவரது பங்களிப்பை டெல்லி அணி எதிர்பார்க்கிறது. கடந்த போட்டியில் ஷிகார் தவான் அதிரடி தொடக்கத்தை அளிக்க தவறிவிட்டார். ஒரு நிலையான மற்றும் பொறுப்பான தொடக்க ஆட்டக்காரரான இவர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என நம்பப்படுகிறது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, சந்தீப் லாமிச்சனே
கொல்கத்தா அணியுடனான போட்டியில் டெல்லி அணிக்கு சாதகமாக போட்டியை மாற்றியதில் காகிஸோ ரபாடாவிற்கு பெரும் பங்கு உண்டு. சூப்பர் ஓவரில் 10 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தா அணியின் சிறப்பான பேட்ஸ்மேன்களான ஆன்ரிவ் ரஸல், தினேஷ் கார்த்திக், உத்தப்பா ஆகியோருக்கு எதிராக ரபாடாவின் அதிரடி மின்னல் வேக பந்துவீச்சால் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் தொடரும்.
சந்தீப் லாமிச்சனே மீண்டும் தனது அற்புதமான சுழலால் தன்னை நிறுபித்துள்ளார். அத்துடன் அனுபவ வீரர் அமித் மிஸ்ரா மிடில் ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அருமையான எகானமி ரேட் வைத்துள்ளார்.
உத்தேச XI: பிரித்வி ஷா, ஷிகார் தவான், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), காலின் இன்கிராம், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் மோரிஸ், ஹனுமா விகாரி, காகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, சந்தீப் லாமிச்சனே, ஹர்சல் படேல்