ஐபிஎல் 2019: மேட்ச் 12, CSK vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

MSD vs Rahanae
MSD vs Rahanae

முன்னாள் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் 2019 ஐபிஎல் தொடரின் 12-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த சீசனில் இரு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியிலும் வெற்றி பெறும் இலக்கோடு களமிறங்கும்.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இதுவரை 20 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 12முறை வெற்றி பெற்றுள்ளது.

சேப்பாக்க மைதானத்தில் நேற்று நேர்: இந்த மைதானத்தில் 6 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் 1 போட்டியில் மட்டுமே ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

கள ரிப்போர்ட்: 2019 ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டியில் இம்மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முழுவதும் சாதகமாக இருந்தது. எனவே பேட்ஸ்மேன்கள் இம்மைதானத்தில் சற்று பொறுமையை கையாள வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

Chennai super kings
Chennai super kings

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அசத்தி வருகிறது. ஐபிஎல் தொடரில் கடைசியாக விளையாடிய (கடந்த வருட ஐபிஎல் தொடருடன் சேர்த்து) 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானம் சென்னை அணிக்கு மிகவும் சாதகமான களமாகும். இங்கு விளையாடிய 11 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு

ஷேன் வாட்சன் கடந்த போட்டியில் சேஸிங்கில் 26 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். அவருடன் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். எனவே இதே ஆட்டத்திறனை ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் தொடர்வார்கள் என நம்பப்படுகிறது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால் அம்பாத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி, ஜடேஜா ஆகியோர் மிடில் ஆர்டரில் கலக்க உள்ளனர். சென்னை அணியின் இந்த பேட்டிங் லைன்-அப் எதிரணிக்கு சவால் விடும் வகையில் உள்ளது. ‌

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: ஹர்பஜன் சிங், தீபக் சகார், இம்ரான் தாஹீர்

சென்னை அணியின் பந்துவீச்சு கணிக்கமுடியாத வகையில் உள்ளது. முதல் ஐபிஎல் போட்டியில் இம்ரான் தாஹீர் மற்றும் ஹர்பஜன் சிங் சிறப்பான சுழலை மேற்கொண்டனர். 2-வது போட்டியில் டுயன் பிரவோ தனது வேகத்தில் டெல்லி அணியின் நட்சத்திர வீரர்களான ஷிகார் தவான், ரிஷப் பண்ட், காலின் இன்கிராம் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்களுடன் தீபக் சகார் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச XI: ஷேன் வாட்சன், அம்பாத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, டுயன் பிரவோ, கேதார் ஜாதவ், இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங், தீபக் சகார், ஷர்துல் தாகூர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

Rajasthan royals
Rajasthan royals

ராஜஸ்தான் ராயல்ஸ் 2019 ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் மோசமாக விளையாடியுள்ளது. முதல் போட்டியில் மிடில் ஆர்டர் சொதப்பலாலும், இரண்டாவது போட்டியில் பந்துவீச்சாளர்களின் சொதப்பலாலும் தோல்வியை தழுவியது ராஜஸ்தான்.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், அஜின்க்யா ரகானே, சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் 2019 ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை 55 பந்துகளில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளாசி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தார். ஆனால் அந்த இலக்கை ஹைதராபாத் அணி அடைந்து வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரகானேவின்( 49 பந்துகளில் 70 ரன்கள்) பார்டனர் ஷிப்பில் 114 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு வந்தது.

ஜாஸ் பட்லர் கடந்த போட்டியில் சொதப்பியதால் சென்னை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் முதல் இரு போட்டியிலும் பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: ஸ்ரேயஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்சர், பென ஸ்டோக்ஸ்

ஸ்ரேயஸ் கோபால் கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 27 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய விக்கெட்டான டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார். எனவே ரகானே இந்த இரு பந்துவீச்சாளர்களையும் தொடக்க ஓவர்களில் பயன் படுத்துவார்.

ஜெய்தேவ் உனட் கட் கடந்த போட்டியில் 1 விக்கெட்டை வீழ்த்தினார், ஆனால் அதிக ரன்களை தனது பௌலிங்கில் அளித்து வருகிறார். ஆர்ச்சர் தனது முழு திறமையை சென்னை அணிக்கு எதிராக வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச XI: அஜின்க்யா ரகானே (கேப்டன்), ஜாஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திர்பாதி, ஸ்டிவன் ஸ்மித், ஸ்ரேயஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், ஜோஃப்ரா ஆர்சர், தவால் குல்கர்னி, கிருஷ்ணப்பா கௌதம்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now