ஐபிஎல் 2019 : தோனியை தண்டனையில் இருந்து காப்பாற்றிய நடுவர் புரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு 

Heated Argument between Dhoni and Umpires
Heated Argument between Dhoni and Umpires

12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அதன் பின் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் கடைசி பந்து வரை போராடி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் கடைசி ஓவர் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. கடைசி ஓவரின் 4-வது பந்தை பென் ஸ்டோக்ஸ் வீசினார். அதை நோபால் என்று கள நடுவர் அறிவித்தார். ஆனால் லெக் அம்பயராக இருந்த புருஸ் ஆக்ஸன்ஃபோர்டு அது நோபால் இல்லை என்று முடிவை மாற்றி அமைத்தார். இதனால் ஆத்திரமடைந்த சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தன்னுடைய முகாமில் இருந்து நேராக மைதானத்துக்குள் நுழைந்து அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக கடைசி பந்தில் சிக்சர் அடித்து மிச்செல் சான்ட்னர் சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

தோனியின் இந்த செயலுக்கு அபராதமாக 50 சதவீத போட்டி கட்டணத்தை பிசிசிஐ விதித்தது. எல்லோரும் தோனிக்கு குறைந்தது ஒரு போட்டியிலாவது தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 சதவீத அபராதத்துடன் தண்டனை முடிந்ததால் அதிர்ச்சியாயினர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் தண்டனை கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தோனி 50 சதவீத அபராதத்துடன் தப்பினார்.

Dhoni lose his cool
Dhoni lose his cool

நமக்கு தற்போது கிடைத்த தகவலின்படி நடுவர் ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு தோனிக்கு கிடைத்த இந்த குறைந்தபட்ச தண்டனையில் பெரிய பங்காற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆட்டம் முடிந்த பின் மேட்ச் ரெப்ரி பிரகாஷ் பட் அறையில் ஒரு கூட்டம் நடந்தது. அப்போது பேசிய நடுவர் ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு தோனியின் இந்த செயலால் தமக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்று கூறினார். கள நடுவர் இப்படி கூறியதால் தோனி கடுமையான தண்டனையில் இருந்து தப்பினார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கிடைத்த தகவலின் படி மேட்ச் முடிந்த பிறகு எல்லா தரப்பினரும் மேட்ச் ரெப்ரீ அறையில் சந்தித்தபோது நடுவர் புரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு தோனியின் செயலால் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார். அதனாலேயே தோனிக்கு குறைந்தபட்ச தண்டனையாக போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஞாயிறு அன்று எதிர்கொள்கிறது. புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றை நெருங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது அவ்வளவு எளிதில்லை.

Quick Links