கடந்த ஒன்றரை மாத காலமாக ரசிகர்களை குஷிப்படுத்திய இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளையோடு முடிவடையப்போகிறது. 2019-ஆம் ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கத்தோடு முன்னாள் சாம்பியன்கள் ‘மும்பை இந்தியன்ஸ்’ மற்றும் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிகள் நாளை ஹைதராபாதில் மல்லு கட்டுகின்றன.
இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகள் 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன இந்த 3 ஆட்டத்திலும் ‘மும்பை இந்தியன்ஸ்’ அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகளுக்கும் எதிரணியை பற்றிய பலம்-பலவீனம் நன்றாக தெரியும் என்பதால் இந்த இறுதிப் போட்டியில் வழக்கம் போல பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
‘ரோகித் சர்மா’ தலைமையிலான ‘மும்பை இந்தியன்ஸ்’ அணியில் சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக அந்த அணியின் மேட்ச் வின்னர்களாக திகழும் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் நாளைய இறுதிப் போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு மும்பை அணிக்கு மற்றுமொரு ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தரும் வேட்கையோடு உள்ளனர்.
அதே நேரம் ‘தோனி’ தலைமையிலான ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி இந்த முறையும் தனது அனுபவத்தில் கெத்து காட்டி வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் ‘டெல்லி கேப்பிட்டல்ஸ்’ அணியை எளிதாக வீழ்த்தி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அசத்தியிருக்கிறது தோனி படை. இந்த ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் நேருக்கு நேராக மோதிய 3 ஆட்டத்திலும் மும்பை அணியே வெற்றி பெற்றிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இறுதிப்போட்டியில் கடும் சவால் காத்திருக்கிறது என்பதே உண்மை.
போட்டி விவரம்.
நாள் : 12-05-2019
நேரம் : மாலை 07:30 மணி.
இடம் : ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்.
லீக் : இந்தியன் பிரீமியர் லீக்.
நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் நெட்வொர்க்.
ஆன்லைன் ஒளிபரப்பு : ஹாட் ஸ்டார்.
மைதான நிலவரம் (ஐபிஎல்)
மொத்த ஆட்டங்கள் - 69
முதலில் பேட் செய்த அணி வெற்றி - 32
முதலில் பந்து வீசி அணி வெற்றி - 35
சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் - 163
சராசரி 2-வது இன்னிங்ஸ் ஸ்கோர் - 149
அதிகபட்ச ஸ்கோர் - 231/4 (20) by DC vs KXIP
குறைந்தபட்ச ஸ்கோர் - 60/10 (13.4) by DC vs MI
அதிகபட்ச சேசிங் ஸ்கோர் : 214/3 (17.3) by DC vs GL
குறைந்தபட்ச டிபென்டிங் ஸ்கோர் : 118/4 (18) by DC vs KXIP
நேருக்கு நேர் சாதனைகள்.
மொத்த ஆட்டங்கள் - 29
CSK - 12
MI - 17
அணி விபரம்.
மும்பை இந்தியன்ஸ்.
மைதான நிலவரத்தைப் பொறுத்து கடந்த போட்டியில் விளையாடிய ‘ஜெயந்த் யாதவ்’க்கு பதிலாக ‘மிட்செல் மெக்லானிகன்’ அணியில் இடம் பெறலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்.
கடந்த போட்டியில் சொதப்பிய வேகப்பந்து வீச்சாளர் ‘ஷத்ரூல் தாகூர்’க்கு பதிலாக முரளி விஜய் அல்லது துருவ் ஷோரே ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம் பிடிக்கலாம்.
நட்சத்திர வீரர்கள்.
மும்பை இந்தியன்ஸ்.
- ரோகித் சர்மா
- ஹர்திக் பாண்டியா
- லசித் மலிங்கா
சென்னை சூப்பர் கிங்ஸ்.
- ஷேன் வாட்சன்
- எம்.எஸ் தோனி
- இம்ரான் தாஹீர்
உத்தேச XI விவரம்.
மும்பை இந்தியன்ஸ்.
ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டீ காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கரென் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, மிட்செல் மெக்லானிகன் / ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், லசித் மலிங்கா, ஜஸ்பிரிட் பும்ரா.
சென்னை சூப்பர் கிங்ஸ்.
எம்.எஸ் தோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், ஃபாப் டூ பிளிசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, முரளி விஜய் / துருவ் ஷோரே, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.