Create
Notifications
Favorites Edit
Advertisement

அணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்

SENIOR ANALYST
முதல் 5 /முதல் 10
Published 19 Aug 2019, 18:50 IST
19 Aug 2019, 18:50 IST

CSK must target these players in the trade window
CSK must target these players in the trade window

இந்திய பிரீமியர் லீக் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், சூதாட்ட பிரச்சனையில் சிக்கி 2 ஆண்டுகள் தடைக்குள்ளானது. அதற்கு பின்னர், கடந்தாண்டு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்று எதிர்பார்க்க முடியாத திருப்பத்தை அளித்திருந்தது, சென்னை அணி. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், துரதிஸ்டவசமாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது.

கடந்த இரு ஆண்டுகளாக சிறப்பான சாதனையை செய்து வரும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று உள்ளது. எனவே, அடுத்த ஆண்டிலாவது நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், அதற்கு முன்னர் அணியில் சில மாற்றங்களை செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அணி வீரர்களை ஏல முறையில் தேர்ந்தெடுக்கும் முறை கையால்பட்டு வருகிறது. ஆனால், இப்பொழுது அதற்கு முன்பாக அணி மாற்றம் எனும் புதிய வடிவம் அரங்கேறி வருகிறது.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கூட மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இருவர் அணி மாற்றம் செய்யப்பட்டதை நாம் அறிந்த ஒன்றே. மேலும், அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் அணிமாற்றம் செய்யப்பட்ட முதல் செயலாகவும் இது அமைந்தது. அதுபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சில வீரர்களை தமது அணியிலிருந்து விடுவித்து அவர்களுக்குப் பதிலாக மாற்று அணியிலிருந்து புதிதாக வீரர்களை இணைக்க முயற்சிக்கும். எனவே, அவ்வாறு ஏலம் நடைபெறும் முன்பாகவே சென்னை நிர்வாகம் அணிமாற்றம் மூலம் புதிதாக இணைக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.

#3.ஈஷ் சோதி:

Ish Sodhi currently plays for the Rajasthan Royals
Ish Sodhi currently plays for the Rajasthan Royals

அடுத்த சீசனில் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு தரப்பில் சில பிரச்சினைகளை சந்திக்க கூடும். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியில் இடம்பெற்று வரும் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான உலக கோப்பை தொடர் உடன் ஓய்வுபெற்ற இம்ரான் தாஹிர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஆர்வம் காட்டாத ஹர்பஜன் சிங் ஆகியோரை அணியில் தொடர்ந்து நீடிப்பது நல்ல காரியம் அல்ல. இவர்களுக்கு மாற்றாக ரவிந்திர ஜடேஜா, மிட்செல் சென்டர் ஆகியோரை சுழற்பந்து வீச்சை தரப்பில் எம்.எஸ்.தோனி அணியில் இணைப்பார்.. நிச்சயமாக ஆடும் லெவனில் ஜடேஜா இணைக்கப்பட்டிருந்தால் சாண்ட்னர் இடம் பெறுவது சற்று கடினம் தான்.

சமீப காலங்களில் தட்டுத் தடுமாறி வரும் கரண் சர்மா, அடுத்த ஆண்டு சென்னை அணியில் இருப்பதே சந்தேகம்தான். தற்போது சிறந்த ஒரு டி20 பவுலராக உருவெடுத்திருக்கும் ஈஷ் சோதி ஆட்டத்தின் தொடக்கம் மற்றும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வந்துள்ளார். ஓரளவுக்கு அனுபவம் கொண்டுள்ள இவர், இம்ரான் டாஹிருக்கு மிகச்சிறந்த மாற்றாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே ஸ்ரேயாஸ் கோபால் போன்ற லெக் ஸ்பின்னர் உள்ளமையால் சோதியை விடுவிக்கப்படுவதற்கு போதிய காரணங்கள் உள்ளன. அவ்வாறு நிகழ்ந்தால், சென்னை அணி இவரைத் தன் முதல் ஆளாக குறிவைக்கும்.

1 / 3 NEXT
Modified 21 Dec 2019, 00:12 IST
Advertisement
Advertisement
Fetching more content...