இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்!!!

David Miller has been exceptional for Kings XI Punjab
David Miller has been exceptional for Kings XI Punjab

ஐபிஎல் தொடர்ந்து வெற்றிகரமாக 11 சீசன்களை கடந்துள்ளது. இந்தமுறை 12வது சீசனும் விரைவில் அடுத்தாண்டு துவங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக மும்பை அணி தங்களது அணியின் சுழற்பந்து வீச்சாளரான மயங்க் மார்கண்டேவை டெல்லி அணிக்கு பரிமாற்றம் செய்து அவருக்கு பதிலாக அந்த அணியின் ஆல்ரவுண்டரான ரூதர்போர்டை தங்களது அணிக்கு தேர்வு செய்தது. இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் சர்ச்சையாக பேசப்பட்டது. மார்கண்டே கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை அணியில் ஜொலித்துவரும் இளம் வீரர். இவரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் விரைவில் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். இவருக்கு பதிலாக ரூதர்போர்டை அந்த அணி தேர்வு செய்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் இவரின் இடத்தை நிரப்ப சிறந்த பந்துவீச்சாளரை இந்தாண்டு ஏலத்தில் மும்பை அணி தேர்வு செய்யும் என ரசிகர்கள் நம்பினர்.

மும்பை அணிக்கு வீரர்களை பரிமாற்றம் செய்வது என்பது புதிதல்ல. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டீ காக்-ஐ பெங்களூர் அணியில் இருந்து தங்களது அணிக்கு பரிமாற்றம் செய்தது. அதேபோல அதற்க்கு முந்தைய ஆண்டும் ஜெயந்த் யாதவை தங்களது அணிக்கு பரிமாற்றம் செய்தது. 2020-ல் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான தங்களது அணியில் மும்பை அணி ஏற்கெனவே யுவராஜ் மற்றும் மார்கண்டே என தங்களது முக்கிய வீரர்களை இழந்துவிட்டது. எனவே அந்த இடத்தினை நிரப்ப சிறந்த வீரர்களை மற்ற அணிகளிலிருந்து மும்பை அணி பரிமாற்றம் செய்யும் என கருதப்படுகிறது. அந்தவகையில் மும்பை அணி பரிமாற்றத்தின் மூலம் தங்களது அணிக்கு தேர்வு செய்யவிருக்கும் வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

#3) ஷபாஸ் நதீம்

Shahbaz Nadeem
Shahbaz Nadeem

மயங்க் மார்கண்டே அணியிலிருந்து சென்று விட்டதால் மும்பை அணியில் சுழற்பந்து வீச்சாளர் இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தில சிறந்த பந்துவீச்சாளரை நிரப்பவே அந்த அணி முடிவு செய்யும். அந்த இடத்திற்கு பொருத்தமான வீரராக கருதப்படுபவர் ஷபாஷ் நதீம் தான். 30 வயதான இவர் இதுவரை பல ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆரம்ப காலங்களில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த இவரை கடந்தாண்டு ஷிகர் தவானுக்கு மாற்று வீரர்களில் ஒருவராக சன்ரைசர்ஸ் அணிக்கு அனுப்பியது டெல்லி. ஆனால் இவருக்கு அந்த அணியில் சரியான இடம் கிடைக்கவில்லை. அந்த காலகட்டத்தில் இவர் முதல்தர போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஒரே வீரர் என்ற புதிய சாதனையை படைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இருந்தாலும் கடந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இவர் வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி ஏமாற்றம் அளித்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி இவரை மும்பை அணிக்கு பரிமாற்றம் செய்ய எந்தவித தயக்கமும் காட்டாது. இவர் மும்பை அணியில் இணையும் பட்சத்தில் மும்பை அணியின் பந்துவீச்சு கூடுதல் பலம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#2) ஷிவம் டுபே

Shivam Dube
Shivam Dube

இளம் ஆல்ரவுண்டரான இவர் பெரிய ஷாட்களை அடித்து சிஸ்சர்களை பறக்கவிடும் வல்லமை பெற்றவர். சமீபத்தில் இவர் அனுபவம் வாய்ந்த பிரவீன் தாம்பே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிஸ்சர்கள் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தார். அதுமட்டுமல்லாமல் கடந்தாண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முந்தைய நாளில் நடைபெற்ற ரஞ்சி தொடரிலும் இதே போல சாதனையை நிகழ்த்த இவரை பெங்களூர் அணி 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் அந்த தொடரில் இவர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் இவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. 4 போட்டிகளில் களமிறங்கிய இவர் வெறும் 40 ரன்கள் மட்டுமே குவித்தார். அதுமட்டுமின்றி இவரின் பந்து வீச்சின் மூலம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த தொடரில் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக பந்து வீசினார். எனவே பெங்களூர் அணி வெளியேற்ற நினைக்கும் இவரை மும்பை அணி பரிமாற்றத்தில் குறி வைக்கலாம்.

#1) டேவிட் மில்லர்

David Miller
David Miller

மும்பை இந்தியன்ஸ் அணியானது எப்போதும் மிகவும் அதிரடியாக ஆடக்கூடிய அபாயகரமான வீரர்களையே தங்களது பேட்டிங் வரிசையில் கொண்டிருக்கும். ரோஹித் சர்மா, ஹார்டிக் பாண்டியா மற்றும் பொலார்டு போல பல வீரர்களையே மும்பை அணி விரும்புகிறது. அதற்கேற்ப அதிரடியாக ஆடும் வல்லமை பெற்றவர் மில்லர். இவரின் அதிரடி பேட்டிங் திறனானது அந்த அணியின் மிடில் ஆர்டர் பலத்தை உயர்த்தலாம். பஞ்சாப் அணியில் இவரின் தாக்கம் பெரிதாக இல்லை. எனவே இவரை மும்பை அணி பரிமாற்றம் மூலம் தேர்வு செய்வதால் தங்களுக்கு உதவும் வகையில் மாற்றலாம்.

Quick Links