#2) ஷிவம் டுபே
இளம் ஆல்ரவுண்டரான இவர் பெரிய ஷாட்களை அடித்து சிஸ்சர்களை பறக்கவிடும் வல்லமை பெற்றவர். சமீபத்தில் இவர் அனுபவம் வாய்ந்த பிரவீன் தாம்பே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிஸ்சர்கள் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தார். அதுமட்டுமல்லாமல் கடந்தாண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முந்தைய நாளில் நடைபெற்ற ரஞ்சி தொடரிலும் இதே போல சாதனையை நிகழ்த்த இவரை பெங்களூர் அணி 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் அந்த தொடரில் இவர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் இவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. 4 போட்டிகளில் களமிறங்கிய இவர் வெறும் 40 ரன்கள் மட்டுமே குவித்தார். அதுமட்டுமின்றி இவரின் பந்து வீச்சின் மூலம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த தொடரில் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக பந்து வீசினார். எனவே பெங்களூர் அணி வெளியேற்ற நினைக்கும் இவரை மும்பை அணி பரிமாற்றத்தில் குறி வைக்கலாம்.
#1) டேவிட் மில்லர்
மும்பை இந்தியன்ஸ் அணியானது எப்போதும் மிகவும் அதிரடியாக ஆடக்கூடிய அபாயகரமான வீரர்களையே தங்களது பேட்டிங் வரிசையில் கொண்டிருக்கும். ரோஹித் சர்மா, ஹார்டிக் பாண்டியா மற்றும் பொலார்டு போல பல வீரர்களையே மும்பை அணி விரும்புகிறது. அதற்கேற்ப அதிரடியாக ஆடும் வல்லமை பெற்றவர் மில்லர். இவரின் அதிரடி பேட்டிங் திறனானது அந்த அணியின் மிடில் ஆர்டர் பலத்தை உயர்த்தலாம். பஞ்சாப் அணியில் இவரின் தாக்கம் பெரிதாக இல்லை. எனவே இவரை மும்பை அணி பரிமாற்றம் மூலம் தேர்வு செய்வதால் தங்களுக்கு உதவும் வகையில் மாற்றலாம்.