ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் துவங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த தெடர் 12 சீசன்களை கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பை நான்கு மற்றும் சென்னை அணி மூன்று முறை கோப்பைகளை கைப்பற்றியுள்ளன. இதில் கோப்பைகளை வெல்லா விட்டாலும் ரசிகர்களின் மனதை கெள்ளையடிக்கும் அணியாக கருதப்படுவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான். இந்த அணியானது இதுவரை இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் அந்த இரண்டு முறையும் அவர்களுக்கு மிஞ்சியது வெறும் ஏமாற்றமே. இருந்தாலும் ரசிகர்கள் ஒருபோதும்அந்த அணியை விட்டுக்கொடுப்பதில்லை. விராத்கோலி, ஏபி டிவில்லியர்ஸ் என தலைசிறந்த வீரர்கள் இருந்தாலும் இந்த அணி முக்கியமான போட்டிகளில் சொதப்பி விடுகிறது. இதனை தவிர்க்க தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் வீரர்கள் பறிமாற்றத்தில் சில முக்கிய வீரர்களை தேர்வு செய்யலாம். அப்படி அந்த அணி தேர்வு.செய்யவிருக்கும் மூன்று முக்கிய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1) மொய்ஷிஸ் ஹென்ட்ரிகியுஸ்
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஹென்ட்ரிகியுஸ் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் காயம் இவரின் ஐபிஎல் கனவை பாழாக்கியது. ஆஸ்திரேலிய அணிக்காக சில போட்டிகள் பங்கேற்றுள்ள இவர் கடந்த. ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அந்த தொடரில் இவருக்கு ஏற்பட்ட காயம் இவரை ஒரு போட்டி கூட விளையாட முடியாத நிலைக்கு தள்ளியது. அதில் ஒரே ஒரு போட்டியில் இவர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதில் ஏற்பட்ட காயம் இவரை களமிறங்க விடாமல் தடுத்தது. பஞ்சாப் அணியானது ஏற்கனவே கெயில், சாம் குர்ரான், நிக்கோலஸ் பூரான், டேவிட் மில்லர், ஆண்ட்ரியு டை மற்றும் விஜிலிஜோன் என சிறந்த வெளிநாட்டு வீரர்களை கொண்டுள்ளது. எனவே இவரின் சேவை அந்த அணிக்கு தேவையில்லாததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பஞ்சாப் அணி வெளியேற்ற நினைக்கும் இவரை வீரர்கள் பறிமாற்றத்தில் பெங்களூர் அணி தேர்வு செய்யலாம். தற்போது அந்த அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார். அந்த இடத்திற்கு இவர் பொருத்தமானவர். மேலும் ப்ரஷர் நேரங்களில் நிலையாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களும் பெங்களூர் அணிக்கு தேவைப்படுகின்றனர். இந்த வெற்றிடத்தையும் இவர் நிரப்புவார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி ஷிவம் துபே மற்றும் கோலின் டீ க்ரான்ட்ஹோம் என இரண்டு ஆல்ரவுண்டர்களை எடுத்தது. ஆனால் இவர்கள் இருவரும் அணிக்கு எதுவும் பெரிதாக செய்யவில்லை. அதிலும் 4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட துபே வெறும் 4 போட்டிகள் மட்டுமே விளையாடினார். அதேபேல க்ரான்ட்ஹோம் வெறும் 4 போட்டிகளில் களமிறக்கப்பட்டார். அதில் இவர் 55 ரன்கள் மட்டுமே குவித்தார். பவுலிங்கிலும் செதப்பியே வந்தார் இவர். இவரின் எகானமி 11. எனவே இவர்களுக்கு பதிலாக ஹென்ட்ரிகியுஸை பெங்களூர் அணி நிர்வாகம் பயன்படுத்தி பார்க்கலாம்.
#2) சந்தீப் வாரியர்
உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து கலக்கி வருபவர் சந்தீப் வாரியர். இவர்,ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு ஏலத்தில் பெங்களூர் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 2015 வரை இவர் தொடர்ந்து இந்த அணிக்காக விளையாடி வந்தார். இறுதியில் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதில் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடிய இவர் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். கொல்கத்தா அணி சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தவித்தது வருகிறது. அதில் அணியில் இவரது தாக்கம் பெரிதாக இல்லை. எனவே நிச்சயம் அடுத்த ஏலத்தில் இவரை தங்களது அணியிலிருந்து விடுவிக்கும் அணி நிர்வாகம். எனவே இவரை பெங்களூர் அணி தங்களது அணிக்காக தேர்வு செய்து பயன்படுத்தலாம். கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் உமேஷ் யாதவ் மற்றும் டிம் சவுதி போன்ற வீரர்களே பெங்களூர் அணிக்காக சொதப்பினர். அந்த இடத்தில் இளம் வீரரான இவரை உபயோகிக்கலாம்.
#1) ஹனுமா விஹாரி
இந்தியாவின் டெஸ்ட் அணியில் கலக்கி வரும் இவர் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் இணைவது மூலம் அந்த அணியின் மிடில் ஆர்டர் மூலம் வலுப்பெறும். இவர் பெரிய அதிரடி வீரராக இல்லாவிட்டாலும் மிடில் ஓவர்களில் சிறப்பாக நிலைத்து ஆடக்கூடியவர். இவரை டெல்லி அணி பினிஷராக களமிறக்கி பார்த்தது. ஆனால் அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. எனவே இவரை பறிமாற்றம் செய்ய அந்த அணி தயங்காது. இவரை பறிமாற்றத்தின் மூலம் தேர்வு செய்வதால் பெங்களூர் அணியானது சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனைக் கொண்டிருக்கும்.