"டெல்லி டேர்டெவில்ஸ்" என்று அழைக்கப்பட்டு வந்த தற்போதைய டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை எந்தவொரு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது இல்லை. இந்த அணியில் பல்வேறு உலகத்தரமான வீரர்களான விரேந்தர் சேவாக், கம்பீர் , தில்சன், டிவில்லியர்ஸ், வெட்டோரி, மெக்ராத் போன்றோர் முதல் இரு ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ளனர். மேற்குறிப்பிட்டுள்ள வீரர்களை உள்ளடக்கிய டெல்லி அணி முதல் இரு ஐபிஎல் தொடர்களில் அரையிறுதி வரை முன்னேறி, அதன்பின்னர் சொதப்பியது. முதலாவது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்த அணி தோல்வியுற்றது. பின்னர், அடுத்த ஆண்டு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் போராடி தோல்வியுற்றது.
பின்னர், இந்த அணி நிர்வாகம் மேற்கண்ட வீரர்களில் பலரை நீக்கியும் ஒரு புதிய அணியை உருவாக்கியும் அவ்வப்போது மாற்றங்களை கொண்டு வந்தது. இதனால் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது, டெல்லி அணி. ஆனால், அதே சுற்றில் கொல்கத்தா அணி இடமும் சென்னை அணியின் இடமும் அடிமேல் அடி வாங்கி நாக்-அவுட் சுற்றில் இருந்து வெளியேறியது. ஆகவே வீரர்களை அடிக்கடி மாற்றி வந்த டெல்லி அணியில் ரசல், ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், கெவின் பீட்டர்சன், ராஸ் டெய்லர் போன்ற அற்புதமான பல வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அவ்வாறு, பெரிதும் அறிந்திராத 5 சிறந்த டெல்லி அணியின் வீரர்களை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
#1.ஆல்பி மோர்கல்:
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று ஒரு சிறந்த பெயரை சம்பாதித்த சர்வதேசப் வீரர்களில் ஒருவர், ஆல்பி மோர்கல். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரு முறை ஐபிஎல் பட்டத்தை வெல்ல காரணமாகவும் இவர் அமைந்தார். ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் சென்னை அணியில் தொடர்ந்து இடம்பெற்று 2014ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பின்னர், அடுத்த ஆண்டு டெல்லி அணிக்காக 30 இலட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆனார். அந்த தொடரில் 3 போட்டிகளில் களமிறங்கி பேட்டிங்கில் வெறும் 13 ரன்களை மட்டுமே குவித்தார். மேலும், பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இவரால் கைப்பற்றப்பட்டது. 2014ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு சில போட்டிகளில் களமிறங்கி விளையாடினார்.
#2.பவுல் கோலிங்வுட்:
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்று வந்தனர். இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கோலிங்வுட், டெல்லி அணிக்காக 2,75,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் ஆனார். அந்த இரண்டாவது சீசனில் தில்சன், டிவில்லியர்ஸ், டேவிட் வார்னர் போன்ற சிறந்த வீரர்கள் அணியில் நல்ல பார்மில் இருந்ததால் இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் தனது முதலாவது ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். மேலும், வெறும் 7 போட்டிகளில் மட்டுமே இவருக்கு களமிறங்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. பேட்டிங்கில் 203 ரன்களை 40.6 என்ற சராசரியுடணும் பவுலிங்கில் 5 விக்கெட்களை கைப்பற்றி 6.8 என்ற எக்கனாமிக்குடணும் சிறந்து விளங்கினார். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 75 ரன்கள் குவித்தது இவரது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் ஆகும். இந்த தொடரின் மூலம் தனது சிறப்பான ஆல்ரவுண்ட் பங்களிப்பை டெல்லி அணிக்கு அளித்தார்.
மூன்றாவது ஐபிஎல் சீசனில் முதல் 5 ஆட்டங்களில் நான்கில் தோல்வியுற்றதால் புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது, டெல்லி. பின்னர், அடுத்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2,50,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2011 உலக கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இவர் அந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை.
#2.அஜித் அகர்கர்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இடம் பெற்றார் வேகப்பந்துவீச்சாளர், அஜித் அகர்கர். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 2,10,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் ஆனார். அந்த தொடரில் 7 போட்டிகளில் களமிறங்கி 8 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், அந்த சீசனில் டெல்லி அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். 2011ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி அணி 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இளம் பந்து வீச்சாளர்களான வருண் ஆரோன், உமேஷ் யாதவ் மற்றும் இர்பான் பதான் போன்றோர் அணியில் இடம் பெற்றதால் அஜித் அகர்கர் அடுத்த ஆண்டு நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் களம் இறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மேலும், 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே களமிறங்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் நான்கு போட்டிகளில் இவருக்கு விளையாட வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. எனினும், இவர் ஒரு விக்கெட்டை கூட அந்த நான்கு போட்டிகளில் கைப்பற்றவில்லை. வழக்கம் போல் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அதே ஆண்டு அஜித் அகர்கர் அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.