#2.அஜித் அகர்கர்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இடம் பெற்றார் வேகப்பந்துவீச்சாளர், அஜித் அகர்கர். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 2,10,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் ஆனார். அந்த தொடரில் 7 போட்டிகளில் களமிறங்கி 8 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், அந்த சீசனில் டெல்லி அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். 2011ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி அணி 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இளம் பந்து வீச்சாளர்களான வருண் ஆரோன், உமேஷ் யாதவ் மற்றும் இர்பான் பதான் போன்றோர் அணியில் இடம் பெற்றதால் அஜித் அகர்கர் அடுத்த ஆண்டு நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் களம் இறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மேலும், 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே களமிறங்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் நான்கு போட்டிகளில் இவருக்கு விளையாட வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. எனினும், இவர் ஒரு விக்கெட்டை கூட அந்த நான்கு போட்டிகளில் கைப்பற்றவில்லை. வழக்கம் போல் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அதே ஆண்டு அஜித் அகர்கர் அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.