கேப்டன் கூல் தலைமையிலான சென்னை அணி ஐ.பி.எல். வரலாற்றில் 8 வது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் தோனி கேப்டன்சீயை பாராட்டி வருவதற்கு இது ஒன்றே போதும். இந்த ஐபிஎல் சீசனில் லீக் போட்டியில் இருமுறை டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை அணி. குவலிபையர் 2-ல் நம்பிக்கையுடன் சென்னை அணி டெல்லி அணியை எதிர்கொண்டது. சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார். ஏனெனில் சேசிங் செய்வது தோனிக்கு சுலபமான ஒன்று தான்.
ஐபிஎல் 2019-ஆம் ஆண்டு லீக் போட்டிகளில் டெல்லி அணியை இருமுறையும் வென்றது. இரண்டாவது முறை 80 ரன்கள் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது.
பேட்டிங் வரிசை தடுமாறியது:
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ஷா ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்க முடியவில்லை. முதல் இரண்டு ஓவர்கள் சிறப்பாக விளையாடிய இருவரும் 3 வது ஓவரில் ஷா வெளியேற சற்று தடுமாற்றம் கண்டது டெல்லி அணி. பவர் ப்ளே முடிவில் ஓரளவு ஸ்கோர் வந்திருந்தாலும் 2 விக்கெட்கள் வீழ்ந்தது பெரும் இழப்பாக டெல்லி அணிக்கு இருந்தது.
9 வது ஓவரில் முன்ரோ வெளியேற, 12 ஓவரில் கேப்டன் ஐயர் வெளியேற ஒட்டு மொத்த அணியின் சுமையும் ரிஷாப் பண்ட் மீது விழுந்தது. பின்னர் வந்த அக்சர் படேல், ரூதர்போர்டு, கீமோ பால் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற நல்ல இலக்கை நிர்ணயிக்க தடுமாறியது டெல்லி அணி.
ஒருபுறம் பண்ட் நிதானமாக அதிரடி கட்டினார். கடைசி இரண்டு ஓவரில் அதிரடி காட்டிய மிஸ்ரா, போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் ஓரளவு நல்ல ஸ்கோரை இலக்காக வைக்க உதவினர்.
பண்ட் மீது ஏற்ப்பட்ட சுமை:
டெல்லி அணியின் ஸ்கோர் 147. ஆனால் பண்ட் 19 வது ஓவரில் வெளியேறும் பொது 8 பந்துகள் மீதமிருந்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் நீண்ட நேரம் காலத்தில் இருக்காமல் போனது பெரிய இலக்கை நிர்ணயிக்க கடினமானது. பண்ட் கடைசி வரை களத்தில் இருந்திருந்தால் 160 ரன்கள் வந்திருக்கலாம். இக்கட்டான நிலையில் பண்ட் வெளியேறும் போது குறித்த இலக்கை அடைய முடியாமல் போனது.
கிறிஸ் மோரிஸ்க்கு பதில் கீமோ பால்:
இந்த முக்கிய போட்டியில் ஒட்டுமொத்த திருப்பு முனையாக அமைந்தது கீமோ பால் வீசிய முதல் இரண்டு ஓவர்கள் தான். கீமோ பால் வீசிய முதல் ஓவரில் 16 ரன்கள் கொடுத்தது சென்னை அணிக்கு உற்சாகத்தை ஏற்ப்படுத்தியது. இரண்டாவது ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் எடுத்தது சென்னை அணி. 12 ஓவர்கள் முடிவில் இலக்கை அடைய சற்று சுலமாக மாறியது.
கீமோ பால் வீசிய 3 ஓவரில் 49 ரன்கள், எகானமி ரேட் 16.33. மற்ற பவுலர்கள் ஓரளவு சிறப்பாக வீசிய நிலையில் கீமோ பால் பவுலிங் டெல்லி அணிக்கு ஏமாற்றத்தை தந்தது.
எழுத்து- கௌரி சந்திரா
மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்