ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அனைவரின் விருப்ப அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சின்னசாமி மைதானத்தில் நேற்று மோதின.
பெங்களூரு அணி டாஸ் வென்று வழக்கம் போல பௌலிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிகாக் மற்றும் ரோகித் சர்மா அதிரடி தொடக்கத்தை மும்பை இந்தியன்ஸிற்கு அளித்தனர்.
யுவராஜ் சிங் அதிரடி சிக்ஸர்களை விளாசி 12 பந்துகளில் 23 ரன்களை விளாசினார். சூர்ய குமார் யாதவ் ஒரு சிறப்பான இன்னிங்க்ஸை ஆடி வந்தார். யுஜ்வேந்திர சகால் தனது லெக் ஸ்பின்னால் மும்பை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அதிக நேரம் களத்தில் நிற்கவிடவில்லை. இவர் மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது பேட்ஸ்மேன்களை ஒவ்வொருவராக இழந்து வர, ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 187 என்ற ரன்களை பெங்களூரு அணிக்கு இலக்காக நிர்ணயித்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக பார்திவ் படேல் மற்றும் நம்பர்-3ல் களமிறங்கிய விராட் கோலி இனைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர் பிளேவில் 60 ரன்களை விளாசினர்.
விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இனைந்து இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, பெங்களூரு அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜாஸ்பிரிட் பூம்ரா 14வது ஓவரில் விராட் கோலி-யின் விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் பூம்ரா தனது அனல் வேக பந்துவீச்சை ஏபி டிவில்லியர்ஸிடமும் காட்டினார். பூம்ரா வீசிய கடைசி 2ஓவரில் 5 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 2 தேவையான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பெங்களூரு அணி இந்த போட்டியை டிரா செய்ய கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே வந்தது. மலிங்கா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தை கிரீஸிற்கு வெளியே கால் வைத்து வீசினார். இது நோ-பால் ஆக வாய்ப்புள்ளது. ஆனால் கள நடுவர் அதை கவனிக்கவில்லை. இது இந்த போட்டியில் செய்த மிகப் பெரிய தவறாகும்.
பெங்களூரு அணி 2019 ஐபிஎல் தொடரில் 2வது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. நாம் இங்கு இந்த போட்டியில் பெங்களூரு அணி செய்த 3 தவறுகளை பற்றி காண்போம்.
#1 பெங்களூரு அணியின் மோசமான அணித்தேர்வு
பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கியது. பந்துவீச்சில் மிகவும் மோசமான அணியாக பெங்களூரு உள்ளது. அந்த அணியில் டெத் ஓவரில் பந்துவீச ஒரேயொரு வீரர் மட்டுமே உள்ளார்.
காலின் டி கிரான்ட் ஹாம்ற்கு பதிலாக நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி-யை தேர்வு செய்திருக்கலாம். அத்துடன் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை அணியில் தேர்வு செய்து அவரது சுழற்பந்து வீச்சை பயன்படுத்தி இருக்கலாம். அத்துடன் அவரது சிறப்பான பேட்டிங் பெங்களூரு அணிக்கு பெரிதும் உதவியிருக்கும்.
சகாலின் சுழற்பந்திற்கு பெங்களூரு மைதானம் உதவியாதால், சுந்தரும் பந்துவீசியிருந்தால் இவரது சுழற்பந்திற்கும் உதவியிருக்கும்.
எக்ஸ்ட்ரா சுழற்பந்து வீச்சாளர் என யாரும் இன்றி களமிறங்கியதனால் பெங்களூரு அணியால் கடைநிலை ஓவரில் மும்பை அணியின் பேட்டிங்கை கட்டுபடுத்த முடியவில்லை.
#2 மிடில் ஆர்டரை கட்டுபடுத்திய பெங்களூரு, கடைநிலை பேட்டிங்கை கட்டுபடுத்த தவறியது
மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பெரிய ரன் இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சகால் அதனை முற்றிலுமாக தனது பந்துவீச்சை கொண்டு மாற்றினார். சகால் மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பொல்லார்ட், சூர்ய குமார் யாதவ், க்ருனால் பாண்டியா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 17 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
பெங்களூரு அணி ஆரம்ப மற்றும் மிடில் ஓவரில் மும்பை அணியை கட்டுபடுத்தியது. ஆனால் டெத் ஓவரில் கட்டுபடுத்த தவறிவிட்டது. இவர் டெத் ஓவரில் பெங்களூரு அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் ஓவரிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசித் தள்ளினார். டெத் ஓவரில் பெங்களூரு அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமடைந்து ரன்கள் வாரி இறைக்கப்பட்டது.
விராட் கோலி ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு தங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்த முறை கண்டிப்பாக கட்டுபடுத்துவார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
#3 பூம்ரா பந்துவீச்சை கணிக்கத் தவறிய விராட் கோலி
இப்போட்டியில் ஒரு சிறந்த நிகழ்வு ஒன்று நடந்தது. உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் உலகின் நம்பர் 1 பௌலர் பூம்ரா ஆகியோருக்கு இடையேயான பேட்டிங் மற்றும் பௌலிங் தான் அந்த நிகழ்வு.
பூம்ராவின் முதல் ஓவரில் விராட் கோலி 3 தொடர் பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். பின்னர் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடிக் கொண்டிருந்த போது ரோகித் சர்மா 14வது ஓவரை பூம்ராவிற்கு அளித்தார். பூம்ரா பந்துவீச வந்ததும், விராட் கோலி அதிரடியை வெளிபடுத்தவார என அனைவரும் நினைத்திருந்தனர்.
விராட் கோலி தேவையில்லாத ஒரு ஃபுல் ஷாட்டை மைதானத்தின் பக்கவாட்டு திசையில் விளாச அந்த பந்து ஃபீல்டரிடம் கேட்ச் ஆனது. இதன் மூலம் ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. அத்துடன் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு டிவில்லியர்ஸ் மீது இறங்கியது.
ஆனால் டிவில்லியர்ஸ் தன் சிறப்பான இன்னிங்ஸை பெங்களூரு அணிக்கு அளித்தும் அவரால் வெற்றிபாதைக்கு பெங்களூரு அணியை அழைத்துச் செல்ல இயலவில்லை