#2 மிடில் ஆர்டரை கட்டுபடுத்திய பெங்களூரு, கடைநிலை பேட்டிங்கை கட்டுபடுத்த தவறியது
மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பெரிய ரன் இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சகால் அதனை முற்றிலுமாக தனது பந்துவீச்சை கொண்டு மாற்றினார். சகால் மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பொல்லார்ட், சூர்ய குமார் யாதவ், க்ருனால் பாண்டியா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 17 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
பெங்களூரு அணி ஆரம்ப மற்றும் மிடில் ஓவரில் மும்பை அணியை கட்டுபடுத்தியது. ஆனால் டெத் ஓவரில் கட்டுபடுத்த தவறிவிட்டது. இவர் டெத் ஓவரில் பெங்களூரு அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் ஓவரிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசித் தள்ளினார். டெத் ஓவரில் பெங்களூரு அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமடைந்து ரன்கள் வாரி இறைக்கப்பட்டது.
விராட் கோலி ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு தங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்த முறை கண்டிப்பாக கட்டுபடுத்துவார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
#3 பூம்ரா பந்துவீச்சை கணிக்கத் தவறிய விராட் கோலி
இப்போட்டியில் ஒரு சிறந்த நிகழ்வு ஒன்று நடந்தது. உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் உலகின் நம்பர் 1 பௌலர் பூம்ரா ஆகியோருக்கு இடையேயான பேட்டிங் மற்றும் பௌலிங் தான் அந்த நிகழ்வு.
பூம்ராவின் முதல் ஓவரில் விராட் கோலி 3 தொடர் பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். பின்னர் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடிக் கொண்டிருந்த போது ரோகித் சர்மா 14வது ஓவரை பூம்ராவிற்கு அளித்தார். பூம்ரா பந்துவீச வந்ததும், விராட் கோலி அதிரடியை வெளிபடுத்தவார என அனைவரும் நினைத்திருந்தனர்.
விராட் கோலி தேவையில்லாத ஒரு ஃபுல் ஷாட்டை மைதானத்தின் பக்கவாட்டு திசையில் விளாச அந்த பந்து ஃபீல்டரிடம் கேட்ச் ஆனது. இதன் மூலம் ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. அத்துடன் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு டிவில்லியர்ஸ் மீது இறங்கியது.
ஆனால் டிவில்லியர்ஸ் தன் சிறப்பான இன்னிங்ஸை பெங்களூரு அணிக்கு அளித்தும் அவரால் வெற்றிபாதைக்கு பெங்களூரு அணியை அழைத்துச் செல்ல இயலவில்லை