ஐபிஎல் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ள 3 குறைவாக மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்கள்
ஐபிஎல் அணிகள் 2020 ஐபிஎல் தொடருக்காக தங்களது அணியில் புது புது மாற்றங்களை ஏலத்திற்கு முன்னதாகவே நிகழ்த்த தொடங்கிவிட்டன. அணியில் உள்ள குறைகளை ஆராய்ந்தும், அணியின் தேவைக்கேற்ற வீரர்களை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் தேடும் முயற்சியிலும் இறங்கியுள்ளன. இவ்வருடத்தில் நடந்த உள்ளூர் மற்றும் சர்வதேச தொடர்களில் அசத்திய வீரர்களை பெரும்பாலும் ஐபிஎல் அணிகள் குறிவைக்கும்.
கடந்த காலங்களில் சிறந்த திறமையிருந்தும் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஒப்பந்தத்திற்கு தேர்வாக தவறிவிட்டனர். இதற்கு காரணம் அந்த சமயத்தில் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களும் கூட இருக்கலாம்.
இந்திய ஆடுகளத்தின் தன்மை இயல்பாகவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தை ஏற்படுத்தி தருவதாகும். அனைத்து அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நிறைய புதுமுக சுழற்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் ஐபிஎல் ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஒப்பந்தத்தொகை கூடியது.
நாம் இங்கு 2020 ஐபிஎல் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ள 3 குறைவாக மதிப்பிடப்பட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி காண்போம். மேலும் அவர்கள் எந்த ஐபிஎல் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றியும் காண்போம்.
#3 கிறிஸ் கிரின்
கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் ஆஸ்திரேலியாவின் பிக்பேஸ் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை கவனித்து வந்தால் "கிறிஸ் தன்டர்ஸ்" பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தனது அனல் பறக்கும் ஆஃப் ஸ்பின் மூலம் எதிரணியை கலங்கச் செய்தவர் கிறிஸ் கிரின். இவர் இங்கிலாந்தின் "விட்டாலிட்டி பிளாஸ்ட்", மேற்கிந்தியத் தீவுகளின் "கரேபியன் பீரிமியர் லீக்", பாகிஸ்தானின் "பாகிஸ்தான் சூப்பர் லீக்", கனடாவின் "குளோபல் டி20" போன்றவற்றில் பங்கேற்று வருகிறார்.
உலகெங்கும் நடைபெறும் பல டி20 தொடர்களில் பங்கேற்று சிறப்பான அனுபவத்தை தன்வசம் வைத்துள்ளார். பொதுவாக திறமையான ஆஃப்-ஸ்பின்னர்கள் தங்களின் பந்து வீச்சில் சிறிய மர்மத்தை வைத்து பௌலிங் மேற்கொள்வார்கள், முக்கியமாக நுட்பமான மாறுபாடுகள் மற்றும் சீரான வேகத்தில் பேட்ஸ்மேனை ஏமாற்றும் நூட்பங்களை கொண்டு விளங்குவர். 2015-16 பிக்பேஷ் லீக் தொடரில் கிறிஸ் கிரினின் எகானமி ரேட் பவர்பிளேவில் 6.39 ஆகும். அந்த சமயத்தில் இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டனர். ரஷீத்கான், சுனில் நரைன், ஆகியோரது வரிசையில் கிறிஸ் கிரின் இருந்தார். கிறிஸ் கிரினின் சிறப்பான பவர்பிளே பந்துவீச்சு, அற்புதமான ஃபீல்டிங் மற்றும் கடைநிலையில் சிறப்பான பேட்டிங் ஆகியன அவரை மிகச்சிறந்த டி20 வீரராக உருவெடுக்க உதவியது. எதிர்பாராத விதமாக 2019 ஐபிஎல் ஏலத்தில் கிறிஸ் கிரினை எந்த ஐபிஎல் அணிகளும் வாங்க முன்வரவில்லை. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்திய மைதானத்தில் கிறிஸ் கிரினின் பந்துவீச்சு சரியாக எடுபட அதிக வாய்ப்புள்ளது. எனவே ஐபிஎல் ஒப்பந்தம் பெற இவர் முழு தகுதி உடையவர்.
டெல்லி கேபிடல்ஸ் இளம் வீரர் கிறிஸ் கிரினை 2020 ஐபிஎல் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும். டர்பனில் பிறந்த இவர் கோட்லா மைதானத்தில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு தன்னை நிருபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.