மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகிறார் அஜின்க்யா ரகானே

Ajinkya Rahane Set to Take Back Captaincy Reins After Steve Smith Leaves
Ajinkya Rahane Set to Take Back Captaincy Reins After Steve Smith Leaves

ஸ்டிவன் ஸ்மித் ஆஸ்திரேலியா திரும்பி விட்டதன் காரணமாக அஜின்க்யா ரகானே மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் முதல் 8 போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார் அஜின்க்யா ரகானே. ஆனால் ரகானேவின் கேப்டன் ஷீப் சிறப்பாக இல்லாததால் ஸ்டிவன் ஸ்மித்திற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. ஸ்டிவன் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்ற பின் ராஜஸ்தான் ராயல்ஸ் சில வெற்றிகளை குவித்துள்ளது. அஜின்க்யா ரகானே கேப்டன் ஷீப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் வெற்றியும் அடைந்தது.

ஸ்டிவன் ஸ்மித் தலைமையில் ராஜஸ்தான் அணி 5 போட்டிகளில் களமிறங்கி 3ல் வெற்றியும் 1 போட்டியில் தோல்வியும் அடைந்தது. 1 போட்டி முடிவில்லை. ஸ்டிவன் ஸ்மித் அணியின் போக்கை சிறப்பாக மாற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சிறிது வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் 7 தோல்வியும், 5 வெற்றியும், 1 போட்டியில் முடிவில்லாமலும் இருந்து புள்ளி அட்டவனையில் 5வது இடத்தில் உள்ளது. 11 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி தனது கடைசி போட்டியில் டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது.

கிங்ஸ் XI பஞ்சாப், கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளின் ஆட்டத்தை பொறுத்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தான் தடைசி கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் 13 புள்ளிகளை பெறும். அதே நேரத்தில் பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுமெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பில்லை.

Rahane
Rahane

கேப்டன் பதவியிலிருந்து ரகானே நீக்கப்பட்ட பின் அவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ரகானே சதம் விளாசி அசத்தினார். ஜெய்தேவ் உனட்கட் அல்லது சஞ்சு சாம்சன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் கேப்டனாக செயல்பாடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அஜின்க்யா ரகானேவை மீண்டும் கேப்டனாக நியமித்துள்ளது. கடந்த வருட ஐபிஎல் தொடரில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு 4வது அணியாக தகுதி பெற்றது. இந்த நம்பிக்கையில் அணி நிர்வாகம் ரகானேவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என தெரிகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி ஒரு பெரிய வெற்றியை படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் அஜின்க்யா ரகானே 13 போட்டிகளில் பங்கேற்று 391 ரன்கள் எடுத்து 11வது இடத்தில் உள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மே 4 அன்று 2019 ஐபிஎல் தொடரில் தனது கடைசி லீக போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை பெரோஷா கோட்லா மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

Quick Links